December 30, 2009

அவதார்

Beanatar

Mona Avatar Lisa

President Avatar Obama

The Avatar Twiligth

Jessica Albatar

Avatar - Jolie

Avatar watch - Pamelaஇறுதியாக
*
*
*
*
*
*
*
*
*

அவதார் பின் லேடன்

December 29, 2009

சுகம் தேடி சுடலையாய் போன சுக வாசிகள்


செத்த பிணங்கள்
வீதி ஓரம்
நடமாடும் பிணங்கள்
தெருவெங்கும்....
பிணக்கூடையில்
நெகிழும் மனித புழுக்கள்
பார்ரெங்கும்.......

உயிர்யிருக்கும் போது
கடித்து குதறும்
ரத்த காட்டேரிகள்

உயிர் இறந்த போதும்
கடித்து குதறும்
பிணம் திண்னும்
கழுகுகள்

சிவனே என்று இருந்தாலும்
சவமாகிப் போகும்
ஜடப் பிண்டங்கள்
மனித பிணங்கள்


ஐம்பூதங்களை
சுமக்கும் பெரும் பூதம் இது
சிவ கணங்களை மறக்கும்
சவ பிணங்கள் இது

வந்த வழிப் பாதை பெருங்காடு
வாழ்க்கை என்னும் சுடுகாடு
கரைந்து போகும் இந்த வாழ்க்கை இடுகாடு
...................... இது மனித நிலை

சடமாய் திரிந்து
சாம்பலை உடல் முழுதும்
பூசி மொழுகும்
நடைப் பிணம்தான்
எத்தனை கோடி
சுகம் தேடி
சுடலையாய் போன
சுக வாசிகள் கோடான கோடி.

இடம் மாறி ஓடும் வாசி
தடம் மாறமல் நின்றால்
சவமாய் நிற்கும்
உடலே சிவம்
சிவமாய் நிற்கும்
உடலே சுட்டேரிக்காத ஜோதி
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,இது இறை நிலை

December 28, 2009

மரத்தடியில் பிறந்த மறத்தமிழர்.-பாவலர் சங்கு சண்முகம்


மரத்தடியில் பிறந்த மறத்தமிழனை நீங்கள் பார்த்ததுணடா? ஆனால் இவர் சோம்பல் முறித்து மரத்தடியில் உறங்கும் மரத்தடி தமிழன் அன்று. நாடி நரபுகளில் தமிழ் உணர்வுகள் மூறுக்கேறியத் தமிழ் தமிழர் என்ற சிந்தனையை தன் ஜீவ நாடியாய் ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு தமிழ் நெஞ்சம். நீண்ட நெடிய காலமாய் எழுத்து துறையிலும் பத்திரிக்கை துறையிலும் அனுபவம் கொண்ட எழுபது வயதிலும் இளம் வயது இளைஞனை போல் துள்ளல் நடையும்மாய் சுற்றி திரியும் முதிர்ந்த ஒரு இளைஞர்தான் பாவலர் சங்கு சண்முகம்.

நண்பனில் தொடராக வெளிவந்த சமுக கட்டுரை. மரத்தடியில் பிறந்த மறத்தமிழர்.
“அரை நூற்றாண்டுக்கு மேல் எழுத்தையே சுவாசித்து, அந்த சுவாசிப்பில் உயிர் கொண்டுள்ள பாவலர் சங்கு சண்முகம் அவர்கள் தோட்டத் தொழிலாளர்கள் தம் வாழ்வியலை நன்கு தெரிந்தவர். சஞ்சிக் கூலிகளாக வந்த தமிழ்ச் சமுதாயத்தை மேய்ப்பானாக இருந்து சுகங்கண்ட பலரின் சுயரூபத்தை, நெடுங்கதையை வாசகர்கள் பாவலரின் எழுத்தில் தெரிந்து தெளியலாம்” என்று ஓலைச்சுவடியில் சதிஷ் குமார் முகவுரை எழுதியுள்ளார்.

ஏன் இந்த வீண் விளம்பர புராணம் என்று பார்க்கின்றீர்களா? இருக்கிறது. தமிழ் ஆசிரியர் வட்டம் என்பது எனக்கு ஒன்று புதியது அன்று. சிறு வயது ஆசிரியர் வட்டம் என்பது நமக்கு பள்ளிப் பாடங்களை போதித்த ஆசிரியர் குழுமம். தமிழ் என்ற அறிவு பொக்கிஷத்தை காட்டிய ஆரம்ப அறிவு வட்டங்கள்தான். ஆனால் நாம் இளைஞனாகிய பிறகு நமது நண்பர்களாக சிலர் ஆசிரியர்களாக இருப்பது நமக்கு பெருமைதான். இன்றும் தொடர்ந்துக் கொண்டிருக்கும் உறவுப் பாலம் அது.

திருமண பந்த உறவிலே வந்த என் மனைவி ஒரு தமிழ்ப் பள்ளி ஆசிரியயை. அதுவும் பட்டதாரி ஆசிரியயையாக உருவெடுத்திருப்பது என்பதும் ஒரு வகையில் பெருமைக் கொள்ள வேண்டிய விடயம் தான். அவரின் நண்பர்கள் நமக்கும் நண்பர்கள் தான். அந்த வகையில் ஆசிரியர் வட்டத்தின் அறிமுகம் பரந்த விரிந்த ஒரு உலகம். பல உண்மைகள், பல உணர்வுகள் உடனுக்குடன் பகிர்ந்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பும் வசதியும் இந்த ஆசிரியர் வட்டம் நமக்கு எற்படுத்தி தருகிறது என்ற உண்மையை மறுக்க முடியாது.

என்னடா இவன் அறுக்கிறான் என்று எண்னி விடாதீர்கள். விஷயத்திற்கு வருகிறேன். என் ஆசிரிய நண்பர் முருகேசு சார் அவர்கள் ஒரு நண்பருடன் என்னை வந்து சந்தித்தார். நான் யாரோ எவரோ என்று நினைத்து விட்டேன். ஏன் என்றால் சாருடன் வந்த அந்த முதிர் இளைஞரை இதற்கு முன் பார்த்ததில்லை, என் நண்பர் இவர் உங்களிடம் சில விஷயங்கள் பேச வேண்டும். என்று சொல்கிறார் என்றார். சிறிது நேரம் உரையாடிய பிறகுதான் தெரிந்தது அவர் தான் பாவலர் சங்கு சண்முகம் என்று.

