November 30, 2009

பால்+உணர்வு


தகப்பன்
இட்ட கழிவு
தாய்
ஏற்ற கழிவு
தன் பங்குக்கு
தானும் இட்ட கழிவு
புனிதம் என்னும்
புது பிறவி எடுத்தது.

தன் கழிவை
பாலாய் ஊட்டி
தன் முற்பிறவி
கழிவையும்
தன் உறவாய் விட்டு

உருவமும் உணர்வும்
தன் கழிவாய் ஈந்து
உயிர் என்னும்
சடப் பொருளை
கழிவாய் தந்து விட்டீரோ.....

மாறாத பதிவை
மோகம் என்னும் சேற்றில்
புதைத்துவிட்டு
செந்தாமரை
பிறக்கவில்லை என்றால்
என்ன நியாயம்?

குடி கோபம் வீரோதம்
காமம் கயமை
இவைகளை
சுக்கில சுரோணிதத்தில்
சேர்த்து வைத்து
கூடி சேர்ந்தால்
பிறக்கும் பதிவு
மனி+இதன் (மனிதன்)
மனி+இதம்
மனிதம் ஆகுமா?

மாறவேண்டியது
பிள்ளைகள் அல்லவே
தாயும் தந்தையும் தான்.....November 26, 2009

அனுபவம்

வைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை।

இரண்டு முன்று நாட்களாக எனது அலுவலக கணிணீ வழியாக சுப.ந்ற்குணம் ஐயா அவர்களுக்கு அவர்களுக்கு எனது மறுமொழியை அனுப்பிக்கொண்டிருந்தேன், எதோ ஒரு காரண்த்தால் அனுப்பமுடியாமல் இருந்தது। ஆனால் மற்றவர்களுடைய் பதிவுகளுக்கு என்னால் மறு மொழி இடமுடிந்தது।அதையே என் வீட்டுக் கணினீயில் இருந்து சில கருத்துக்களை அனுப்பினேன்।ஏற்றுக் கொண்டது।அலுவலகத்தில் இருந்த்து அந்த சில கருத்துக்களை அனுப்பினேன் முடியவில்லை।எனக்கு புரிந்து விட்டது ।யாரோ அனுப்பிய வைரசின் தாக்கம் என்று,

தற்ச்செயலாக என்கண்ணில் பட்டது இந்த அகப்பக்கம்.....சரி முயன்று பார்ப்போமே என்று நினைத்து வின்மணி என்ற இந்த செயலியை எனது கணிணீயில் ஒடாவிட்டேன்। மறு படியும் வந்து எற்கனவே அனுப்பிய் முடியாமல் போன் பின்னுடத்தை மறுபடியும் அனுப்பினேன் என்ன அற்புதம் எனது கருத்து சுப நற்குணம் ஐயா அவர்களின் வலைப்பதிவுக்கு சென்று சேர்ந்தன। எனது உண்மையான அனுபவம்।

இதோ அந்த வலைப்பக்கம்......நீங்களும் சென்று உலா வாருங்கள்....
link;http://www.winmani.com/

ஆச்சர்யமாக இருக்கிறது, வின்மணி வைரஸ் நீக்க சேவைக்கு கிடைத்து வரும் வரவேற்பை பார்க்கும் போது. இதனை உருவாக்கியவர் கேட்டுக்கொன்டதன் பேரில் அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் ஒரு அறிமுகமாகவே இந்த சேவை பற்றி எழுதியிருந்தேன்.
இந்த பதிவை படித்துவிட்டு பல வாசகர்கள் வின்ம்ணி வைரஸ் சேவையை பயன்படுத்திவிட்டு அது மிகச்ச்சிறப்பாக இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்। அவர்களின் உற்சாகமான பின்னூட்டம் மூலமே வைரஸ் நீக்க சேவை மகத்தானதாக இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு சிலர் இதன் முழு வடிவத்தை கேட்டுள்ளனர். இன்னும் சிலர் இது லேப்டாப்பில் சிறப்பாக செயல்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

சந்தையில் வைரஸ் நீக்க மென்பொருள் பல இருக்கின்றன். என்னினும் எதையும் முழுமையானது என சொல்ல முடியாது.அப்ப‌டியிருக்க‌ ஒரு த‌மிழ‌ரால் உருவாக்க‌ப்ப‌ட்ட வைர‌ஸ் நீக்க‌ மென்பொருள் ப‌ன்னாட்டு நிறுவன‌ தாயாரிப்புக‌ளை மிஞ்ச‌க்கூடிய‌தாக‌ இருப்ப‌து ம‌கிழ்ச்சியை த‌ருகிற‌து.
இந்த‌ மென்பொருளின் பின்னே உள்ள‌ நாக‌ம‌ணி என்ப‌வ‌ர் த‌ன்னைப்ப‌ற்றி அட‌க்கத்தோடு குறிப்பிட்டுள்ள‌தை இங்கே த‌ருகிறேன்।–

