October 2, 2009

எனக்கும் சில அடிமைகள் வேண்டும்


இது விமர்ச்சனம் அல்ல, சில கிறுக்கல்கள் மட்டும்.


//"சில நூற்றாண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட சித்தாந்தம் இது। மனிதர்களின் சிந்தனை-மனம்-சுற்றம் எனும் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு அமைவது. எல்லா மனிதர்களுக்குமே உணர்ச்சி என்பது இயல்பான ஒன்றாக இருக்கிறது. அப்படி இருக்க ஓர் எதிர்வினைக்கு அல்லது வெளிப்பாட்டுக்கு சிந்தனை முக்கியமா அல்லது உணர்ச்சி முக்கியமா என ஓர் உடனடி தீர்வு காண முடியுமா?"


வருங்கால இயல் என்பது எதிர்க்காலத்தில் என்ன நிகழும் என்பதை கதைகளிலே அல்லது தீர்க்க தரிசனமாய் சொல்ல வரும் நிகழ்வாயை கூட இருக்கலாம்। ஆங்கிலத்தில் fiction story என்று சொல்லப் படும் கதை அம்சம் சில சமயங்களில் மிகப்பட்ட பிரமண்டமான கதை பின்னனியை கொண்டு சொல்லப் படும் ஆங்கில நாவல்கள் போல் அன்றி தமிழிலே குறைவுதான். உண்மை இல்லாத பட்சத்தில் அது ஒரு கற்பனை திறன் மிக்க படைப்பாக கூட இருக்கலாம். அல்லது கற்பனை திறன் கொண்டு புதிய உலகை செதுக்கும் சிற்பியாக கூட இருக்கலாம். தமிழரின் தீர்க்க தரிசனமே அல்லது வருங்காலத்தை பற்றிய சிந்தனை திறன் தமிழரின் இலக்கிய வானில் புத்தம் புது நிலவாகத்தான் இருக்கிறது.


அந்த வகையில் நண்பர் விக்கியின் எனக்கு சில அடிமைகள் வேண்டும் என்னும் சிறுகதையின் ஒரு சின்ன அலசல்।நல்ல கற்பனை கதை. வாருங்கால இயலின் வாசலாகவும் எதோ ஒரு புதுமை உலகிற்க்கு நம்மை அழைத்து சென்றுள்ளார்.புதிய சிந்தனை.புதிய வார்ப்புக்கள்.நவீன மலேசிய இலக்கிய வானில் புதிய நம்பிக்கையை என்னும் நாற்றை விதைத்திருக்கிறார்.


கதையின் தலைப்பு மாறுப்பட்டு சிந்திக்கும் ஒரு மனிதனின் செயல் வடிவமா?அல்லது திரைப்போடப்ப்ட்ட மனித வர்க்கத்தின் பிரதிபலிப்பா என்று தெரியவில்லை।இன்னும் கூடுதலாக சொல்லவேண்டும் என்றால் எழுத்தாளனின் எண்னங்களின் வடிவங்களின் வாய்க்கால என்று புரியவில்லை॥அடிமை வேண்டுமா? இல்லை அடிமை போன்ற மனைவிகள் சிலர் வேண்டுமா? என்னிடம் சொல்லிவிடுங்கள் விக்கி. அதிசயத்தக்க அருமையான தலைப்பு, காலத்தின் தேவைக்கு ஏற்ற பொருத்தமான தேர்வுதான்.


//அச்சமயம் எனக்கு 25 வயது இருக்கலாம். வாழ்க்கை இயந்திரத்தை விட வேகமாக‌ ஓடிக் கொண்டு இருந்த பொழுது இக்கதை நடந்தது. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் 2518-ஆம் ஆண்டு நடந்த கதை. 2012ல் பூமி அழிந்து போய்விடவில்லையா என கேள்வி கேட்க நினைப்பவர்கள் ஒரு டீ சாப்பிட்டுவிட்டு வரவும். அது வரை நான் கதை சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.//

கடந்த காலத்தில் எப்படி இருந்தது இந்த உலகம்?,நிகழ் காலத்தில் எப்படி இருக்கிறது இந்த உலகம்? இனி வருங்காலங்களில் எப்படி இருக்கும் இந்த உலகம்? கணக்குப் போட்டு காலத்தை வெற்றவர்கள் உண்டு।கதை அளந்து காலத்தை தொலைந்தவர்கள் அதிகம்।ஒரு சிலரின் கனிப்புக்கள் காலத்தை வெல்வது மற்றும் அல்ல உலகத்தின் போக்கை கூட மாற்றக்கூடும். உதாரணத்திற்க்கு தொமஸ் அல்வா எடிசன் கண்டுப்பிடிப்பு மெதுவாய் ஆமை வேகத்தில் நகர்ந்த உலக நாகரிகத்தை அதி நவீன உலகத்திற்க்கு இட்டு சென்றுள்ளது.அதோ போன்று அனுயுகம் நமது நாகரிகத்தை வின்வெளியிலும் வியப்பித்திருக்கிறது. ஒரு காலத்தில் நிலவில் கால் பதிப்பது என்பது கனவில் மட்டும் இயலும் காரியம். ஆனல் இன்று விண் வெளிப்பயணம் என்பது சாத்தியமான ஒன்றுதானே. மனித சிந்தனை திறன் விண்ணை முட்டும் அளவுக்கு வியப்பித்திருக்கிறது.சிந்தனையின் விளைவு தானே இன்றய நாகரிக உலகம்.