ஒரு இளைஞரின் எண்ண திடம் அந்த பாவலனிடம் கண்டேன். தனக்கு ஒரு வலைப்பதிவை உருவாக்கி தரவேண்டும். தானும் ஒரு வலைப்பதிவாளனாக உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை சொன்னார். இன்னோரு விஷயத்தையும் என்னிடம் பகிர்ந்துக் கொண்டார். தன்னுடைய கனவு மரத்தடித் மறத் தமிழரை ஒரு புத்தகமாக வெளியிட வேண்டும் என்ற ஆவாவினையும் வெளிட்டார். 350-400 பக்கங்கள் கொண்ட அந்த கட்டுரையை வெளியிட வேண்டும் என்றால் ஒரு முப்பது ஆயிரம் வரை தேவைப்படும். தமிழர்களுக்கு தேவையான விடங்களை எழுதிருப்பதாகவும், தமிழர் சம்ந்தபட்ட பல விஷயங்களை தொட்டு சிலரை சாடியும் எழுதி இருப்பதாகவும் சொன்னார், ஒரு சிலரை சாடியதை திரும்ப எடுத்து விட்டால் ஒரு வேளை உதவ முன்வரலாம் ஆனால் ,இன்று வரைக்கும் தனது கொள்கைகளை விட்டு கொடுக்கவில்லை. ஒரு பாவலன் என்ற முறையில் எவரையும் தலைவணங்கா குணம். என்பதால் எவரிடம் சென்று என் புத்தகத்தை வெளியிடுவதற்கு உதவி கேட்க முடிவதில்லை.என்றார். உண்மைதான் ஐயா நம்மை போன்ற ஏழைத்தமிழனுக்கு யார் தான் உதவ போகிறார்கள்? உணர்வுள்ள தமிழர்கள் கூடி உதவினால் தான் உண்டு.

நமது வலைப்பதிவாளர்கள் ஒரு இயக்கமாக இயங்கினால் இவரைப் போன்று எத்தனையோ தமிழ் நெஞ்சங்களுக்கு உதவ முடியும். வலைப்பதிவு உலகை அறிவார்ந்த ஒரு இயக்கமாக மாற்றவும் முடியும். இன சமுக மொழிக்கு குரல் கொடுக்கவும் முடியும்.

ஆனாலும் அந்த முதிர் இளைஞனை பார்த்த பிறகு எனக்குள் ஒரு உற்சாகம். கால வெள்ளத்தை கடந்து நிற்கும் அவரின் எழுத்து துறை என்னைப் போன்ற எத்தனையோ இளைஞர்களுக்கு வழிக் காட்டிதான். மரத்தடியில் பிறந்த மறத்தமிழன் மட்டும் அல்ல இன்னும் எத்தனையோ தமிழர்கள் விழி பிதுங்கி வழித் தெரியாமல் கிடக்கின்றனர்.

வாருங்கள் ஐயா அடுத்த முறை வரும்போது உங்களுக்கென்று ஒரு வலைப்பக்கத்தை உருவாக்கிவிடுவோம் என்று கூறி கனிந்த இதயத்தோடு விடைப் பெற்றேன்..

December 25, 2009

சீன உணவு வகை

பல்வகை தனிச்சிறப்பியல்பு கொண்ட
சீன உணவு வகை

இதோ அவர்களின் உண்ணும் சிந்தாந்தம்

கால்கள் உள்ள எவற்றையும் நாம் உண்போம் நாற்காலிகளைத் தவிர, இறகுகள் உள்ள எவற்றையும் நாம் உண்போம் வானூர்திகளைத் தவிர.

அதற்கமைய மீன், கோழி, மாடு மட்டுமல்லாமல் பாம்பு, நாய், தவளை, பல்வேரு பூச்சிகள் என மனிதரைத் தவிர எல்லாவித உயிரனங்களையும் ருசியுடன் சமைக்க சீன சமையல் வழி சொல்கிறது.

வாங்க இன்முகத்தோடு சாப்பிடலாம் ..........

இந்த ஐட்டங்கள் போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

காதல் கவிதை இதுகாதல் கவிதை இது
கவிதையின் கரு இது
விழிப் பார்த்த காதலா
மொழிப் பார்த்து பேசுமா

மலையோரச் சாரல்
மலையின் தூறல்
நிலவோர சாரளத்தின்
நினைவுகளின் சாரம்

தடம் மாறிய நிலவை
தழுவப் பார்த்தேன் அன்று
நிழல் போல ஒளியை
நினைத்துப் பார்த்தேன் இன்று

உயிர் மை பார்த்த காதலா இது
விழிப் போன பின்
உயிர் தெளுந்த காதலா இது
விரல் மட்டும் உன்னைச் சுட்டுவதுதேன்

நரம்பறுந்த காதலைக் கொண்டு
நல்வீணையை மீட்டுவது எப்படி
கருக்கொண்ர காதலை நினைத்து
கவிதை வடிப்பது எப்படி

இது இதயம் வடித்த கண்ணீர்
இறுதி மூச்சு கண்ணே நீ
இதயச் சிறையில் வாட்டும்
இதயமில்ல பெண்ணே நீ

December 24, 2009

திருமணமா இல்லை கலைக் கச்சேரியா?மிருகங்களிடம் நிகழும் இனப்பெருக்கத் தேவைக்கான பாலுறவு என்னும் உயிரியற் செயற்பாடு தொடர்பான பாலுணர்வைத் திருப்திப்படுத்திக் கொள்வதற்காகச் மனிதன் கண்டுபிடித்த சமுக கடப்பாடே திருமணம் என்னும் உறவு பந்தமாகும்.

'திரு' என்பது தெய்வத்தன்மை எனவும், 'மணம்' என்பது இணைதல் எனவும் பொருள்பட்டு, 'திருமணம்' என்பது மேம்மையான தெய்வீகம் வாய்ந்த இணைதல் எனப்படுகின்றது. அதாவது இரு இதயங்கள் இணைவது எனவும் கூறலாம்.

சமுதாய அமைப்பு உருவான பின் நாகரீகம் வளரத் தொடங்கியது. ஆதிகாலத்தில் இருந்த மக்கள், உறவு முறைகளை அறியத் தொடங்கினார்கள்
பாலுறவு அல்லது செக்ஸ் என்பது மனிதன் உணர்ச்சியால் தூண்டப்பட்டு, அன்றாட அல்லது அவ்வப்போது தேவைப்படும் உணர்வுகளில் ஒன்று

ஒருவனுக்கு ஒருத்தி என்ற மனோநிலை மெல்ல மெல்ல ஏற்படத் தொடங்கியது. குடும்பத்தை விரிவாக்கத் தொடங்கிய மனிதர்கள், தங்களுக்கு தாங்களே விதிகளை வகுத்துக் கொண்டு திருமண பந்தத்தை கடைபிடிக்கத் தொடங்கினார்கள்.
பாலுறவுப் புணர்ச்சியை முறையாகக் கையாள்வதற்காகவே நாகரீக சமுதாயம் திருமணம் செய்து கொள்வதற்கு குறைந்தபட்ச வயது வரம்பையும் நிர்ணயித்து தற்போது அது நடைமுறையில் இருந்து வருகிறது.