”இன்று தான் அனைத்து பின்னோட்டங்களையும் பார்த்தேன். முதன் முதலில் இந்த
தமிழனுக்கு மதிப்பளித்து ஒரு பதிவு தந்தீர்கள், என் நோக்கம் அனைவருக்கும் இலவசமாக இது கிடைக்கவேண்டும் என்பது தான்। இந்த வைரஸ் ரீமுவர் பற்றி விரிவாக கேட்டு இருந்திர்கள் சொல்கிறேன்॥என் பல வருட கனவு ஒரு முழுமையான ஆண்டிவைரஸ் கொடுக்க வேண்டும் என்பது நாம் கொடுக்கும்
ஆண்டிவைரஸ் பத்தோடு பதினோன்றாக இருந்து விடக்கூடாது என்ற எண்ணம். பல முன்னனி
ஆண்டிவைரஸ்களால் நீக்க முடியாத வைரஸை மட்டும் கவனத்தில் கொண்டு அதை எப்படி நீக்கலாம் என்று
யோசித்து உருவாக்கப்பட்டுள்ளது। வைரஸின் மூலம் எங்கு என்பதை கண்டு அதை முழுமையாக நீக்கும்.கம்யூட்டருக்கு பாதிப்பை கொடுக்கும் வைரஸை மட்டும் தான் நீக்கும். அது மட்டும் இல்லாமல் கம்ப்யூட்ட்ரின்வேகத்துக்கு தடையாக இருக்கும் மால்வேர் என்று சொல்லக்கூடிய Script -ஐயும் நீக்கும். பல ஆண்டிவைரஸ்-கள்வைரஸ் வந்த பின் செயலாற்றுவதில்லை ஆனால் அப்படிப்பட்ட வைரஸையும் நீக்கும்.

என்னைப்பற்றி:நான் ஒரு Computer Engineer சொந்த ஊர் திருச்செந்தூர் அருகில் உள்ள குலசேகரன்பட்டிணம் , சென்னையில் ஒரு
பிரபலமான கம்பெனியில் Technical Head ஆக வேலைக்கு சேர்ந்து ஒரே மாதத்தில் Project manager ஆக
பதவிஉயர்வு பெற்றேன். ஆனால் அங்கு இருக்கும் போலி ஆங்கில வாழ்க்கை என்க்கு பிடிக்காததால் பதவியை
விட்டு இன்று சொந்த ஊரில் உள்ளேன். எனக்கு புதுமையாக எதாவது செய்து கொண்டிருக்க வேண்டும் என்ற
பேராசை. ஆன்மிகத்தில் எனக்கு அளவு கடந்த ஈடுபாடு உண்டு. உங்கள் பதிவில் என் பெயர் இட்டு இருந்தீர்கள்
தயவு செய்து இனி வேண்டாம். புகழ் என்ற ஒன்று நம்மை பிடிக்காத வரையில் நாம் மனிதராக இருப்போம்
பிடித்துவிட்டால் நாம் மிருகமாக மாறிவிடுவோம் அதனால் தயவு செய்து வேண்டாம். நாம் கொடுக்கும் சேவை
மக்களுக்கு சென்றால் அதை விட வேறு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும்”.–]
‍‍‍‍‍‍‍ஒரு நீண்ட பேட்டிக்கான உத்தேசத்தோடு நான் விவரங்களை கேட்டிருந்த போதும் தன்னைபற்றி மிக சுருக்கமாக குறிப்பிட்டு என மென்பொருள் அதிகமானோரை சென்றடைந்தாலே போதும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.அவ‌ருக்கு ந‌ம் வாழ்த்துக்க‌ள்.
அவ‌ர் மேலும் ப‌ல‌ மென்பொருள் முயற்ச்சிக‌ளில் ஈடுப‌ட்டிருப்ப‌தாக‌ அறிகிறேன்।அவ‌ர் அனும‌தியோடு விரைவில் அது ப‌ற்றியும் விரிவாக‌ எழுதுகிறேன்.

