October 8, 2009

யார் தமிழன்?தமிழன் 1
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா

வேதியியலுக்கான நோபல் பரிசு வென்ற தமிழக விஞ்ஞானி!
ஸ்டாக்ஹோம்: செல்களின் டிஎன்ஏக்களில் உள்ள தகவல்களை வைத்து எப்படி உயிர்கள் உருவாகின்றன என்பதைக் கண்டுபிடித்த தமிழரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 3 பேருக்கு இந்த ஆண்டுக்கான வேதியலுக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது।
இவருடன் யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தாமஸ் ஸ்டேய்ஸ், இஸ்ரேலைச் சேர்ந்த அடா யோனத் ஆகியோர் இந்த பரிசை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இந்த மூவரும் செல்களில் உள்ள ரிபோசோம்கள் (ribosomes) குறித்து ஆய்வுகள் மேற்கொண்டனர்.
இதில் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜில் உள்ள எம்ஆர்சி மாலிகுலார் பயாலஜி ஆய்வு மையத்தில் பணியாற்றும் ஆராய்ச்சியாளர். இவர்கள்தான் எக்ஸ்ரே கிரிஸ்டலோகிராபி என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரிபோசோம்களி்ன் அணு கட்டமைப்பை முதன்முதலாக உலகுக்குத் தெரியப்படுத்தியவர்கள்.
உயிர்களில உள்ள ஜீன்களில் உள்ள டிஎன்ஏக்கள் சொல்லும் தகவல்களை வைத்து ரிபோசோம்கள் தேவையான உடலுக்குத் தேவையான ஆயிரக்கணக்கான புரோட்டீன்களைத் (புரத சத்துக்கள்) தயார் செய்கின்றன. டிஎன்ஏக்களின் கட்டளைகளை இந்த ரிபோசோம்கள் எப்படி பெறுகின்றன, அந்த கட்டளைகளை வைத்து புரதங்களை எவ்வாறு தயார் செய்கின்றன என்பதை இந்த மூன்று விஞ்ஞானிகளும் கண்டுபிடித்துள்ளனர்.
உயிர் வாழ இன்றியமையாத ஹார்மோன்கள், நோய் எதிர்ப்பு செல்கள், என்ஸைம்கள் எனப்படும் ஜீரண ரசாயனங்கள் ஆகியவை இந்த புரதங்களில் அடங்கும்.


ரிபோசோம்கள் எப்படி இவற்றைத் தயாரிக்கின்றன என்பதை இவர்கள் கண்டறிந்துள்ளதன் மூலம் நோய்களுக்கு எதிரான மருந்துகள் உற்பத்தியில் இந்த கண்டுபிடிப்புகள் பேருதவியாக இருக்கும்.
மேலும் நோய் உருவாக்கும் பாக்டீரியாக்களில் உள்ள ரிபோசோம்களை கட்டுப்படுத்தி அவற்றின் நோய் தாக்கும் திறனை ஒழிக்கவும் இந்த ஆராய்ச்சி முடிவுகள் உதவும்।


ஸ்வீடனின் ராயல் அகாடமி ஆப் சயின்ஸஸ் வழங்கும் இந்த நோபல் பரிசு வரும் டிசம்பர் மாதத்தில் இவர்களுக்கு அளிக்கப்படும்.
8 வது இந்தியர்… மூன்றாவது தமிழர்!


நோபல் பரிசைப் பெற்ற 3வது தமிழர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் வெங்கி ராமகிருஷ்ணன் எனப்படும் வெங்கடராமன் ராமகிருஷ்ணன்.

தமிழகத்தின் சிதம்பரத்தில் பிறந்தவர் ராமகிருஷ்ணன்.
1971ம் ஆண்டு இயற்பியலில் பிஎஸ்சி முடித்த இவர் 1976ம் ஆண்டு பரோடா பல்கலைக்கழகத்தி்ல் டாக்டர் பட்டம் பெற்றார்।


இயற்பியல் பயின்றவர் என்றாலும் உயிரியல் துறையிலும் பெரும் மூளை கொண்ட ராமகிருஷ்ணன், அந்தத் துறையில் காலடி எடுத்து வைத்தார்। அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உயிரியல் பிரிவு பேராசிரியராக பணியாற்றிய இவர் செல்கள் தொடர்பான தனது ஆராய்ச்சிகளை துவக்கினார்.


இப்போது லண்டனின் எம்ஆர்சி மாலிகுலார் பயாலஜி ஆய்வகத்தில் தலைமை விஞ்ஞானியாக உள்ள இவர் நோபல் பரிசை வென்றுள்ளார்.
இதற்கு முன்பு சர்। சந்திரசகேர வெங்கட்ராமன் (சர். சி.வி. ராமன்) 1930ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார். புகழ் பெற்ற ராமன் விளைவுக்காக அவருக்கு இந்தப் பரிசு கிடைத்தது.


இதைத் தொடர்ந்து 1983ம் ஆண்டு இயற்பியல் பிரிவில் சுப்பிரமணியன் சந்திரசேகர் நோபல் பரிசைப் பெற்றார்। இவர் சர்.சி.வி.ராமனின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.


தற்போது 2009ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசை வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் வென்றுள்ளார்.
வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் தற்போது அமெரிக்க குடிமகனாக இருப்பதால் அமெரிக்கராகத்தான் கருதப்படுவார்।


இந்தியாவில் இதுவரை ரவீந்திர நாத் தாகூர், சர் சி.வி. ராமன், ஹர்கோபிந்த் சிங் குராணா, சுப்ரமணியன் சந்திரசேகர், அன்னை தெரசா, அமார்த்யா சென், வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ஆகியோர் நோபல் பரிசினை வென்றுள்ளனர்.

தமிழன் 2
தமிழன் என்றோரு இனமுண்டு
தனியே அவனுக்கொரு குனமுண்டு


தமிழன் என்பது ஒரு தகுதியில்லை! - கமல்ஹாசன்


தமிழன் என்பது ஒரு தகுதியோ ஏணியோ அல்ல…அது ஜஸ்ட் ஒரு அடையாளம்தான். திறமை மட்டுமே பேசும். அடையாளம் திறமையோடு ஒட்டிக் கொண்டு வந்துவிடும், என்கிறார் நடிகர் கமல்ஹாசன்.
நான் தமிழன்தான். ஆனால் தமிழன் என்பது எனக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. தமிழன் என்பது ஒரு அடையாளம். உயர்ந்த நிலையை அடைவதற்கான தகுதியல்ல. தமிழனுக்கு மட்டுமல்ல… வேறு இனத்துக்கும்கூட அது பொருந்தும் என்றே நம்புகிறேன். திறமை இருந்து அந்தத் துறையில் ஒருவர் பளிச்சிட்டால், அடையாளம் கூடவே ஒட்டிக் கொள்ளும். நான் இதை எந்த மேடையிலும் சொல்வேன்.


தமிழனே தமிழனுக்கு உயிராம்- அந்தத் தமிழனே தமிழுக்கு தூக்குக் கயிராம்.
Post a Comment