திருமணம் என்பது மனித இனத்தைப் பொறுத்தவரை ஒரு உலகளாவிய பொதுமையாக இருந்த போதிலும், வெவ்வேறு பண்பாட்டுக் குழுக்களிடையே திருமணம் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும், நெறிமுறைகளும் காணப்படுகின்றன.

டியூட்டன் எனும் இன மக்கள் திருமணத்திற்குப் பிறகு கணவனும் மனைவியும் ஒரு மாதம் வரை ஒரே கிண்ணத்தில் தேன் அருந்த வேண்டும் என்பது ஒரு சடங்கு. ஆங்கிலேயர்கள் அந்த நிகழ்ச்சியை "ஹனி மன்த்" என்று அழைத்தனர். இது பின்னால் ஹனிமூன் ஆகிவிட்டது.

மாக்வீஸல் தீவில் வசிக்கும் ஒரு பிரிவினரிடையே திருமணத்திற்கு வந்திருக்கும் ஆண் விருந்தினர்களை வரிசையாகப் படுக்க வைத்து அவர்களின் முதுகின் மீது அடியெடுத்து வைத்து நடந்து மணமகன் மணமேடைக்குச் செல்வான். பின்னர் இதர சடங்குகள் துவங்குமாம்.

தமிழர்களின் திருமணம் ஆகம் மரபுச் சடங்குகளுடன் சில சிறப்பு அம்சங்களையும் தழுவி நடைபெறுகின்றன. இச்சடங்குகளை சமய குருக்கள் சமய முறைப்படி நெருப்பு முன்னினையில் இறைவன் ஆசியுடன் நடத்தி வைக்கிறார். திருமண நிகழ்வில் முக்கியமான நிகழ்ச்சி நல்வேளையில் தாலி கட்டுதலாகும். இதனை “மாங்கல்யதாரணம்” எனக் கூறுவர். தாலி கட்டியதும் அப்பெண் “சுமங்கலி” அதாவது திருமணமானவள் என்ற தகுதி பெறுகின்றாள்

மாங்கல்யம் சூட்டும்போது கெட்டிமேளம் கொட்டுவது சபையில் உள்ளோர் யாராவது தும்முதல், அபசகுன வார்த்தைகள் பேசுதல் போன்றவை மணமக்களிற்குக் கேட்கக்கூடாது என்பதற்காகவே ஆனால் இன்றைய நவநாரீக உலகில் அதுவும் மலேசிய தமிழர்களிடம் திருமணத்தன்று கலை நிகழ்ச்சி என்று ஒரு கோமளித்தனத்தை அரங்கேற்றுகின்றனர். திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். ஒரு புனிதமான அந்த திருமண நேர நிகழ்வில் கலை என்ற போர்வையில் ஒரே காட்டுக் கத்தல். இரைச்சல் இசையை அமைதியாகவும் அதே சமயம் பண்பான முறையில் நடக்க வேண்டிய திருமண வைபவத்தில் அரங்கேற்றுகின்றனர். யார் பேசுவதும் விளங்குவது இல்லை. ஐயர் ஒதுகின்றாரா இல்லை சினிமாவில் டப்பிங் குரலுக்கு வாய் அசைக்கின்றாரா என்று தெரியவில்லை சில சமயங்களில் என்ன மொழியில் பாடுகின்றனர் இந்த பாடகர்கள் என்பது கூட தெரியவில்லை இன்றைய தமிழ் சினிமா பாடல்களில் தெய்விகமான நல்ல வார்த்தைகள இருக்கின்றன?. என்ன கருமாந்திரமோ ? இந்த நிகழ்வுக்கு ஏன் தான் வந்தோம் என்றாகி விடுகிறது. திருமண நிகழ்வினை தவிர்த்து மற்ற விருந்து வைபவங்களில் கலை நிகழ்ச்சியை வைத்துகொண்டால் சிறப்பாக இருக்கும் .

இருமணம் இணையும் திருமண பந்தம் இனிய நிகழ்வாக இருக்கவேண்டும். தமிழர்களின் பண்பாட்டுக்கு தலைகுனிவை எற்படுத்தாத உயர் தனி விழாவாக இருக்கவேண்டும். வாழ்க்கையை தொடங்கும் போது எதற்கு இந்த காட்டுக் கத்தல்? திருமண சடங்கில் தேவையா இந்த சினிமா இசை?

December 22, 2009

நினைவலைகள்


ஒரு மரக்கிளையில்
பூத்துக் குலுங்கும் பூக்கள் போல
வாழ்க்கையின் எண்ணப் பாரிமாணங்கள்
விரிந்துக் கிடக்கின்றன

சிறு பருவத்தில்
ஆடிய நினைவலைகள்
ஓடி வந்து ஒட்டிக்கொண்டன

பள்ளி என்னும் பரந்துப்பட்ட உலகம்
பண்படச் செய்த கால வெள்ளம்
இருண்ட நிலவறையில்
நினைவுகளை வெளிச்சமாக்கி
காலக் கடலை கடந்த போது.......
@@@@@@@@@@@@@

நினைவலைகள்
கடல் பரப்பை பின்னோக்கி
இலுக்கப்பட்டன.
நிர்வாணத்தை தேடிய
கடல் ஜந்துக்கள்
இப்பொழுது அம்மணமாய்......
இரவுகள் அவர்களுக்கு
விடிவது இல்லை....

விரல் நுணிகள்
இப்பொழுது
மணலை
வேதப் பாடச்சாலையாகிவிட்டன.
கடற்கரை மணல் எங்கும்
எமது முன்னோர்களின்
பாத சுவடுகள்
தடம் மாறிக்கிடக்கின்றன.
@@@@@@@@@@@

அது ஒரு இரவுக் காலம்
கிழிச்சல்கள்
வானத்தில் மிண்னும்
நட்சத்திர பூக்களை
பறிக்க
முயன்று தோற்றது.

என்றாவது ஒரு நாள்
வான் பூக்கள்
உதிருமா?
ஏங்கி தவிக்கின்றன......
நிலவுகளை தொட்டுவிட்ட
கரங்கள்
எங்கள் நிலமைகளை
கண்டுக் கொள்வதில்லை....

இறைவனிடம் அனுப்பிய
விண்ணப்பங்கள்
மீளாத் துயிலில்
மிதக்கிறது எங்களின்
கண்ணிர்த்துளிகள்
கடற்கரை ஓரமாய்.......

