December 11, 2009

போகிற போக்கிலே.......
தமிழுக்கு தமிழனே உயிராம் - அந்த
தமிழுக்கு தமிழனே தூக்கு கயிறாம்.

இந்த கவிதைவரிகளை புரிந்துக் கொள்வதற்கு தேவையில்லை பிரம ரகசியம்। சாதாரண பாமர மக்கள் கூட புரிந்திக்கொள்ளக் கூடிய ஒரு அருமையான அற்புதமான ஒரு கவிதை வரிகள்। இதிலே வருத்தபட வேண்டிய விடயம் என்னவென்றால் தமிழனை உயர்த்தியோ புகழ்ந்தோ எழுதப்பட்ட கவிதை வரி அல்ல. தமிழனின் வாழ்வு நிலையின் விளிம்பில் உள்ள குறைப்பாடுகளை சுட்டும் ஒரு கருத்தாழம்மிக்க உண்னதமான கவிதை படைப்பு, இன்றைய தமிழனின் இழிநிலை குணப் பண்புகளை கூறுப்போட்டுக் காட்டுவதற்கு இந்த கவிதையைவிட வேறு எதுவும் சிறப்பாக எனக்கு தோன்றவில்லை.

தமிழர்களின் ஞாயிறு என்று போற்றப்பட்ட பெரியார்.தமிழர்களின் குணப்பண்புகளை கடிந்து ஏசியும் பேசியும் தன் வாழ் நாளில் பெரும் பங்கை தமிழர் வாழ்வியலின் பாங்கை மற்றுவதற்கு முயன்ற அந்த தகைமையோன் தமிழனை பார்த்து இவர்கள் “காட்டுமிராண்டிகள்” என்று கூறு அளவுக்கு தமிழர்களின் இழி குணப்பண்புகூறுகள் மிகுந்திருந்தது.
சுயநலம் மிகுந்த சில தமிழர்களால் தமிழுக்கு கேடு என்றால் எவ்வளவு உண்மை என்று கேட்டும் தமிழர்கள் நம்மிடம் உண்டு। இன்று ஊடகங்களிலும் வலைப்பதிவிலும் பாரபரப்பான விடயம் என்னவென்றால் தமிழும் தமிழ் இலக்கியமும் இந்த நாட்டிலே இருக்குமா இல்லை இருக்கமுடியுமா என்ற கேள்விக் கணனைகளுடன் நடைப்பயில்கின்றன.

சில ஆண்டுகள் வரை மலேசியர்கள் அதிக மொழிகளை பயில்வதற்கு ஊக்குவிகப் பட்டார்கள்। நாடு உலகமய கொள்கையில் ஆட்ப்பட்டு மலேசியர்கள் உலக முன்றேன்றத்தில் பின் தங்கிவிடக்கூடாது என்ற காரணத்தால் மலேசியர்கள் பன்மொழி புலமை அவசியமான ஒன்றாக இருந்தது. திடிர் என்று யார் கண் பட்டதோ அல்லது யாரிடம் ஞானனோதயம் பெற்றார்களோ தெரியவில்லை. நமது மொழியை இருட்டடிப்பு செய்யும் வேலையில் இறங்கிவிட்டார்கள். தமிழ் மொழியும் தமிழ் இலக்கியமும் கணக்கில் எடுக்கப்படாது என்று சொல்லப்படுகிறது.

ஒரு மொழி கல்வி நிலைக்கு தேவை இல்லை என்னு நிலைக்கு உட்படுத்தப்டும் போது அப்பொழுதே அம்மொழி செத்த மொழியாகிவிடும்। தரங்கெட்ட சில மொழிகள் தேவையின் அடிப்படையில் உயர்ந்து நோக்கும் போது பல அறிவு பொக்கிஷங்களை தாங்கி நிற்கும் தமிழின் இழி நிலைக்கு யார் காரணம்?

தமிழர்களாகிய நாமே நமக்கு குழிவெட்டிக் கொள்கின்றோம்। தமிழின் அருமையை உணராமல் தமிழில் உள்ள அறிவு பொக்கிஷத்தின் பெருமை உணராமல் அதன் ஆழத்தை ஆராயாமல் நாம் மாக்களாக வாழ்கின்றோம். தமிழ் மொழியில் என்ன குறை? தமிழர்களாகிய நாம்தான் குறையுள்ளவர்களாக வாழ்கின்றோம். நாம் பணத்தலும் நல்ல பண்பாலும் நல்ல தொழில்முணைவர்களாகவும் படிப்பில் சிறந்தவர்களாக வாழ்ந்தால் தமிழும் உயரும். சாமணியர் என்ற ஒரு வலைப்பதிவாளார், நண்பர் தன் குழந்தை செல்வங்களுக்காக தன் கட்டிகாத்த அந்த தொழிலையே விட்டு விட்டு தன் பிள்ளைகளின் படிப்பிற்காக தரைவார்த்திருக்கின்றார், இன்று அவர்களின் பிள்ளைச் செல்வங்கள் அறிவிற்ச் சிறந்த வல்லுணர்களாக பார்க்கிறார். இப்படிப்பட்ட ஒரு திடச் சிந்தனை நமக்கு தேவை. வரப்பு உயர்ந்தால் நெல் உயரும், தமிழர்கள் பொருளாதரத்தில் உயந்தால் தமிழும் மற்றவர்கள் பார்வையில் தலை நிமிரும்.