வாச‌க்ர்க‌ளுக்கு ஒரு வேண்டுகோள். வின்ம‌ணி சேவையை ப‌ய‌ன்ப‌டுத்தி பாருங்க‌ள். ந‌ன்றாக‌ இருப்ப‌தாக‌ உண‌ர்ந்தால் த‌ய‌வு செய்து ந‌ண்ப‌ர்க‌ளுக்கு ப‌ரிந்துரை செய்யுங்க‌ள்.
( பார்க்க‌ வைர‌ஸ் நீக்க‌ சேவை பற்றிய என் முந்திய‌ ப‌திவு)।

நன்றி......ஐயா உங்கள் பதிவுக்கு
link;http://cybersimman.wordpress.com/2009/11/17/virus-2/

November 25, 2009

காயகற்பப் பயிற்சி - சித்தர்கள Kayakapa payirchi - siddharkal


காயகற்பப் பயிற்சி - சித்தர்கள Kayakapa payirchi - siddharkal


பிற்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் உயிரைப் பற்றியும், உடலைப் பற்றியும், இரண்டுக்குமிடையே உள்ள உறவு பற்றியும் தெரிந்து கொண்டார்கள்। அதனால் மனிதன் நோயில்லாமல் வாழலாம்; துன்பம் இல்லாது வாழலாம்; அமைதியாக நட்புரிமையோடு அறிவுத் திறமையோடு வாழலாம்; இன்னும் மரணமே இல்லாமலும் வாழலாம் என்பதையும் தெரிந்து கொண்டார்கள்। அதுமட்டுமல்ல। விரும்பியவர்களுக்கு அதற்கான பயிற்சிகளைக் கற்பித்து வந்தார்கள்।

வித்துவை உடலில் சுவற விட்டு, உடல் நலம் காத்து, மன வளம் காத்து, இளமை காத்து, எப்போதும் முதுமை இல்லாது இருக்கும் முறை ஒன்றையும்। இரண்டாவதாக இரசவாதம் மூலமாக முப்பு என்ற முறையையும் கண்டு பிடித்தார்கள். இரசவாத முறை Philosopher Stone என்று மேல் நாட்டில் அனுபவத்திற்கு வந்தது இதை உண்டு விட்டால், முறையாக உடலை விட்டு உயிர் பிரியாது உடலை விட்டு உயிர் பிரிய வேண்டும் என்றால், உடலை விட்டு வித்து வெளியேற வேண்டும். வித்து உடையாமல்; உயிர் பிரியாமல் காத்துக் கொள்வதுதான் முப்பு என்ற மருந்து. அதைச் சாப்பிட்ட பிறகு ஒரு சிக்கல் எல்லாச் சித்தர்களுக்கும் வந்தது. உலகில் 200 வருடம் 300 வருடம் 500 வருடம் கூட வாழ்ந்து விட்டார்கள். எல்லாம் அனுபவித்தாகிவிட்டது. உலகை விட்டுப் போக வேண்டும் என்று நினைக்கிறார்கள் உயிர் போகவில்லை.

உயிரினங்களில் சில இயற்கையாகவே லம்பிகா யோகம் என்பதை செய்து வருகின்றன। பாம்பு, தவளை, உடும்பு போன்ற சில உயிரினங்கள் நாவை மடக்கி மேலே வைத்து அடக்கிக் கொள்ளும்। அந்த மாதிரி நிலையில் பத்துப் பதினைந்து நாட்கள் அப்படியே இருக்கும். தேவையில்லாதபோது உயிரை விட்டு விடும். லம்பிகா யோகம் செய்தால் கொஞ்சம் கொஞ்சமாக உடம்பில் உள்ள உணர்வுகளெல்லாம் நின்றுவிடும். ஆனால் உயிர் போகாது. ஆனால் அத்தகைய ஜீவன்கள் உணவு இல்லாதபோது அந்த நிலையை அடைந்தன. உணவு கிடைக்கிற வாசனை வந்தவுடன், தானாக பழைய நிலைக்கு வந்துவிடும்.


மனிதர்களில் சிலர் லம்பிகா யோகத்தைச் செய்து, உயிர் போகாமல் தடுத்துக் கொண்டார்கள்। அதனாலேயும் உடலைவிட்டு உயிர் பிரியாத ஒரு சிக்கல் ஏற்பட்டது. காரணம் மனிதன் லம்பிகா யோகம் செய்து மயக்க நிலையிலிருந்து திரும்பி வராமல தன்னை மறந்து விடுகிறான். உயிர் இருக்கிறது. ஆனால் உணர்வு தெரிவதே இல்லை. உடனே மற்றவர்கள், இவர் இறந்து விட்டார் என்று கருதி அடக்கம் செய்து விடுகிறார்கள்.அதனால் அப்பயிற்சி நமக்குத் வேண்டியது இல்லை. தேவையும் இல்லை. அத்தகைய சிக்கல்கள் வராமலும் அதே சமயம் உடல் நலத்தைக் காத்து, ஆயுளைப் பெருக்கி, வாழும் காலம் வரைக்கும் நோயின்றி வாழ வைக்கக் கூடியதே யாகும்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி।

