November 6, 2009

கைவிடப்பட்ட போராட்டவாதிகள்

கைவிடப்பட்ட போராட்டவாதிகள்

உலகமே வியப்பில் அழ்ந்தது..
மலேசியா திருநாடு அதிர்ச்சியில் உறைந்தது..
என்ன நடக்கும் அடுத்து என்று மக்களிடம் ஒருவித பயம்
ஏன்? எப்படி நடந்தது?.குழப்பத்தில் அரசாங்கம்.
புற்றிசல் போல் தமிழர் கூட்டம்.
புயலாய் புறப்பட்டது தமிழர் தன்மான உணர்வு.
தமிழர்களின் ஒரு நாள் ஆக்கிராமிப்பு. எங்கும் உணர்ச்சி மயம்.
எப்படி தடுப்பது? எப்படி அவர்களை மடக்குவது? என்று காவல் துறை தடுமாறியது.
என்ன நடக்கிறது அமைதி பூங்கவான மலேசிய திருநாட்டில் என்று கேள்வி உலகெங்கும்?
இன்னோரு மே தினமா? இல்லை இனோரு சுகந்திர படை எடுப்பா? இல்லை இல்லை இது ஒரு தமிழர் புரட்சி நிகழ்வா? என்று மயக்கம்.
இரசாயன தண்ணிர் பிச்சடிப்பு. இரசாயன குண்டுத் தாக்குதல். கலக தடுப்பு காவலர்களின் தாக்குதல். தளாரத தமிழ்ப் படை
இரண்டில் ஒன்றை பார்த்துவிடுவோம் என்று தமிழ் இளைஞர்க் கூட்டம்.
இவர்களின் வீரம் மலேசிய காவல் துறைக்கு புரியாத புதிர்।
அவர்களுக்கு அது ஒரு புது அனுபவம்।
காலம் காலமாக அடக்கப் பட்டவர்கள் அடங்க மறுப்பது அவர்களுக்கு பெரும் வியப்பு। அவர்களின் விழி பிதிங்கியது ।புருவம் உயர்ந்தது। அடக்க வந்தவர்கள் அயர்ந்து போனார்கள்॥தமிழர்கள் சளைக்காமல் நின்றனர்.
அழைப்பு அழைந்துக்கொண்டிருந்தது. தமிழர் கூட்டம் கூடிக்கொண்டிருந்தது. ஆண் பெண், சிறுவர் பெரியோர் .இளைஞர் யுவதி.ஒன்று திரண்டனர். சாவுக்கு அஞ்சுவதில்லை தமிழர் கூட்டம்..தன்மான வாழ்வுக்கு தானே இந்த போராட்டம்.
தங்களின் இன்னல்களை.தங்களின் துயரங்களை,தங்களுக்கு இழைக்கப்படும் ஏற்ற தாழ்வுகளை எதிர்த்து போராட ஒரு போராட்ட களமாக மாற்றிக் காட்டினார்கள். தங்களின் வேதனைகளை,சோகங்களை எரிமலையாய் நின்று எதிர்ப்பு குரல் கொடுத்தனர்.
பல போராட்ட வதிகள் கைது ஆனார்கள்.
கைது படலம் தொடங்கியது. போராட்ட தலைவர்கள் பல கமுண்டிங் தடுப்பு முகாமில்.
அரண்டு போனது அரசாங்கம். மிரண்டு போனார்கள் தலைவர்கள். மக்களின் எதிர்ப்புக் குரல் ஒலிக்க தொடங்கியது. பலன் எப்போழுதும் ஜெக ஜோதியாய் வெற்றிக் கொடி ஈட்டும் அரசாங்கம் இரண்டில் ஒன்றில் அறுதிப் பெருன்பான்மை இழந்தது. பல மாநிலங்களை எதிர்க் கட்சிகளிடம் இழந்தது.
அரசாங்க ஆதரவில் குளிர்க் காய்ந்தவர்கள். மக்கள் ஆதரவை இழந்தனர்.
மக்கள் மக்கள் என்று போலிக் கூப்பாடு போட்டவர்களின் சாயம் வெலுக்க தொடங்கியது
இன்னும் கூட அரசாங்கம் தடுமாறிக்கொண்டிருக்கிறது.
என்ன செய்வது? ஏது செய்வது? குழம்பிக் கொண்டிருக்கிறது........