December 16, 2009

நல்வாழ்வுக்கு பத்து

நல்ல குடும்பத்திற்கு வேண்டிய 10 லட்சணங்கள் குறித்து வேதாத்திரி மகிரிஷி பேசியுள்ளார்।அந்த அறிவுரைகளாவன,

1.நாம் பெற்ற ஞானத்தைப் பயன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே.

2. கணவன் - மனைவி உறவுக்கு இணையாக உலகில் வேறெந்த உறவையும் சொல்ல முடியாது.

3. குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத்தான் இருக்க வேண்டும். எந்த நிலையிலும் உணர்ச்சிகள் நிர்வாகம் செய்யக் கூடாது.

4. வரவுக்குள் செலவை நிறுத்துங்கள். அது குடும்ப அமைதியைக் காக்கும். வீண் செலவுகள் செய்ய வேண்டாம். அது குடும்ப அமைதியை குலைக்கும்.

5. ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பொருளீட்டும் திறன் வேண்டும். அல்லது, பெரும்பாலானோர் பொருளீட்டும் திறன் பெற்றிருத்தல் வேண்டும். சிலர் அதிகமாக சம்பாதிக்கலாம், சிலர் குறைவாக சம்பாதிக்கலாம். எப்படி இருந்தாலும் அதை காப்பது, நுகர்வது, பிறருக்கு இடுவது ஆகிய செயல்களில் சமமான பொறுப்பு வேண்டும்.

6. கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேமிப்பதும் சரியாக இருக்காது. அது பிரச்சினைகளுக்கு இடம்தரும். மனதில் ஒளிவு மறைவு வைத்துக் கொண்டிருந்தால் அங்கே தெய்வீக உறவு இருக்காது.

7. குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும் என்றால் சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுத்தல், தியாகம் ஆகிய மூன்றையும் கடைப்பிடித்து வர வேண்டும்.

8. பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமல் பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழிவகுக்கும்.

9. தனக்கு கிடைத்த வாழ்க்கைத் துணையைப் பற்றி யாரும் குறை கொள்ளத் தேவையில்லை. அவரவர் அடிமனமே இதை தேர்ந்தெடுத்துக் கொள்ளும்.

10. நல்ல குடும்பத்தில் நன்மக்கள் தழைப்பார்கள். பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்கும் குடும்ப அமைதி இன்றியமையாததாகும்.

இந்த 10 அறிவுரைகளை பின்பற்றினால் எந்த குடும்பமும் நல்ல குடும்பம்தான் என்கிறார் வேதாத்திரி மகிரிஷி.

December 14, 2009

மங்கும் மலேசிய தமிழ் வலைப்பதிவுலகம்ஏனோ தெரியவில்லை இந்த மலேசிய வலைப்பதிவளர்கள் இப்படி தூங்கி வழிகின்றனர்॥ வருடதத்திற்கு ஒரு இடுகை, மாதத்திற்கு ஒரு இடுகை॥வாரத்திற்கு ஒரு இடுகை என்று வலைப்பதிவை அலங்கரின்றனர்.

ஒரு ஊடகமான வலைப்பதிவகம்॥ மலேசிய தமிழ் மக்களின் குரல், குறை நிறைகளை அலசும் அற்புத தமிழ் தளம்। உடனுக்குடன் நமது குரலை உலகெங்கும் ஒளிரச் செய்யும் தொடர்புக் சாதனம். ஒரு மாபெரும் சக்தியை ஒருங்கினைக்க மறுக்கும் தமிழர்களின் பண்பு, தமிழர்களுக்கு ஒரு பெரிய இழப்பு என்று தான் கூறவேணடும். நமது குரல் சக்தி மிக்கதாக இருக்கவேண்டும் எண்றால் தமிழ் வலைப்பதிவுலகம் வீறுக்கொள்ளவேண்டும்..

மலேசியாவில் கருத்துக்கா பஞ்சம்? அரசியல் சமுக நிகழ்வுகளுக்கு என்ன குறைவு, அன்மையில் ஏற்பட்ட தமிழும் தமிழ் இலக்கியமும் பிரச்சனைக்கு கூட ஒரு சிலரை தவிர்த்து பதிவுகளில் பங்கெடுக்காமல் குரல் கொடுக்காமல் ஒதுங்கி நிற்பதின் மர்மம் என்ணவோ?

ஒரு நூறு வலைப்பதிவாளர்கள் இருப்பர்களா என்று சந்தேகம், அதிலே வாரத்திற்கு ஒரு இடுகை என்று எழுதுவர்கள் ஒரு சிலர்।சமுதாய பிரச்சனைகளை கையில் எடுத்து எழுதும் ஒரு சிலரை தவிர்த்து. விரல் விட்டு எண்னக்கூடிய வெகு சிலரே அன்றாடப் பதிவுகளை எழுதுகின்றனர். ஏன் தமிழ் வலைப்பதிவுலகம் கருத்து பஞ்சத்தில் படுத்து விட்டதா என்ன?

மலேசியாவில் முகம் அறியாத எத்தனையோ அறிஞர் பெருமக்கள் நிறைய உண்டு। தமிழ்ச் சாண்றோர்கள் நிறைய உண்டு. தொழிச் சார்ந்த விடயங்களை,இனி என்ன மாதிரியான தொழி வாய்ப்புக்கள்? சமுதாய முன்னேற்றக் கருத்துக்களை முன் வைத்து எவ்வளவோ எழுதலாம். அவர் அவர் கருத்தாக்கங்களுக்கு முதன்மை கொடுத்து எழுதலாம்॥விஷயங்களை பகிர்ந்துக் கொள்வதும் தொடர்பும் தான் இங்கு முக்கியம். ஆனால் மலேசியா தமிழர்கள் வலைப்பதிவாளர்களூக்கு ஏன் இந்த மவுனம்?

வேலை பளுவா? பொருளாதர தக்கமா?அல்லது வலைப்பதிவுகள் சலிப்பு தட்டிவிட்டனவா? நண்பர்களுக்கு மட்டும் பிண்ணுட்டம் இடுவது.மற்றவர் இடுகைகளை நுனிப்புல் போல் மேய்ந்துவிட்டு செல்வது பிண்ணுட்டம் இடாமல் செல்வது. ஒரு சில அதித மேதவிகள் பிண்ணூட்டமா ? அது பாவம் காரியம் என்றும் ஒரு சிலர் பிண்ணுட்ட இடுகையே எடுத்துவிட்டு பதிவுகளை எழுதுகின்றனர். நேரமின்மையா? விட்டுவிடுவோம் எதாவது சிந்தனையாவது உங்களின் பதிவில் பதித்து விட்டு செல்லுங்கள். எங்களின் பதிவுகளை யார் தரம் பிரிப்பது.குற்றங்களை யார் சுட்டுவது?கருத்து பரிமாற்றம் யாரிடம் எதிர்ப்பார்பது? குறை நிறைகளை யார் கூறுவது?
நான் குறைச் சொல்லவில்லை அலுவல் ஆயிரம் இருக்கட்டும், உங்களின் கருத்துக்கள் எங்களை போன்ற புதிய பதிவாளர்களை உருவேற்றும், உருவாக்கும்। உங்களின் வார்த்தைகள் தான் எங்களுக்கு வேத வாக்கு.