November 22, 2009

தாய்
தாய்

நினைவு
தெரிந்த நாள்
முதல்
உன் முகம் தான்
தெரிந்தது எனக்கு

இளமையில் இருந்து
எனது
பாதச் சுவட்டை
பின் தொடந்துக் கொண்டிருக்கிறாய்
எங்கே
நான் வாழ்கையில்
தொலைந்து விடுவேன் என்று....

இரவும் பகலும்
இமைக்காத
உன் இமைகள்
எனக்காக
கண்ணீர் துளிகளை
சிந்துகின்றன

இந்த
வாழ்கை பயணத்தில்
முட்ப் பூக்காளாய்
பூத்துக் கிடக்கிறது
உனது
காலடி சுவடு

ஒரு நாளாவது
உனக்காக அழுதிருக்கின்றாயா?
எங்கள் சுகம் தன்
பெரித்தென்று நினைத்த நீ
வேறு எதுவும் கேட்பது இல்லையே

தியாகத் தீ
என்பது தெரியும்
தீயில் துடிப்பது தான்
உந்தன் வாழ்க்கையா? தாயே!

எங்களை
வாரி அனைக்கும் பொழுது
இந்த வாழ்க்கை
முட்க்கள்
வருந்தம் தேய்ந்த
உன் முகத்தை
இரணப்படுத்தி விடுகின்றன.

November 20, 2009

தவப் பயணம்தவப் பயணம்

மனம் என்னும் அறிவு
தியானத்தில் திளைத்திருக்க
மவுனத்தின் காலம் விரிந்திருக்க
பிரம்மம்மாய் தவப் பயணத்தை
தொடங்கியது என் மனம்

பசுமை என்னும்
பூமி தாய்
பச்சைக் கம்பளத்தை விரிக்க

என் மனம்
மேலே எழும்பித் திரிய
மேகக் கூட்டங்கள்
நீர் விழ்ச்சியின்
பேர் இரைச்சலில்॥,,,,,,,

இன்னும் இன்னும்
மேல் எழும்ப
பூமி பந்து
வெளிர் நீலமாய்
சிறுத்துக் கொண்டு
போனது .....

என்
மன வேகத்தில்
வெண்நிலவும்
என் காலடியில்
விழ்ந்தது

என் மனம்
அதிலே மிதந்தது
வெண்மை
வழி எங்கும்
வழிந்தது
என் மனமோ
விரிந்துக்கொண்டே போனது.........

இளம் சூரியன்
எட்டிப் பிடிக்க
என் மனம் விரைந்தது

ஒளி வேகத்தில்
சூரியனை
சுற்றி வந்த
என் மனம்
பிரபஞ்ச பயணத்தை தொடந்தது.....

பூமியும் நிலவும் சூரியனும்
சிறுப் புள்ளிகளாய்
கரைந்துபோனது

ஒளிர்ந்து கொண்டிருக்கும்
கோள்களும்
நட்சத்திரங்களும் பால் வீதியும்
என் முன்னே மிதந்து வந்தது
பரமன் பள்ளிக் கொண்ட
பாற்கடலோ ? பால் வீதியோ?

அற்புதங்கள் ஒன்று சேர
அண்டச்சாரத்தின் அம்சங்கள்
ஒளிர்ந்து மிளிர
ஆகா அற்புதம் அற்புதம்
மனம் குதுக்களிக்க
சக்தி களம்
என் மனக் கண்ணில் பட்டது

மனம் இலவம் பஞ்சாய்
மிதந்தது............

எங்கிருந்தோ ஒரு கருங்கோடு....
என் மனம் தாண்டிச் சென்றது......
சுழர்ச்சியின் வெளிப்பாடு
நீண்டு செல்லும்
அந்த பாம்பின்
பெயர் தான் என்ன?
இராகு கேதுவா?

