December 3, 2009

தமிழ் இலக்கியத்திற்கு இங்கு என்ன கைவிலங்கா?


‘சாவிலும் தமிழ் படித்தே சாக வேண்டும்

சாம்பலும் தமிழ் மணந்தே போக வேண்டும்” --

என்ற ஒரு சாகா கவிதை வரி உண்டு।


தமிழனின் தமிழ் உணர்வுக்கும் தாய் மொழிப் பற்றுக்கும் ஒரு சிறந்த உதாரணம்। தமிழுக்கு அமுதென்று பேர் ॥ அந்த தமிழ் எங்கள் உயிறுக்கு நிகர் பாவேந்தர் பாரதி தாசனின் உணச்சிக்கவிதையும் உண்டு..தமிழர்களுக்கு தமிழ் உயிரைப் போன்றது. உன்னதமானதும். நீண்ட இலக்கிய மரபைக் கொண்டதும் தமிழ் மொழி.


“தமிழை பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன்” என்ற பழம் மொழி தமிழர் வாழ்வியலில் சார்வசாதரணமாக காணலாம்। தமிழை தடுப்பது, தடைச்செய்வதும் தமிழரை அழைக்கும் போர்க்குரல் போன்றது। தமிழையும் தமிழனையும் பழித்த காரணத்தால் சேரன் செங்குட்டுவன் வடவரை வென்றான் என்னும் சரித்திர குறிப்பு இருக்கிறது.


ஆனால் மலேசிய நாட்டில் தமிழுக்காக காலம் காலமாக நாம் போராடிக் கொண்டு இருப்பது ஒரு வழமையான நிகழ்வாகி விட்டது। தமிழ்வேள் கோ சாரங்கபாணி ‘தமிழ் எங்கள் உயிர்” என்று போராடினார்கள். எந்த நாடாக இருந்தால் என்ன, தமிழனம் அங்கே முன்னேற வேண்டும். அங்கே தமிழ் மொழி மேம்பட வேண்டும். தமிழ் மொழிக்கு மதிப்பு ஏற்படுத்த வேண்டும். இப்படி போராடி போராடி தமிழை நிலைநிறுத்துவது என்பது தமிழுக்கு ஒரு போராட்ட களமாகிவிட்டது.


தேர்தலில் பலத்த அடிவாங்கிய அவர்கள் திட்டம் தீட்டி ஒரு செயல் முறையை வகுத்து தமிழர்களை பழிவாங்ப் பார்க்கின்றனர்। சில மாதங்களுக்கு முன் மலாயா பல்கலைகழகத்தில் தமிழை எடுக்க பார்த்தனர்.இப்பொழுது ஒட்டு மொத்த தாய் மொழிக் கல்வியான தமிழ் இலக்கியத்தின் அடிமடியில் கைவைக்கின்றனர். ஏன் இந்த கயமை இவர்களுக்கு?


மலேசிய சட்டத்தில் தாய் மொழி கல்விக்கு இடம் உண்டு. பின் ஏன இவர்கள் பின்புற வாசல் வழியாக வந்து நமது தமிழ் மொழியை அழிக்கப் பார்கின்றனர்?


இவர்களின் கூப்பாடு எல்லாம் “1 மலேசியா” என்பது। ஆனால் செயல் பாடு எப்பொழுது மற்றவர்களை பிரித்து பார்ப்பதுதான். “எஸ்பிஎம் 10 பாடங்கள் தான், முடிவில் மாற்றம் இல்லை” கல்வித் தலைமை இயக்குநர் திட்டவட்டம்”என்ற அறிக்கை மக்கள் ஓசையில் வெளிவந்தது. என்ன இருமார்ப்பு. தமிழர்கள் என்றால் இவர்களுக்கு கிள்ளுக் கீரை என்ற நினைப்பா? தமிழர்களுக்கு மறதி அதிகம். நேற்று அவர்களுக்கு இழைத்த துரோகத்தை இன்று மறந்து விடுவார்கள் என்பதனால இல்லை இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுவிடும் சொரனைக் கெட்ட தனத்தினாலா இவர்கள் எல்லாம் நம்மிடம் விளையாடிப் பார்க்கின்றனர். தமிழுக்கு போராடி தலையிந்த எத்தனையோ தமிழ்ச் சகோதர்கள் நம்மிடமும் உண்டு என்பதை இந்த குள்ள நரிகளுக்கு தெரிவதில்லை போலும். மானம் காத்திட எதிரியின் வேலை மார்பில் ஏந்தி மாய்ந்தவர் கோடி நம்மினத்தில்.


தமிழர்களிடம் ஒரு கெட்ட குணம் உணச்சிக்கு இடம் கொடுத்து அறிவை மழுங்க செய்வோம்। உணர்சியோடு அறிவும் இனைந்து காலவெள்ளத்தையும் கடந்து தமிழ் மொழியையும் தமிழ் இலக்கியத்தையும் காப்பொம். உணர்ச்சி பெருக்கால் இன்று கழுதையை போன்று கத்திவிட்டு நாளை மூலையில் சுருண்டு படுப்பது முறை அன்று, தமிழ் என்ற அந்த உயிர் உணர்ச்சிக்கு என்றுமே ஜீவ நாதமாய் ஓங்கார சத்தமாய் நமது உள்ளத்தில் ஒலித்துக் கொண்டிருக்கவேண்டும்.


இனிய தமிழை இனைந்து காப்போம்

உயிர்த் தமிழை உணர்ந்து காப்பொம்
இதோ எனது கவிதை வரிகள் படித்துதான் பாருங்களேன்........

சோம்பல்முறித்தது போதும்மடா தமிழா ! உன்
சேதி என்ன வேன்று கூறு...
சாதிவெறி போதும்மடா - தமிழ்ச்
சாதி நீ என்று கூறு.....
கூடிச் சேர்ந்திட வேண்டும் - தமிழர்
கூற்றவன் கூட தமிழைப் பழித்தால்
கூடி உதைத்து பந்தாடிட வேண்டும்மடா.....


@மனோகரன் கிருட்ணன்.

Post a Comment