இந்த வேளையில் சில நண்பர்களை நினைத்து பார்க்கின்றேன்,குறிப்பாக வாழ்க்கை பயணம் விக்கி படைப்புக்கள் எங்கே? இப்பொழுது எல்லாம் இடைஇடையில் காணமால் போய்விடுகின்றார்। நண்பர் தமிழ்ப் பூங்கா சிவனேசு ஏன் அழ்ந்த நித்திரை? கனவு மொழி மலர்விழி. கவித்தமிழ் கிருஸ்ணா॥தமிழ்ழுயிர்.தமிழ் ஆலயம்.,நீல விழி, மலேசியத் தமிழன். நண்பர் அகிலன் .விவேகம் மற்றும் சிலரின் பதிவுகள் இடைவெளிவிட்டு தான் வருகின்றன. என்ன காரணம் என்று தெரியவில்லை.

அதே வேளையில் வழமையாய் பதிவிடும் நனவுகள் ஐயா நம்பி அவர்கள், கருத்து மேடைதமிழரண், திருந்தமிழ் சுப.நற்குணம், அன்பர் திருநெறி, கே..பாலமுருகன்.தமிழ் மருதம் ,ஒலைச்சுவடி. இன்னும் சிலரின் பதிவுகளால் மலேசிய தமிழ்ப் வலைப்பதிவுலகம் ஒளிர்ந்துக் கொண்டிருக்கிறது .இங்கு ஒன்றைச் சொல்ல வேண்டும் .ஒரு மாறுப்பட்ட ஒரு மனிதர் நமது வலைப்பதிவில் உலா வருகின்றார். பிண்ணுட்ட வள்ளல் தமிழ் வாணனின் குரல் எங்கும் ஓங்கி ஒலிக்கிறது. வாழ்க மலேசியா தமிழ் வலைப்பதிவுலகம்..

வாழ்க்கைசித்தம் தெளிந்து சொன்னால் சித்தாந்தம்
தெளிவில்லாமல் சொன்னால் வேதாந்தம்?
சிந்தித்து கேள்வி எழுந்தால் சித்தன்
தெளிவுகளை தேடி அலைந்தால் புத்தன்?

சினம் உடையோருக்கு தவம் கிடையாது
மனம் உடையோருக்கு மாதவம்தான் வாழ்க்கை
நல்ல குணம் அடை யாருக்கு நல் வாழ்க்கை ஏது?

கணவன் மனைவி புனித உறவு
ஊடலும் கூடலும் தேடலும் தேவையும்
சார்ந்த உறவு

உறவிலே தெளிவு நிலை
அதுவே துறவு நிலை
உள்ளன்பிலே உயர்ந்தநிலை
அதுவே இல்லற இனிய நிலை

வாழ்கையை துறப்பது அல்ல துறவு
மன குப்பைகளை துறப்பது துறவு

வாழ்க்கையை சுமக்கின்றோமா?
வாழ்க்கையை சுவைகின்றோமா?
வாழ்க்கை சுகப்படவேண்டும்
வாழ்ந்து பார்க்க வேண்டிய
வாழ்க்கையை வாழ்வதில்லை ஏன்?

வாழ்க்கையில் சலனப் படக்கூடாது
வாழ்க்கை சமப்படவேண்டும்
கணவன் மனைவி உறவு
சமரசப்பட வேண்டும்
சமர்சீர்ப்படும் வாழ்க்கை
சாகா வசப்படும்

குடும்பம் என்றால் இன்பத்தை கொடு
குடு + இன்பம் = குடும்பம்
இன்பத்தை பிறறுக்கு குடுக்காத நீ
இன்பத்திற்கு ஏங்குவது ஏனோ?

வாழ்க்கை ஒரு போதனை மார்க்கம் அல்ல
வாழ்க்கை அறிவு சார்ந்த சாதனை மார்க்கம்

December 11, 2009

போகிற போக்கிலே.......
தமிழுக்கு தமிழனே உயிராம் - அந்த
தமிழுக்கு தமிழனே தூக்கு கயிறாம்.

இந்த கவிதைவரிகளை புரிந்துக் கொள்வதற்கு தேவையில்லை பிரம ரகசியம்। சாதாரண பாமர மக்கள் கூட புரிந்திக்கொள்ளக் கூடிய ஒரு அருமையான அற்புதமான ஒரு கவிதை வரிகள்। இதிலே வருத்தபட வேண்டிய விடயம் என்னவென்றால் தமிழனை உயர்த்தியோ புகழ்ந்தோ எழுதப்பட்ட கவிதை வரி அல்ல. தமிழனின் வாழ்வு நிலையின் விளிம்பில் உள்ள குறைப்பாடுகளை சுட்டும் ஒரு கருத்தாழம்மிக்க உண்னதமான கவிதை படைப்பு, இன்றைய தமிழனின் இழிநிலை குணப் பண்புகளை கூறுப்போட்டுக் காட்டுவதற்கு இந்த கவிதையைவிட வேறு எதுவும் சிறப்பாக எனக்கு தோன்றவில்லை.

தமிழர்களின் ஞாயிறு என்று போற்றப்பட்ட பெரியார்.தமிழர்களின் குணப்பண்புகளை கடிந்து ஏசியும் பேசியும் தன் வாழ் நாளில் பெரும் பங்கை தமிழர் வாழ்வியலின் பாங்கை மற்றுவதற்கு முயன்ற அந்த தகைமையோன் தமிழனை பார்த்து இவர்கள் “காட்டுமிராண்டிகள்” என்று கூறு அளவுக்கு தமிழர்களின் இழி குணப்பண்புகூறுகள் மிகுந்திருந்தது.
சுயநலம் மிகுந்த சில தமிழர்களால் தமிழுக்கு கேடு என்றால் எவ்வளவு உண்மை என்று கேட்டும் தமிழர்கள் நம்மிடம் உண்டு। இன்று ஊடகங்களிலும் வலைப்பதிவிலும் பாரபரப்பான விடயம் என்னவென்றால் தமிழும் தமிழ் இலக்கியமும் இந்த நாட்டிலே இருக்குமா இல்லை இருக்கமுடியுமா என்ற கேள்விக் கணனைகளுடன் நடைப்பயில்கின்றன.