இருண்ட குழியில்
பிரமாண்டம்
மாபெரும் காந்த அலைகளால்
ஈர்க்கப் பட்டு
அந்த இடம் சக்தி களமாய்
அல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது
என் மன பயணம்
தொடந்தது

எங்கும் கருமை
எங்கும் அமைதி
எங்கும் புனிதம்
எதுவும் ஏகாந்தம்
எதுவும் ஆனந்தம்

பிறவி என்னும்
பெருங்கடல்
கடந்த என் மனம்

ஆதியும் அந்தமும் அற்ற
ஆதி பிறப்பிடத்தை நாடியது
ஜீவன் சமம் ஆதியாகும் (சமாதி)
இருப்பிடத்தில்
சங்கமம் ஆனது

இருட்டறைப் போன்று
மயான அமைதியில்
மன அமைதி கொள்ளத் தொடங்கியது
தொடர்ந்து வந்த பாதை
சிவ பாதமாய்......
சிவ லோகமாய்
மீண்டும் மீண்டு
வந்த தூய்மை
கரு மையத்தை
தேடி அலைந்த இடம்
இது தான் சிவ களம்.
தவ களமாய்

என் மனம்
ஆழ்ந்த மவுனத்தில்
அகப்படுக் கொண்டது.
பிரபஞ்சம்
அந்த மவுனத்தில்
விரிந்துக் கொண்டு போகிறது.....
அன்புடன் மனோகரன்


வாழ்க வளமுடன்


November 18, 2009

அலையில் ஆடும் மாலை

அலையில் ஆடும் மாலை
ஆசை வாழ்வின் நிலை
சுவையில் கூடும் இனிமை
சுக வாழ்வுக்கு பகைமை

உள்ளம் எல்லாம் கள்ளம்
உறுகுழைந்த உறவுகளின் இல்லம்
பள்ளம் போல் வாழ்க்கை
பாய்ந்தோடும் அருவியாம்

எண்ணம் எல்லாம்
எரிகின்ற தீ
உருகுகின்ற நெய் எல்லாம்
உணர்வுகளாய் கொதிக்கின்றன.

கலைந்த மேகம் எல்லாம்
கவிதை மழை பொழிகின்றன
கருவை சுமந்தவர்கள்
கனவை களைந்து நிற்கின்றனர்.

விதிகள் எல்லாம் பல நதிகளாய்
விரைந்து வருகின்றன
தனிமைகள் தொடர்கின்றன
தலைவிதி நம்மை பார்த்து சிரிக்கின்றன.

இதயம் இல்லா மனிதனிடம்
இரக்கம் என்பது இல்லை
சருகுகள் போல் வாழ்க்கை
சமைக்க துடிகிறது காலம்

கோலம் இடும் வாழ்க்கை
கோபுரம் ஆகுமா?
காற்றடித்தால் அணையும்
கற்பூரமா இந்த வாழ்க்கை?மனோகரன் .

November 15, 2009

துளிர்விடும் தூறாலாய்பெண்னே.......
நினைவு என்னும் ஒளிக் கீற்று
உன் வாசக் காற்றில்
வழித் தவறி
என்
மனக் கதவை தட்டுகின்றன.

கனவு என்னும்
கற்பனை உலகு
உன்
சுவசாக் காற்றில்
சூடுப் பிடிக்கின்றன.....

வாலிப பாதையில்
துளிர்விடும் தூறாலாய்
என் மனம் ......
காதல் என்னும்
மொட்டை அனைத்து நிற்கிறது.

ஒரு நிமிட வார்த்தைகளுக்கு
வாழ்க்கை என்றால்
வாழும் காலம் எல்லாம்
உன்
காதல்
போதைதான் எனக்கு.......

November 12, 2009

மலர் என்னும் மென்மை மதில் சுவராய் ஆகுமா?


பேய்களின் கூக்குரலில்
வேதங்கள் புனிதப் படுவதில்லை
நரிகளின் ஓலங்களினால்
நற்ச் செயல் பிறப்பதில்லை

சிலுவைகளை சுமப்பதினால்
நீங்கள் சுகப்படுவதில்லை
போகங்களை மறுப்பதினால்
நீங்கள் யோகியவதில்லை

போதி மரத்தினால்
புத்தன் யோக்கிவனாய் ஆனதில்லை
சிந்தனை செய்து
தியாகங்களை செய்து
மனிதனை மதிக்க தெரிந்தனால்
சித்தன் புத்தன் ஆனான்......

சிறகுகள் இல்லாமல்
சிந்தனை சிறப்பது உண்டு
உணர்வுகள் இல்லாமல்
ஊக்கம் பிறப்பதில்லை

விண் முகிலைக் கூட
மலைகள் தடுக்கும்
வின்னை கடந்து
மழைத்துளிகள்
மணித் துளிகளாய்
மண்ணில்
விழுவதில்லையா?

கரைந்து போன மழைத் துளிகள்
ஒன்றாய் சேர்ந்து
கடல் அலைகளாய்
ஆர்ப்பரிப்பது இல்லையா?