அரசாங்கம் செய்த பெரிய தவறு. தமிழர் நலன்களை சில குள்ளநரிகளிடம் விட்டு விட்டு. எதுவும் கண்டுக் கொள்ளாமல் விட்டது தான். தவறுகளை அப்பொழுதே திருத்தி இருந்தால் இன்றும் அரசியல் நிலைத்தன்மை ஏற்பட்டிருக்கும்.
ஒன்றாய் வாழ்ந்த மக்கள் இன்னும் ஒன்றுப் பட்டிருப்பார்கள். வேற்று தாழ்வுகள் தானே மக்களை பிரிக்கிறது.
மாற வேண்டிய ம இ கா மட்டும் மாறாமல் நிற்கிறது.உலகமே இடிந்து விழுந்தாலும் எனது பட்டம் பதவி, பணம் இதற்காக யார் காலிலும் விழவதற்கு நாங்கள் தயார் என்று பறைச் சாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
இவர்களுக்கு மக்கள் நலம் முக்கியம் அல்ல. தான் சேர்த்து வைத்த சொத்தை பதுக்குவது தான் மிக முக்கியம்.
ம இ கா தலைவனை மாற்ற முனைந்த போராட்டம் இன்று அரசாங்க தலைவனைத் தான் மாற்ற முடிந்திருக்கிறது. பல மோசடிகளை புரிந்த சில தலைவர்கள் இன்னும் மிடுக்காக பவனி வருவது வெட்கக் கேடான விஷயம். தமிழர்கள் செய்த போராட்டம் இன்னும் இலக்கை அடையவில்லை என்பதை பறைச் சாற்றிக் கொண்டிருக்கிறது.
சுடு சொரனை அற்ற ஒரு தலைவனால் போராட்டம் புலம்பிக்கொண்டிருக்கிறது
காலப்போக்கில் போராட்டம் திசை மாறியது। உணர்சி வயப்பட்டா போராட்டவாதிகள் இன்று நீதி மன்ற படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார்கள்। அரசாங்கமும் அவர்களேடு விளையாடிக் கொண்டிருக்கிறது। பகைமையை மறந்து அவர்களுக்கு அன்புக் கரம் நீட்டக் கூடாதா? ஒரே மலேசியா என்பது கண்காட்டி வித்தையா?
தார்மீக கடமைகளை தட்டிக் கழிக்கலாமா அரசாங்கம்?
தமிழர் நலனுக்காக வீதியில் இறங்கி போராடிய சில போராட்டவதிகள் ஏன் தான் போராட்டத்தில் இறங்கினோம் என்ற நிலைமையாகிவிட்டான.
தமிழர் அமைப்புக்களுக்கு ஏன் இந்த மவுனம்? தமிழ் தமிழ் என்று சொல்லி வயிறு வளக்கும் கூட்டம் தானா? எந்த கட்சியாய் இருந்தால் என்ன? எந்த மன்றமாய் இருந்தால் என்ன?
தமிழர்களை காப்பதற்கு ஒன்றுப்பட்டு அரசாங்கத்திடம் போராடலாமே.
கைவிடப் பட்ட போராட்டவாதிகளின் நிலைதான் என்ன?
இவர்களை யார்தான் காபாற்றுவார்கள்?
எத்தனையோ ஆளும் நாடாளமன்ற உறுப்பினர்கள் இருகின்றார்கள்.
எத்தனையோ எதிர்க் கட்சி நாடாளமன்ற உறுப்ப்பினர்கள் இருக்கின்றனார்.
இந்த போராட்டவாதிகளின் உணர்வினால் .அவர்களின் செயலினால் இன்று அரசியல் பதவியை அலங்கரிக்கும் இவர்கள் எதாவது செய்யக் கூடதா?
எத்தனையோ இலச்சங்களை வசுலித்தவர்கள் இவர்களை கொஞ்சம் கண்டுக் கொள்ளக் கூடதா?
நடந்தவை நடந்தவையாகட்டும்......இனி நடக்கப் போவது நல்லவையாகட்டும்.

Post a Comment