October 11, 2009

இறப்பு அது ஒரு சிறப்பு
இறப்பு அது ஒரு சிறப்பு.
சவம் சிவமாகும், சிவம் ஜோதியாகும்

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு।இறப்பும் பிறப்பும்। கனப்பொழுது நிகழும் நிகழ்வு.. வாழும் வாழ்க்கை இருக்கிறதே அப்பப்பா சொல்லி மாளாத துன்பங்கள் துயரங்கள் ஒரு தொடர்க் கதையாய் தொடர்ந்துகொண்டிருக்கும். போதுமடா சாமி இந்த வாழ்க்கை எம்மை இப்பொழுதே எடுத்துக்கொள் என்று இறைவனிடம் மன்றாடு அன்பர்கள் தான் நிறைய உண்டு. போதும் போதும் துன்பங்கள் என்பது போல இன்பம் வரும் போது இறைவனை மறந்து விடுகின்றனர்.அது மனித இயல்புதானே. வாழ்க்கை சுழலில் சிக்கி தவிக்கும் மனிதனுக்கு பிறவி பெருங்கடலை கரை சேர்க்கும் கயிருதான் இந்த இறப்பு.காயமே பொய்யாட காற்றடைத்த பையாடா என்று சித்தர் மொழி பகர்வது போன்று மனித உடல் வெறும் காற்றால் நிரப்பப்பட்ட பை। இந்த காற்று இல்லை என்றால் மனித உடல் வெறும் ஜடம் மட்டும் தான். உறங்குவது போன்றதே இந்த இறப்பு.நெருதல் உளன் ஒருவன் இன்றில்லை, என்னும் பெருமை உடைந்துஇல் வுலகு।நேற்று உயிரோடு இருந்தார், இன்று இல்லாது போயினன் என்று சொல்லும் பெருமையைத் தனக்குரியதாகக் கொண்டது இவ்வுலக இயல்பு. தனக்குரிய பெருமையை அது விட்டு விடாது தவறாமல் செயற்ப்படுத்தும்.
இறப்பு எப்பொழுது வரும் என்று யாரால் பகர முடியும்? உறங்குவது போன்றதே இந்த இறப்பு। கருவறையில் உறக்கம், இந்த உலகில் பிறந்தவுடன் விழிப்பு.மறுபடியும் மீழா துயில், அது தானே இறப்பு. பிறந்து பிறந்து இறப்பதினில் போதும் போதுமே, பிறவி நீங்கி உன்பாதம் சேர வேண்டும் என வேண்டுகிறார் ஒரு தெய்விக கவிஞர். அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது என்றார் ஒளவை.பிறந்து விட்டோம், வாழ்ந்து தான் ஆகவேண்டும்। ஒரு நாள் இறந்தும் ஆகவேண்டும். மனிதன் வையத்துள் நல் வாழ்வு வாழ்ந்தால் வானுறையில் தெய்வத்திற்கு சமமாக மதிக்கப்டுவான். இறந்த பிறகும் எவர் ஒருவர் சிறப்பாக மதிக்கப்படுகின்றரோ அவர் இந்த உலக பேரேட்டில் வரவு வைக்கப்படுவார். நடமாடும் ஜடமாய் வாழ்ந்து, சவமாய் உயிர் பிரிந்து சிவமாய் சீவனை உயர்ந்து நின்று, வான் ஜோதியில் கலப்பதுதானே இறப்பு.இறப்பு என்றவுடன் இந்த ஆண்டு முதலில் என்னைப் பாதித்த ஒரு உயிர் இழப்பு எனதருமை அண்ணன் மகன்।என்னுடன் வாழ்ந்தவன்.எனது தொழிழுக்கு உதவியாய் இருந்தவன். இதோ வருகிறேன் என்று சொல்லி சென்றவன்.திரும்பாமலே இறை அடியை சேர்ந்து விட்டான்.இன்று வரை அந்த பாதிப்பு எனக்கும் என் மனைவிக்கும் உண்டு. மகன் என்றால் அவனை போல் ஒரு அன்புள்ளம் கொண்ட நல்ல மகன் எனக்கு வேண்டும் என்று அந்த எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகின்றேன். நல்ல மனம் படைத்தவர்களை ஏன் தான் இறைவன் சீக்கிரமாய் அழைத்துக் கொள்கிறனோ? அந்த பாதிப்பு இன்னும் எங்களின் நிழலாய் தொடர்கிறது.ஏன் இந்த விளையாட்டு இந்த இறைவனுக்கு?இந்த வாரம் என் சொந்தத்தில் இரண்டு இறப்பு। ஒருவர் என் பெரிய அன்னை மற்றோருவர் என் சித்தப்பா இந்த வார முதலிலும் என் பெரிய அன்னை. 95 முதியவர்,என் அப்பாவின் அண்ணனின் மனைவி.பேரன் பேத்திகளை பெற்ற மகராசி. கிள்ளான் உத்தமாவில் தனது மகன் வீட்டில் காலாமானர். நேற்று 10.10.2009 தில் என் சித்தப்பா அவரை நாங்கள் நைனா என்று தான் அழைப்போம். சா ஆலம் செக்சன் 18னில் அவரின் மகள் வீட்டில் இறந்து போனார். நல்ல தரமான மனிதர்.வெள்ளைக்காரரிடம் சமையல் வேலைப் பார்த்தவர்.நல்ல சிவத்த முகம் நல்ல குண இயல்போடு வாழ்தவர். அவரின் மனைவி அதாவது என் சின்னமா இந்த வருட முதலில் இறந்து போனார். அவர்கள் இருவரும் நல்ல கருத்தொத்த தம்பதியினார். நல்ல மனிதரின் செயல் குணம் தான் மற்றவர்களின் வாழ்க்கைக்கு வழிக்காட்டி.அவர்களின் இறப்புக்கு ஆழ்ந்த அனுதாபம்! இறந்தது அவர்களின் உடலா இல்லை அவர்களின் ஆன்மா? எதுவெண்று எனக்கு தெரியவில்லை। உடல் அழிய கூடியது, ஆன்மா அழிவில்லாதது. அழிவில்லாத ஆன்மாவை வாழ்த்தி வணங்குவோம்.மானிட வாழ்வின் அது ஒரு விடுதலை நாள். இறப்பு மனித வாழ்வின் சிறப்பு. இறந்தவர்களை பெருமையுற பேசுவது தமிழர் வாழ்வியலின் சிறப்பாகும்.

Post a Comment