முடிந்து போன இரவுக்கு வருத்தலாம்
மறைந்து போன நிமிடத்திற்கு வருந்தலாம்
கலைந்து போன நினைவுக்கு வருந்தலாம்
காட்டாறு போல வரும்
எதிர்ப்பயை கண்டு அஞ்சலமா?

சுவர் என்னும் சித்திரம்
குட்டிச் சுவராய் ஆகுமோ?
மலர் என்னும் மென்மை
மதில் சுவராய் ஆகுமோ?
மனத் தின்மை உண்டானால்
மதிக் கலங்கமுடியுமா?

புளிப்பில்லாமல் மாங்காய்யா?
புகையில்லாமல் நெருப்பா?
துடுப்பு இல்லாமல் படகா?
துயர் இல்லா வாழ்க்கையா?

இரவுக்கு ஒரு நிலவு
உங்கள் உயிருக்கு எது உறவு?
வாழ்க்கை என்னும் பயிருக்கு
வழங்குங்கள் ஊக்கம் என்னும் உயிர்

முயற்சிக்கு முகவரி தேடுங்கள்
முடிவில்லா பயற்சிக்கு
உங்கள் வாழ்க்கையை அர்பனியுங்கள்

கனவுகளை கருத்தாக்குங்கள்
நினைவுகளை நிச்சயமாக்குங்கள்
உணர்வுகளை உருவாக்குங்கள்
உலகம் உங்கள் காலடியில்