நாளைய மனிதன் விண்ணில் மேடை அமைத்து,வியப்பித்திருக்கும் விண்வெளியில் விந்தைகளை செய்து விண் கிரகங்களை வெற்றிக்கொள்வான் என்பதை மறுக்க முடியாத உண்மைதான்। செவ்வாய் கிரகத்திலும் சரி வேறேந்த கிரகத்திலும் சரி காலனி அமைத்து இங்குள்ள மக்களை அங்கு கொண்டுச் சென்று அடிமை படுத்தி, மக்களின் முளை திறன்களை எந்த நேரத்திலும் கட்டுப்படுத்தி மக்களை தன் வயப்படுத்த கூடிய கண்டுப்பிடிப்புக்குள் மனித வர்கத்தை சுதந்திரம் அற்ற மாக்களாக வைக்க கூடிய வாய்ப்பு அதிகம். அதியுர் நாகரிகம் பெற்றாலும் அடிமை விளங்கு உடைப்பதற்க்கு மனிதன் என்றுமே போராடிக்கொண்டுதான் இருப்பான்.


//உலக வளர்ச்சி ஆட்சியாளர்களுக்குத் தலைவலியாக அமைந்திருந்த காலக் கட்டம் இருந்தது. அதை தகர்ப்பதற்கான வழிகளை கண்டறிய ஏகப்பட்ட பணம் வாரி இறைக்கப்பட்டது. அவர்கள் நினைக்கும் வகையில் மக்கள் இருந்துவிட்டால் பிரச்சனைகள் இல்லை।//


//அன்று மித மிஞ்சிய மன வருதத்துடன் வீடு திரும்பினேன். அலுவலகக் கட்டிடத்திலேயே வீடு இருந்தது. வீட்டுக்குப் போக மூன்று கிலோ மீட்டர் உயரம் பயணிக்க வேண்டும். குளித்துவிட்டு வந்த போது 3 புதிய தகவல்கள் உள்ளதாக தபால் பெட்டி அறிவிப்பு செய்தது.//

//பாரி, அம்மா பேசுகிறேன். எப்போது வீட்டுக்கு வரப் போகிறாய். உன‌து திருமணம் சம்பந்தமாக அரசாங்கத்திடம் விண்ணப்பம் செய்துவிட்டாயா ? உனது திருமண வயது காலாவதியாக இன்னும் 3 வருடங்களே எஞ்சியுள்ளன என்பதை கவனத்தில் கொண்டாயா...?"//

நண்பர் விக்கியின் அற்புத படைப்பு. எதிர்க்காலம் எப்படி இருக்கும் என்பதை நன்றாக சிந்தனை திறன் கொண்டு வடித்துள்ளார். நல்ல சிந்தனை வளம். விரசம் இல்லை கதையில்.காமத்தை, கண்ணாடி பொக்கிஷத்தில் வைத்த வைரம் போல் அழகுற எடுத்தாண்டு இருக்கீர்கள். காமத்து வரிகளை பச்சையாய் அசிங்க படுத்துவதற்க்கும் ஆநாகரிகமாக உட்படுத்துவதற்க்கும் எனக்கு உடன்பாடில்லை நண்பரே.அந்த வகையில் உங்களின் சில வார்தைகள் தான் ஆனாலும் சிறப்பான வரிகள்
காமத்து வரிகளை ஊறுக்காய் போன்று தொட்டுக்கொண்டால் சுவை। அதைவிடுத்து ஒரு பானை ஊறுக்காயில் கொஞ்சம் சோற்றை வைத்தால் எப்படி இருக்கும்? அது விஷம் அன்றே?.


வாழ்க்கையில் அற்புதமான அந்த விஷசயத்தை சந்தனமாய் குழைந்து கொடுத்து, அதனுடன் காமத்து பாடல்களை அழகுற இலக்கிய நயத்தில் வழங்கிய கண்ணாதாசனின் இறவா பாடல்களை நாம் மறக்க முடியுமா?
உங்கள் கதை அழகான எழுத்தோட்டம் நீர்ரோடை போன்று சல சல வென்று ஒடும் எழுத்து நடை ।ஆரம்பம் விருவிருப்பான கதை ஓட்டம்। ஆனால் முடிவில் சிறிது மெது நடையோட்டம். இப்படி பட்ட கதை கரு பிரபல ஹோலிவுட் படங்களுக்கு பழசு. உங்கள் கதையில் சிந்தனை திறன் மிக்க வாழ்க்கையை வடிவமைதுள்ளீர்கள். மேலை நாட்டவர்களை விட இன்னும் கூடுதாலாக சிந்த்திக்கவேண்டும் நாம். தமிழர்களுக்கு தேவையான கரு பொருள். இன்னும் நீங்கள் புதுமையான சிந்தனைகளை உங்கள் கதைகளில் புகுத்தவேண்டும்.


சித்தம் கலங்கியவனின் அறிவு சிந்திக்க மறுக்கும்। சித்தம் தெளிந்தவனின் அறிவு சிந்தித்துக்கொண்டே இருக்கும். வீக்கி நீங்கள் இன்னும் ஆழமாக சிந்தித்து அருமையான நல்ல படைப்புக்கு சிற்பியாக இருக்க வேண்டும்.


மொத்தத்தில் உங்கள் சிறுகதை கரும் வானத்தில் துரிகையில் வரைந்த வண்ணச்சித்திரமாய் தெரிகின்றது। அந்த வண்னச்சித்திரத்தில் உலகின் எதிர்க்காலமும் தெரிகின்றது. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் விக்கி.
Post a Comment