October 6, 2009

பிரம்ம ஞானி பாரதி.


பிரம்ம ஞானி பாரதி।


“கவிதை எழுதுபவன் கவியன்று।

கவிதையே வாழ்க்கையாக உடையோன்,

வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி “


- என்றார் மகா கவி பாரதி.இறப்பிலும் பிறப்பிலும் உயர்ச்சிறப்பாய் வாழ்ந்து காட்டிய உலக கவிகளில் சிறந்த கவி மகா கவி பாரதியார். எண்ணிலும் எழுத்திலும் சொல்லிலும் செயலிலும். தான் நினைத்ததை நினைத்தவாறு செய்துக் காட்டிய செயல் வீரர்.


தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ? “
என்று எவ்வளவு தன்னம்பிக்கையாய் கேள்வி எழுப்பிகிறார்? அவன் தானே கர்ம வீரன்।


“காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்; நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை; நோக்க நோக்கக் களியாட்டம். “
என்று குதுகளிக்கும் பாரதியார்।

மனுச சாதி மட்டும் தான் நீ வேறு, நான் வேறு என்பான். உயர்ந்தவன் தாழ்தவன் என்ற பாகுபாடு, மனு குலத்தில் வர்ணாசிரமத்தை வலிந்து தினித்து மகா பாதக செயல்களை, தீண்டாமை என்னும் பெயரில் புகுத்தி கொடும் செயல்களை செய்வான், ஆனால் மிருகங்கள் தன் இனத்தோடு இனமாய் கூடி குளாவி உயர்தவன் தாழ்ந்தவன் என்ற ஏற்ற தாழ்வு பார்ப்பது கிடையா! நீயும் நானும் ஒன்று என்னும் பிரம்மம் ஞானம்। உடலால் வேறுப்படிருக்கலாம் உள்ளத்தால் உணர்வாள் மாறுப்படிருக்கலாம்।ஆனால் உயிரால் நான் அனைத்து ஜீவராசிகளைப் போன்றதே என் உயிர், நான் பிரம்மம்। உயிர்கள் மட்டும் அல்ல,அனைத்து பிரம்மம். கானும் மலையும் பிரம்மம். கடல் நீரும் பிரம்மம். நோக்கும் திசை எல்லாம் பிரம்மம் என்று தன்னையே பிரம ஞானியாய் கான்கிறான் பாரதி.


“சாதிகள் இல்லையடி பாப்பா! குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!
நீதி,உயர்ந்தமதி,கல்வி- அன்புநிறைய உடையவர்கள் மேலோர்।”

மன்னுயிரையும் தன்னுராய் போற்றும் பக்குவம்।தன்னைப்போன்று பிறரையும் பிரம்மம்மாய் பார்த்து।அவர்களுக்கும் குரல் கொடுக்கும் ஒரு சித்தன் தான் பாரதியார்। யாருக்கும் தான் தாழ்ந்து போக கூடாது। யாருக்கும் தலைவாணங்கா கவிஞனின் திட நெஞ்சப் பண்பு। அதே சமயம் தன் இனத்தின் ஒரு பகுதியினார் கூனி குறுகி சிறுமைப் பட்டு வாழ்வது கண்டு ‘நெஞ்சு பொறுக்கிதிலையே இந்த நிலைக்கெட்ட மனிதரை நினைந்து விட்டால்।” என்று பாடியபாரதி,


”அஞ்சி அஞ்சி சாவார் அவர் அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே!! வஞ்சனைப் பேய்கள் என்பார் இந்த மரத்தில் என்பார் அந்த குளத்தில் என்பார்!” ...

என்று நெஞ்சம் வெதும்புகிறார்। நீயும் பிரம்மம் நானும் பிரம்மம் நமக்குள் ஏன் ஏற்ற தாழ்வு? என்று வினா எழுப்பி அவர்களுக்கும் பூனால் இட்டு தன்னைப் போன்று உயர் நிலைக்கு அழைத்து செல்கிறார்।


பாரதியாருடைய கருத்தியலின்படி பரம்பொருள் எல்லாப் பொருள்களிலும் உள்ளும் புறமும் புகுந்து நிரம்பியுள்ளது, செயலில் உள்ளது, ஒவ்வொரு தனிப்பட்டதிலும் அதுவே பிரவேசித்துள்ளது, தனிப்பட்டவைகளும் உண்மை, தனிப்பட்ட ஆத்மாவானது பிரம்மத்தின் பிரதிபலிப்பு அன்று, பரம்பொருளே அப்படி உள்ளது என்பதுவே பாரதியாரது சிறப்பியல்பு, இதுவே அவரிடத்தில் பக்குவம் கொண்ட தத்துவம்,அதன் மரபு।


“விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும் மேவு பராசக்தியே!”

உலகப்பொருள்கள், செயல்கள், பண்புகள், விதிகள் எல்லாம் உண்மை, நித்தியம், சத்தியம் இவையெல்லாம் பரசிவ வெள்ளம், இறைவெள்ளம், உள்ளும் புறமும் ஒன்றுக்கொன்று வேற்றுமை முரணற்றுப் பாய்ந்து ஒரே செயலாக ஊற்றாய்ப் பொழிவது, தனித்த ஒரு சுயசெயல், சுயதீர்மானம், சுய உத்தரவாதம் என்பன இல்லை, பலவாய் வேற்றுமைப்பட்டிருப்பது என்பதுவே நீக்குவதற்கு உரியது.


பிறப்பு என்பது பாபமானதன்று, ஏனெனில் அது இறையிலிருந்து உண்டாகிறது, உலகை நேசித்திருத்தல் என்பது தீமையோ அறியாமையோ அன்று। ஏனெனில் இறையின் இருப்பே இப்படியாக இருக்கிறது, இறப்பு என்பது தண்டனையன்று, ஏனெனில் இயலுலகப்பொருள்களில் இறைவனை உணரும்போது அதனோடு ஒன்றாகிறது, பிறந்து இருந்து மறையும்போது சந்ததித்தொடர்ச்சியைத் தருவது இறை நிலையின் புதுப்பித்துக்கொள்ளும் செயல்தன்மையே ஆகும்। அகத்தில் உள்ளதே புறத்திலும் உள்ளது, அகமும் புறமும் முரணானவையல்ல என்பதிலேயே பாரதியின் தத்துவக்கட்டமைப்பின் சிறப்பும் உள்ளது.


பாரதியின் பாடல்களில் சமுக நீதிக்கும், சமுக மறுமலர்ச்சிக்கும் வித்திட்டுள்ளது போன்று,இறை ஞானம் மட்டும் அல்ல,இறை தத்துவத்தை கூட அவனுடைய பாடல்களில் கானலாம்.


அவன் ஒரு பிரம்ம ஞானி।


Post a Comment