ஆனால் தமிழந்தான் தமிழுக்கு தூக்கு கயிறாம்.எப்படி என்கிறீகளா? இந்த நாட்டிலே தமிழ் தலைநிமிர்ந்து நிற்கிறது என்றால் தமிழ்ப் பள்ளியால் தான்.அந்த தமிழ்ப் பள்ளியில் நடக்கும் அட்டுழியங்கள், சுது வாது சொல்லி மாளாது. சிலரின் ஆணவ போக்கு அதிகார திமிர் தமிழ் பள்ளியை குழி தோண்டி புதைத்துவிடும். பாவம் ஐயா தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும். புதைக்குழியில் மாட்டிக் கொண்டு புழுவாய் நெகிழ்கின்றனர்.
தமிழ்ப் பள்ளி வாரியம் என்று புதிதாக அமைக்கப் பட்ட ஒரு அமைப்பு। அதை குறை சொல்லவில்லை. அதன் பெயரில் சில தமிழ் பள்ளியில் அந்த பள்ளியின் வாரியத் தலைவர் என்று சொல்லி சிலர் பேசும் பேச்சு இருக்கிறதே.,என்ன வென்று சொல்ல? ஒரு நிகழ்வின் திறப்பு விழாவில் வாரியத் தலைவர் பேசுகின்றார் பிள்ளைகளிடம் “ நீங்கள் பெரியவர்களை அடித்தால் ( அதவாது ஆசிரியர்கள்) அது போலிஸ் கேஸ் இல்லை....ஆனால் பெரியவர்கள் உங்களை அடித்தால் அது போலிஸ் கேஸ் என்று, உருப்படுமா இந்த தமிழ்ச் சமுதாயம்?

மாணவர்களிடம் இப்படிப்பட்ட போதனை ஆசிரியர் சமுதாயத்திற்கு பெரிய தலைகுனிவு. இப்பொழுதே ஆசிரியர்களை மதிப்பதில்லை மாணவர்கள் சிறிது அதட்டி பாடம் சொல்லிக் கொடுத்தால் போதும் பூகார் போலிஸ்வரைக்கும் போய்விடுகிறது. தாய் தந்தையின் மிரட்டல் வேறு..சரி இந்த தொல்லை வேண்டாம் என்று மண்ணிப்பு கேட்டாள், அந்த மாணவர் தன் சக மாணவனிடம் “எங்கப்பா அம்மாவும் அந்த டிச்சரை நல்ல ஏசுனாங்க” என்று சொல்லி அசிரியரை ஏளானமாக பார்க்கும் பார்வை இருக்கிறதே ஏன் தான் இந்த தமிழ் பள்ளிக்கூடத்தில் சொல்லி தருகின்றேன் என்ற எண்ணம் தான் எற்படுகிறது.எத்தனை ஆசிரியர்கள் அவமானத்தில் கூனிக்குறுகி நிற்கின்றனர்?

சில பெற்றோர் ஆசிரியர் சங்கம் சில குண்டர் கும்பலை போல் நடத்தப் படுகிறது। மூன்று நான்கு பள்ளியுடன் இனைந்து ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு கூடிவிடும் இவர்கள்,அது மட்டும் இல்லை ஆசிரியர்களை மிரட்டி அடிக்கும் அளவுக்கு போகிறது. தங்களுக்கு பிடிக்காத ஆசிரியர் இருந்தால் அவர்களின் மாலை நேர வகுப்பை கூட மேல் நிலை கல்வி அதிகாரிகளிடம் புகார் செய்து அவர்கள் வந்து விசாரிக்கும் அளவுக்கு கயமையோடு வாழ்கின்றனர்.சுயநலம் மிகுந்து செயல்படும் இவர்களே போது தமிழை அழிக்க॥

இப்பொழுது சொல்லுங்கள் தூக்கு கயிறு யாருக்கு?.பலமும் பலவீனமும் யாரிடம் இருக்கிறது?
Post a Comment