சில ஆண்டுகள் வரை மலேசியர்கள் அதிக மொழிகளை பயில்வதற்கு ஊக்குவிகப் பட்டார்கள்। நாடு உலகமய கொள்கையில் ஆட்ப்பட்டு மலேசியர்கள் உலக முன்றேன்றத்தில் பின் தங்கிவிடக்கூடாது என்ற காரணத்தால் மலேசியர்கள் பன்மொழி புலமை அவசியமான ஒன்றாக இருந்தது. திடிர் என்று யார் கண் பட்டதோ அல்லது யாரிடம் ஞானனோதயம் பெற்றார்களோ தெரியவில்லை. நமது மொழியை இருட்டடிப்பு செய்யும் வேலையில் இறங்கிவிட்டார்கள். தமிழ் மொழியும் தமிழ் இலக்கியமும் கணக்கில் எடுக்கப்படாது என்று சொல்லப்படுகிறது.

ஒரு மொழி கல்வி நிலைக்கு தேவை இல்லை என்னு நிலைக்கு உட்படுத்தப்டும் போது அப்பொழுதே அம்மொழி செத்த மொழியாகிவிடும்। தரங்கெட்ட சில மொழிகள் தேவையின் அடிப்படையில் உயர்ந்து நோக்கும் போது பல அறிவு பொக்கிஷங்களை தாங்கி நிற்கும் தமிழின் இழி நிலைக்கு யார் காரணம்?

தமிழர்களாகிய நாமே நமக்கு குழிவெட்டிக் கொள்கின்றோம்। தமிழின் அருமையை உணராமல் தமிழில் உள்ள அறிவு பொக்கிஷத்தின் பெருமை உணராமல் அதன் ஆழத்தை ஆராயாமல் நாம் மாக்களாக வாழ்கின்றோம். தமிழ் மொழியில் என்ன குறை? தமிழர்களாகிய நாம்தான் குறையுள்ளவர்களாக வாழ்கின்றோம். நாம் பணத்தலும் நல்ல பண்பாலும் நல்ல தொழில்முணைவர்களாகவும் படிப்பில் சிறந்தவர்களாக வாழ்ந்தால் தமிழும் உயரும். சாமணியர் என்ற ஒரு வலைப்பதிவாளார், நண்பர் தன் குழந்தை செல்வங்களுக்காக தன் கட்டிகாத்த அந்த தொழிலையே விட்டு விட்டு தன் பிள்ளைகளின் படிப்பிற்காக தரைவார்த்திருக்கின்றார், இன்று அவர்களின் பிள்ளைச் செல்வங்கள் அறிவிற்ச் சிறந்த வல்லுணர்களாக பார்க்கிறார். இப்படிப்பட்ட ஒரு திடச் சிந்தனை நமக்கு தேவை. வரப்பு உயர்ந்தால் நெல் உயரும், தமிழர்கள் பொருளாதரத்தில் உயந்தால் தமிழும் மற்றவர்கள் பார்வையில் தலை நிமிரும்.

ஆனால் தமிழந்தான் தமிழுக்கு தூக்கு கயிறாம்.எப்படி என்கிறீகளா? இந்த நாட்டிலே தமிழ் தலைநிமிர்ந்து நிற்கிறது என்றால் தமிழ்ப் பள்ளியால் தான்.அந்த தமிழ்ப் பள்ளியில் நடக்கும் அட்டுழியங்கள், சுது வாது சொல்லி மாளாது. சிலரின் ஆணவ போக்கு அதிகார திமிர் தமிழ் பள்ளியை குழி தோண்டி புதைத்துவிடும். பாவம் ஐயா தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும். புதைக்குழியில் மாட்டிக் கொண்டு புழுவாய் நெகிழ்கின்றனர்.
தமிழ்ப் பள்ளி வாரியம் என்று புதிதாக அமைக்கப் பட்ட ஒரு அமைப்பு। அதை குறை சொல்லவில்லை. அதன் பெயரில் சில தமிழ் பள்ளியில் அந்த பள்ளியின் வாரியத் தலைவர் என்று சொல்லி சிலர் பேசும் பேச்சு இருக்கிறதே.,என்ன வென்று சொல்ல? ஒரு நிகழ்வின் திறப்பு விழாவில் வாரியத் தலைவர் பேசுகின்றார் பிள்ளைகளிடம் “ நீங்கள் பெரியவர்களை அடித்தால் ( அதவாது ஆசிரியர்கள்) அது போலிஸ் கேஸ் இல்லை....ஆனால் பெரியவர்கள் உங்களை அடித்தால் அது போலிஸ் கேஸ் என்று, உருப்படுமா இந்த தமிழ்ச் சமுதாயம்?

மாணவர்களிடம் இப்படிப்பட்ட போதனை ஆசிரியர் சமுதாயத்திற்கு பெரிய தலைகுனிவு. இப்பொழுதே ஆசிரியர்களை மதிப்பதில்லை மாணவர்கள் சிறிது அதட்டி பாடம் சொல்லிக் கொடுத்தால் போதும் பூகார் போலிஸ்வரைக்கும் போய்விடுகிறது. தாய் தந்தையின் மிரட்டல் வேறு..சரி இந்த தொல்லை வேண்டாம் என்று மண்ணிப்பு கேட்டாள், அந்த மாணவர் தன் சக மாணவனிடம் “எங்கப்பா அம்மாவும் அந்த டிச்சரை நல்ல ஏசுனாங்க” என்று சொல்லி அசிரியரை ஏளானமாக பார்க்கும் பார்வை இருக்கிறதே ஏன் தான் இந்த தமிழ் பள்ளிக்கூடத்தில் சொல்லி தருகின்றேன் என்ற எண்ணம் தான் எற்படுகிறது.எத்தனை ஆசிரியர்கள் அவமானத்தில் கூனிக்குறுகி நிற்கின்றனர்?

சில பெற்றோர் ஆசிரியர் சங்கம் சில குண்டர் கும்பலை போல் நடத்தப் படுகிறது। மூன்று நான்கு பள்ளியுடன் இனைந்து ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு கூடிவிடும் இவர்கள்,அது மட்டும் இல்லை ஆசிரியர்களை மிரட்டி அடிக்கும் அளவுக்கு போகிறது. தங்களுக்கு பிடிக்காத ஆசிரியர் இருந்தால் அவர்களின் மாலை நேர வகுப்பை கூட மேல் நிலை கல்வி அதிகாரிகளிடம் புகார் செய்து அவர்கள் வந்து விசாரிக்கும் அளவுக்கு கயமையோடு வாழ்கின்றனர்.சுயநலம் மிகுந்து செயல்படும் இவர்களே போது தமிழை அழிக்க॥

இப்பொழுது சொல்லுங்கள் தூக்கு கயிறு யாருக்கு?.பலமும் பலவீனமும் யாரிடம் இருக்கிறது?