இனி
ஒரு வாழ்க்கை
யோகமும் போகமுமாக

இனி
ஒரு வாழ்க்கை
வேகமும் விவேகமும்மாக

இனி
ஒரு வாழ்க்கை
வசந்தமாகவும் சுகந்தமாகவும்

இனி
ஒரு வாழ்க்கை
வாழ்க வளமுடன்
என்றாகட்டும்,,,,,

அன்புடன்
மனோவியம் மனோகரன்


November 6, 2009

கைவிடப்பட்ட போராட்டவாதிகள்

கைவிடப்பட்ட போராட்டவாதிகள்

உலகமே வியப்பில் அழ்ந்தது..
மலேசியா திருநாடு அதிர்ச்சியில் உறைந்தது..
என்ன நடக்கும் அடுத்து என்று மக்களிடம் ஒருவித பயம்
ஏன்? எப்படி நடந்தது?.குழப்பத்தில் அரசாங்கம்.
புற்றிசல் போல் தமிழர் கூட்டம்.
புயலாய் புறப்பட்டது தமிழர் தன்மான உணர்வு.
தமிழர்களின் ஒரு நாள் ஆக்கிராமிப்பு. எங்கும் உணர்ச்சி மயம்.
எப்படி தடுப்பது? எப்படி அவர்களை மடக்குவது? என்று காவல் துறை தடுமாறியது.
என்ன நடக்கிறது அமைதி பூங்கவான மலேசிய திருநாட்டில் என்று கேள்வி உலகெங்கும்?
இன்னோரு மே தினமா? இல்லை இனோரு சுகந்திர படை எடுப்பா? இல்லை இல்லை இது ஒரு தமிழர் புரட்சி நிகழ்வா? என்று மயக்கம்.
இரசாயன தண்ணிர் பிச்சடிப்பு. இரசாயன குண்டுத் தாக்குதல். கலக தடுப்பு காவலர்களின் தாக்குதல். தளாரத தமிழ்ப் படை
இரண்டில் ஒன்றை பார்த்துவிடுவோம் என்று தமிழ் இளைஞர்க் கூட்டம்.
இவர்களின் வீரம் மலேசிய காவல் துறைக்கு புரியாத புதிர்।
அவர்களுக்கு அது ஒரு புது அனுபவம்।
காலம் காலமாக அடக்கப் பட்டவர்கள் அடங்க மறுப்பது அவர்களுக்கு பெரும் வியப்பு। அவர்களின் விழி பிதிங்கியது ।புருவம் உயர்ந்தது। அடக்க வந்தவர்கள் அயர்ந்து போனார்கள்॥தமிழர்கள் சளைக்காமல் நின்றனர்.
அழைப்பு அழைந்துக்கொண்டிருந்தது. தமிழர் கூட்டம் கூடிக்கொண்டிருந்தது. ஆண் பெண், சிறுவர் பெரியோர் .இளைஞர் யுவதி.ஒன்று திரண்டனர். சாவுக்கு அஞ்சுவதில்லை தமிழர் கூட்டம்..தன்மான வாழ்வுக்கு தானே இந்த போராட்டம்.
தங்களின் இன்னல்களை.தங்களின் துயரங்களை,தங்களுக்கு இழைக்கப்படும் ஏற்ற தாழ்வுகளை எதிர்த்து போராட ஒரு போராட்ட களமாக மாற்றிக் காட்டினார்கள். தங்களின் வேதனைகளை,சோகங்களை எரிமலையாய் நின்று எதிர்ப்பு குரல் கொடுத்தனர்.
பல போராட்ட வதிகள் கைது ஆனார்கள்.
கைது படலம் தொடங்கியது. போராட்ட தலைவர்கள் பல கமுண்டிங் தடுப்பு முகாமில்.
அரண்டு போனது அரசாங்கம். மிரண்டு போனார்கள் தலைவர்கள். மக்களின் எதிர்ப்புக் குரல் ஒலிக்க தொடங்கியது. பலன் எப்போழுதும் ஜெக ஜோதியாய் வெற்றிக் கொடி ஈட்டும் அரசாங்கம் இரண்டில் ஒன்றில் அறுதிப் பெருன்பான்மை இழந்தது. பல மாநிலங்களை எதிர்க் கட்சிகளிடம் இழந்தது.
அரசாங்க ஆதரவில் குளிர்க் காய்ந்தவர்கள். மக்கள் ஆதரவை இழந்தனர்.
மக்கள் மக்கள் என்று போலிக் கூப்பாடு போட்டவர்களின் சாயம் வெலுக்க தொடங்கியது
இன்னும் கூட அரசாங்கம் தடுமாறிக்கொண்டிருக்கிறது.
என்ன செய்வது? ஏது செய்வது? குழம்பிக் கொண்டிருக்கிறது........
அரசாங்கம் செய்த பெரிய தவறு. தமிழர் நலன்களை சில குள்ளநரிகளிடம் விட்டு விட்டு. எதுவும் கண்டுக் கொள்ளாமல் விட்டது தான். தவறுகளை அப்பொழுதே திருத்தி இருந்தால் இன்றும் அரசியல் நிலைத்தன்மை ஏற்பட்டிருக்கும்.
ஒன்றாய் வாழ்ந்த மக்கள் இன்னும் ஒன்றுப் பட்டிருப்பார்கள். வேற்று தாழ்வுகள் தானே மக்களை பிரிக்கிறது.
மாற வேண்டிய ம இ கா மட்டும் மாறாமல் நிற்கிறது.உலகமே இடிந்து விழுந்தாலும் எனது பட்டம் பதவி, பணம் இதற்காக யார் காலிலும் விழவதற்கு நாங்கள் தயார் என்று பறைச் சாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
இவர்களுக்கு மக்கள் நலம் முக்கியம் அல்ல. தான் சேர்த்து வைத்த சொத்தை பதுக்குவது தான் மிக முக்கியம்.
ம இ கா தலைவனை மாற்ற முனைந்த போராட்டம் இன்று அரசாங்க தலைவனைத் தான் மாற்ற முடிந்திருக்கிறது. பல மோசடிகளை புரிந்த சில தலைவர்கள் இன்னும் மிடுக்காக பவனி வருவது வெட்கக் கேடான விஷயம். தமிழர்கள் செய்த போராட்டம் இன்னும் இலக்கை அடையவில்லை என்பதை பறைச் சாற்றிக் கொண்டிருக்கிறது.
சுடு சொரனை அற்ற ஒரு தலைவனால் போராட்டம் புலம்பிக்கொண்டிருக்கிறது
காலப்போக்கில் போராட்டம் திசை மாறியது। உணர்சி வயப்பட்டா போராட்டவாதிகள் இன்று நீதி மன்ற படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார்கள்। அரசாங்கமும் அவர்களேடு விளையாடிக் கொண்டிருக்கிறது। பகைமையை மறந்து அவர்களுக்கு அன்புக் கரம் நீட்டக் கூடாதா? ஒரே மலேசியா என்பது கண்காட்டி வித்தையா?
தார்மீக கடமைகளை தட்டிக் கழிக்கலாமா அரசாங்கம்?
தமிழர் நலனுக்காக வீதியில் இறங்கி போராடிய சில போராட்டவதிகள் ஏன் தான் போராட்டத்தில் இறங்கினோம் என்ற நிலைமையாகிவிட்டான.
தமிழர் அமைப்புக்களுக்கு ஏன் இந்த மவுனம்? தமிழ் தமிழ் என்று சொல்லி வயிறு வளக்கும் கூட்டம் தானா? எந்த கட்சியாய் இருந்தால் என்ன? எந்த மன்றமாய் இருந்தால் என்ன?
தமிழர்களை காப்பதற்கு ஒன்றுப்பட்டு அரசாங்கத்திடம் போராடலாமே.
கைவிடப் பட்ட போராட்டவாதிகளின் நிலைதான் என்ன?
இவர்களை யார்தான் காபாற்றுவார்கள்?
எத்தனையோ ஆளும் நாடாளமன்ற உறுப்பினர்கள் இருகின்றார்கள்.
எத்தனையோ எதிர்க் கட்சி நாடாளமன்ற உறுப்ப்பினர்கள் இருக்கின்றனார்.
இந்த போராட்டவாதிகளின் உணர்வினால் .அவர்களின் செயலினால் இன்று அரசியல் பதவியை அலங்கரிக்கும் இவர்கள் எதாவது செய்யக் கூடதா?
எத்தனையோ இலச்சங்களை வசுலித்தவர்கள் இவர்களை கொஞ்சம் கண்டுக் கொள்ளக் கூடதா?
நடந்தவை நடந்தவையாகட்டும்......இனி நடக்கப் போவது நல்லவையாகட்டும்.