அல்கிசா லனுன்.......


உண்மைகளை சொன்னால்
உறுத்தும் இவர்களுக்கு
ஊமைகளாய் இருந்தால்
உத்தமர்கள் என்பார்கள்

உரிமைக்காக போராடினால்
உதவாக்கரை என்பார்கள்
உணர்விழந்து நின்றால்
உருப்படுவாய் வா என்பார்கள்

மொழிக்காக விறுக்கொண்டால்
வாய் பேசும் வாயாடிகள்
குரைக்கும் நாய் என்பார்கள் - நாம்
வாய் மூடி இருப்பதோ இவர்களின் சுகம்?

நம் ரத்தம் இவர்களுக்கு சுண்டக்காய்
இவர்களின் ரத்தம் பொடலங்காய்?
ரத்த வெறிப் பிடித்த பேய் கூட்டம்
ஓதுவதோ உத்தமர் கோசம்

உத்தமர் ரத்தமா - இல்லை
ஒருவர் ரத்தமா உங்களுடையது
கலந்து ஒடும் சாக்கடை நீ
கரைந்து அழைப்பது எங்களை ஏன்?

திருக் கூட்டமா இது - கடற்
திருடர்க் கூட்டம் எங்கும்
திருந்தா கூட்டம் இது - மதி
திருந்தா மடமையர் கூட்டம்

நம் உணர்வினை சொன்னால்
நம்மை மதிக் கெட்டவர் என்பார்
மாற்றுக் கருத்துச் சொன்னால்
மடையர் கூட்டம் என்பார்

வார்த்தைகள் வேண்டாம் - இனி
வாக்கு மட்டும் போதும்
சிதைந்தது போது - இனி
சிந்தித்திட வேண்டும்

சுகந்திர நாட்டில் ஏன் இந்த தடை?
பேசித் தீர்க்க முடியாத?
ஏசினால் தான் உனக்கு முடியுமா?
குரைத்தால்தான் உனக்கு நிம்மதி?
வெறிப் பிடித்த நாய் ஜைனி......(சனி.)
எங்கள் வேதனை எப்படி புரியும் உனக்கு?

December 9, 2009

ஊசியில் ஒரு வாழைப்பழம்1 சத்து  மலேசியா

 ஒரே கோட்பாடு  அனைவருக்கும்
ஓங்கும் மலேசிய உயர்க் கோட்பாடு
அனைத்து மலேசியருக்கும்
அருமையான கோட்பாடு
இங்கு இல்லை வேற்றுமை
இதுவே 1 சத்து மலேசியா

ஏழ்மை அற்ற சமுதாயம்
ஏழ்மையை ஒழிக்கும்
ஏகாந்தக் கோட்பாடு
அடுத்த நூற்றாண்டு
அழைத்துச் செல்லும்
அற்புதக் கோட்ப்பாடு

அனைத்து மலேசியர்கள்
 அனைவரும் மண்னின் மைந்தர்கள்
அடிமை என்று யாரும் இல்லை இங்கு
அம்புன் துவாங்கு  அதுதான் எங்களின் தாரக மந்திரம்

இன வேற்றுமை இல்லை இங்கு
 மொழி வேற்றுமை இல்லை  இங்கு
மத வேற்றுமை இல்லை  இங்கு
மலாய் சாதிக்கு  யாருமே சமம் இல்லை.

வேலையில் பாகுபாடு இல்லை
வேலைக் கொடுப்பதில் பாகுபாடு இல்லை
 கடன் வாங்குவதில் பாகுபாடு இல்லை
கடன் கொடுப்பதில் பாகுபாடு இல்லை

எங்கும் ஒரே  1 மலேசியா கோட்பாடு
ஏகாந்த    கோட்பாடு  அதுவே எங்களின் கூப்பாடு

அனைவரையும் அழைத்து செல்வோம்
அனைவரையும் அரவனைத்து செல்வோம்
அழித்து விட்டு செல்வோம் தமிழை
அடித்து விட்டு செல்வோம் தமிழனை
இதுவே எங்களின் நிலைப்பாடு

இதுவே சத்து மலேசியா
 இனவாதமற்ற கோட்பாடு
 ஊசியில் ஒரு வாழைப்பழம்
உண்பதற்கு ஏற்ற ஏற்பாடு


பாரினிலே சிறந்த நாடு
மலேசியா பார்ப்புகழ் பெற்ற நாடு
இட்லர்கள் மறைந்து வாழும் நாடு
இடி அமின்கள் நிறைந்த நாடு.
December 7, 2009

உண்மைகள்உண்மைகள்
புதைகின்ற போது
எனது
உள்ளமும் உடைகின்றன
வலிகளின் வேதணை
விழிகளின் வழியில்
வினோதமாய்
விம்மி அழுகின்றன

இருளிலே
மறைந்தும் மறையாமல்
தெரியும்
உள்முக கண்ணாடி
பிம்மத்தின்
உணர்ச்சி வேகத்தில்
போக்கற்றுப் போனது
நிஜங்களின் விழிகள்

என்றாவது ஒரு நாள்
உண்மைகளின் உரு
நிஜத்தின் கருக்களாய்
நிழல்களின் விளிம்பில்
ஒளிரச் செயும்

அப்பொழுது
புதைந்து போன
வேசங்கள்
தோண்டி எடுக்கப்படும்
இறந்துப் போன
நிஜங்கள்
பூமியின் பிம்மத்தில்
விரிச்சமாய் விரிந்து நிற்கும்
மனோவியம்
@மனோகரன் கிருடணன்.

December 5, 2009

எங்கள் ஈழத்து உறவுகள்விழி ஒரத்தில்
வழிந்தோடும் நினைவலைகள்
கால வெள்ளத்தில்
கரைந்து போன
மண் சட்டிகளாயின

சிறகு முளைத்த
என் மன எண்ணங்கள்
சிறக்கடிக்க மறுகின்றன.
வெறுமைகளை சுமக்கவும் மறுக்கின்றன

உணர்ச்சி பிம்மமாய்
என் நெஞ்சம்
ஓங்கார குகையின்
ஓசையின் வெளிபாடு
என் மன எரிமைலையாய்
கனந்துக் கொண்டிருக்கிறது

உணர்வுகளின் வீக்கத்தில்
என் நாடி நரம்புகள்
ஏனோ வீர்விட்டுக் கிடக்கிறது

மலுங்கி மக்கையாகி போன
எங்கள் உறவுகள்
பிண கட்டையாய்
நடைப் பயில்கின்றன

பிண வாடை
உடல் எங்கும் வீசுகின்றன
மனிதம் என்னும்
வார்த்தை மட்டும்
இங்கு
தொலைந்து போனது ஏன்?

December 3, 2009

தமிழ் இலக்கியத்திற்கு இங்கு என்ன கைவிலங்கா?


‘சாவிலும் தமிழ் படித்தே சாக வேண்டும்

சாம்பலும் தமிழ் மணந்தே போக வேண்டும்” --

என்ற ஒரு சாகா கவிதை வரி உண்டு।


தமிழனின் தமிழ் உணர்வுக்கும் தாய் மொழிப் பற்றுக்கும் ஒரு சிறந்த உதாரணம்। தமிழுக்கு அமுதென்று பேர் ॥ அந்த தமிழ் எங்கள் உயிறுக்கு நிகர் பாவேந்தர் பாரதி தாசனின் உணச்சிக்கவிதையும் உண்டு..தமிழர்களுக்கு தமிழ் உயிரைப் போன்றது. உன்னதமானதும். நீண்ட இலக்கிய மரபைக் கொண்டதும் தமிழ் மொழி.


“தமிழை பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன்” என்ற பழம் மொழி தமிழர் வாழ்வியலில் சார்வசாதரணமாக காணலாம்। தமிழை தடுப்பது, தடைச்செய்வதும் தமிழரை அழைக்கும் போர்க்குரல் போன்றது। தமிழையும் தமிழனையும் பழித்த காரணத்தால் சேரன் செங்குட்டுவன் வடவரை வென்றான் என்னும் சரித்திர குறிப்பு இருக்கிறது.


ஆனால் மலேசிய நாட்டில் தமிழுக்காக காலம் காலமாக நாம் போராடிக் கொண்டு இருப்பது ஒரு வழமையான நிகழ்வாகி விட்டது। தமிழ்வேள் கோ சாரங்கபாணி ‘தமிழ் எங்கள் உயிர்” என்று போராடினார்கள். எந்த நாடாக இருந்தால் என்ன, தமிழனம் அங்கே முன்னேற வேண்டும். அங்கே தமிழ் மொழி மேம்பட வேண்டும். தமிழ் மொழிக்கு மதிப்பு ஏற்படுத்த வேண்டும். இப்படி போராடி போராடி தமிழை நிலைநிறுத்துவது என்பது தமிழுக்கு ஒரு போராட்ட களமாகிவிட்டது.


தேர்தலில் பலத்த அடிவாங்கிய அவர்கள் திட்டம் தீட்டி ஒரு செயல் முறையை வகுத்து தமிழர்களை பழிவாங்ப் பார்க்கின்றனர்। சில மாதங்களுக்கு முன் மலாயா பல்கலைகழகத்தில் தமிழை எடுக்க பார்த்தனர்.இப்பொழுது ஒட்டு மொத்த தாய் மொழிக் கல்வியான தமிழ் இலக்கியத்தின் அடிமடியில் கைவைக்கின்றனர். ஏன் இந்த கயமை இவர்களுக்கு?


மலேசிய சட்டத்தில் தாய் மொழி கல்விக்கு இடம் உண்டு. பின் ஏன இவர்கள் பின்புற வாசல் வழியாக வந்து நமது தமிழ் மொழியை அழிக்கப் பார்கின்றனர்?


இவர்களின் கூப்பாடு எல்லாம் “1 மலேசியா” என்பது। ஆனால் செயல் பாடு எப்பொழுது மற்றவர்களை பிரித்து பார்ப்பதுதான். “எஸ்பிஎம் 10 பாடங்கள் தான், முடிவில் மாற்றம் இல்லை” கல்வித் தலைமை இயக்குநர் திட்டவட்டம்”என்ற அறிக்கை மக்கள் ஓசையில் வெளிவந்தது. என்ன இருமார்ப்பு. தமிழர்கள் என்றால் இவர்களுக்கு கிள்ளுக் கீரை என்ற நினைப்பா? தமிழர்களுக்கு மறதி அதிகம். நேற்று அவர்களுக்கு இழைத்த துரோகத்தை இன்று மறந்து விடுவார்கள் என்பதனால இல்லை இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுவிடும் சொரனைக் கெட்ட தனத்தினாலா இவர்கள் எல்லாம் நம்மிடம் விளையாடிப் பார்க்கின்றனர். தமிழுக்கு போராடி தலையிந்த எத்தனையோ தமிழ்ச் சகோதர்கள் நம்மிடமும் உண்டு என்பதை இந்த குள்ள நரிகளுக்கு தெரிவதில்லை போலும். மானம் காத்திட எதிரியின் வேலை மார்பில் ஏந்தி மாய்ந்தவர் கோடி நம்மினத்தில்.


தமிழர்களிடம் ஒரு கெட்ட குணம் உணச்சிக்கு இடம் கொடுத்து அறிவை மழுங்க செய்வோம்। உணர்சியோடு அறிவும் இனைந்து காலவெள்ளத்தையும் கடந்து தமிழ் மொழியையும் தமிழ் இலக்கியத்தையும் காப்பொம். உணர்ச்சி பெருக்கால் இன்று கழுதையை போன்று கத்திவிட்டு நாளை மூலையில் சுருண்டு படுப்பது முறை அன்று, தமிழ் என்ற அந்த உயிர் உணர்ச்சிக்கு என்றுமே ஜீவ நாதமாய் ஓங்கார சத்தமாய் நமது உள்ளத்தில் ஒலித்துக் கொண்டிருக்கவேண்டும்.


இனிய தமிழை இனைந்து காப்போம்

உயிர்த் தமிழை உணர்ந்து காப்பொம்
இதோ எனது கவிதை வரிகள் படித்துதான் பாருங்களேன்........

சோம்பல்முறித்தது போதும்மடா தமிழா ! உன்
சேதி என்ன வேன்று கூறு...
சாதிவெறி போதும்மடா - தமிழ்ச்
சாதி நீ என்று கூறு.....
கூடிச் சேர்ந்திட வேண்டும் - தமிழர்
கூற்றவன் கூட தமிழைப் பழித்தால்
கூடி உதைத்து பந்தாடிட வேண்டும்மடா.....


@மனோகரன் கிருட்ணன்.

December 2, 2009

தமிழா!


தமிழா !
நீ உறங்கும் போது
உன் விழிகளை
பிடுங்கப்பார்கின்றனர்...

நீ
ஊமையாய் வாழும் போது
உன் மொழியை
புதைக்கப் பார்க்கின்றனர்

தமிழா !
நீ நடக்க மறுக்கும் போது
உன் கால்களை
உடைக்க பார்க்கின்றனர்

நான்கு தலைமுறை
கண்ட நீயே
நடுத்தெருவில்........

உன்
தமிழையா
இவர்கள் காக்கப் போகின்றார்கள்?

மாறப்போவது இவர்கள் இல்லை
மாறவேண்டியவன் நீ தான்,,,,,,,,,