November 4, 2009

விழி போல்..... மொழி


விழி போல்..... மொழி
ஒளி போல் தமிழ்


இதுவா இவள் விழி
இமை மூடா விடிவெளி
இதுவா இவள் மொழி
இனிமை என்னும் தமிழ் மொழி

இவள் விழியின் ஒளி
இளமையின் மொழி
தமிழ் மொழியின் சிமிழ்
தாமரையின் குமிழ்

கருவண்டு அவள் விழி
கலை என்னும் பெரும்வெளி
அவள் மொழிந்தாள் வாய் மொழி
அமிழ் தென்னும் தமிழ் தாய் மொழி

விழி ஒரம் அலைப் பாயும்
கடல் அலையும் கவி பாடும்
இவள் பாண்டிய தென் முத்து
தமிழ் அலையால் விரியும் பூஞ் சிட்டு.

தமிழ் அருவியாய் பாய்ந்தோடும்
தன்னொளி நிலவு தவழ்த்து வரும்
இவள் முகம் இனிமை தரும் திருமுகம்
இன்பத் தமிழ் தரும் அமுத முகம்.

ஞாலத்தில் இவளை போல்
ஞாயிரும் இல்லை
தமிழ் யாகத்தில்
இவள் ஒரு எரியும் தீப் பிழம்பு

குளிர்க் காற்றாய்
தவழ்ந்து வருவாள்
தமிழ் மூச்சை
முகிழ்ந்து வருவாள்
இவள் விழியோ தமிழ் நீருற்று
இதயமோ இனிய தமிழ் ஆற்று
எங்கள் வாழ்வை தமிழால் களைப்பாற்று

November 2, 2009

சொல்லின் சுவை

அமிழ்து என்று சொன்னால்
ஆண்றோர்களின் அகம் மகிழ வேண்டும்
தமிழ் என்று சொன்னால் - நல்ல
தகமை மிக்க சாண்றோர்களாக வேண்டும்

நட்பு என்று சொன்னால்
நல்ல நண்பன் வேண்டும்.
உறவு என்று சொன்னால் - நல்ல
உள்ளம் வேண்டும்.

அன்பு என்று சொன்னால்
அண்ணல் காந்தியாக வேண்டும்
பண்பு என்று சொன்னால் - நல்ல
பணிவு வேண்டும்.

கனவு என்று சொன்னால்
காட்சிகள் உலாவ வேண்டும்
மகிழ்ச்சி என்று சொன்னால் - நல்ல
மாட்சிகள் வாழ்வில் மலர வேண்டும்


தொண்டன் என்று சொன்னால்
தொண்டுச் செய்ய வேண்டும்.
தலைவன் என்று சொன்னால் - நல்ல
தகுதி வேண்டும்

கணவன் என்று சொன்னால்
கனிந்த இதயம் வேண்டும்
மனைவியை காக்கும் - நல்ல
மாண்பு வேண்டும்


இல்லாள் என்று சொன்னால்
இல்லம் இனிக்க வேண்டும்
மனைநலம் என்று சொன்னால் - நல்ல
மனைவி இன்புற வேண்டும்.

சேய் என்று சொன்னால்
செழுமை மிகு தாய்மை வேண்டும்
தாய் என்று சொன்னால் - நல்ல
தரணி போற்றும் தாய் அன்பு வேண்டும்.


எழில் ஜோதி என்று சொன்னால்
ஏகாந்தம் மிகுந்திருக்க வேண்டும்
இறைவன் என்று சொன்னால் - நல்ல
இயல்புகள் மிளிர வேண்டும்

so