October 31, 2009

குண்டலினி யோகம் - யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

Vethathiri Maharishi - Simplified Kundalini Yoga
குண்டலினி யோகம் - யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
நாம் உணர்ந்து உலகிற்கு உணர்த்துவது எளியமுறைக் குண்டலினி யோகம் என்பதாகும். எளியமுறைக் குண்டலினி என்பது அறிவின் பதிவைக் கொண்ட உயிர்ச் சக்தியை மேலே நோக்கி எழச் செய்து அதிலே ஒன்றி நின்று இயற்கை இரகசியங்களை உணர்ந்து தன்னிலை உணரும் பயிற்சியாகும். உயரே சொல்லாமல், கீழ்நோக்கிப் போகா விட்டால் மேல்நிலை அனுபவ உணர்வு பெறுவது போய், தாழ்ந்த உணர்வுகளே தலையெடுத்து ஓங்கும் நிலை ஏற்படும். அதைத் தான் இன்று பெரும்பாலும் காண்கிறோம். அதனால் தான் சிக்கல்கள் ஏற்படுகின்றன. மனிதனின் இந்தப் பழக்கத்தால் அவனின் உயிர்ச்சக்தி கீழ் நோக்கிய இடத்தில், அதாவது மூலாதாரத்தில் தேங்கிக் கிடக்கின்றது; குண்டலித்து உள்ளது. இதனையே குண்டலினி சக்தி என்கிறோம். சக்தி என்ற உடன் அது உடல் எங்கும் நிலவுவதாயிற்றே என்ற எண்ணம் எழலாம். எங்கும் இயங்கும் சக்திக்கு ஒரு இயக்க மையம் வேண்டும் அல்லவா? இந்த இயக்க மையமே மூலாதாரம் எனப்படும். எனவே, இயக்க மையத்தை முறையாக உசுப்பி விடும்போது மிகச் சிறப்பாகச் செயல்படுவது இயல்பு. அதைத்தான் எளியமுறைக் குண்டலினியோகப் பயிற்சி என்கிறோம். இந்த உயிர்ச்சக்தி உடலின் மற்ற எல்லா இடத்திலும் பரவி இருப்பினும் அதற்கு ஒரு இயக்க மையம் உண்டு. இரத்தம் உடல் முழுவதிலும் பரவி இருந்தாலும் இருதயத்தை இயக்க மையமாகக் கொண்டிருப்பதனைப் போல, காற்று உடல் முழுவதிலும் பரவிஇருப்பினும் நுரையீரலை இயக்க மையமாகக் கொண்டிருப்பதனைப் போல,உயிர்ச் சக்திக்கும் இயக்க மையம் இருக்கத்தானே வேண்டும். உயிருக்கு இயக்க மையங்கள் பல உள்ளன. அத்தகைய மையங்கள் உடம்பில் ஆறு இடங்களில் இருப்பதாக மெய்யுணர்வாளர்கள் உணர்ந்து உணர்த்தி உள்ளனர். அவைகளின் அடி மட்டத்தில் இருக்கும் மையம் மூலாதாரமாகும்.

ஒவ்வொரு மையத்திலும், உயிர்ச்சக்தியை இயக்கிவிட்டால் அதற்கேற்ற பலன் ஏற்படும்। மேலும் கீழே இருந்து மேலே போகப் போக, பலன்மிகும். இவ்வாறு இயக்கிவிடப்படும் உயிர்ச்சக்தியால் உடலில் உள்ள செல்களை ஒழுங்குபடுத்திச் செயல்படுத்த இயலும். உயிர்ச் சக்தியானது உடலின் செல்களுக்கு ஒத்த முறையில் அமையவில்லையென்றால் உடல் நோய்கள்,மன நோய்கள் போன்றவை ஏற்படும். எனவே, ஆற்றல் மிக்க உயிர்ச்சக்தியைச் சேர்க்கவும், பாதுகாக்கவும் அறிந்திருக்க வேண்டும். இதனைத்தான் ஆன்மீக அறிவு என்கின்றனர். இந்தத் தெளிவையும்பயிற்சியையும் நல்குவதே எளிய முறைக் குண்டலினியோகம் என்பது. உயிர்ச் சக்தியை உணர்ந்து அதன் இயக்கத்தை நெறிப்படுத்துவதன் மூலம்,அதன் படர்க்கை நிலையான மனதையும் சீரமைத்துக் கொள்ள இயலும்.

எளியமுறை குண்டலினி யோகம்
· ஆக்கினைச் சக்கரம்
· சாந்தியோகம்
· துரிய நிலை
· தற்சோதனை
· துரியாதீதம்
· சமுதாயச் சீர்திருத்தம்

நாம் நாள்தோறும் உணவு உண்ணுகிறோம்। குளிக்கிறோம். தூங்குகிறோம். ஏன்?

காப்பு, தூய்மை, ஓய்வு ஆகிய மூன்றும் தேவையாக உள்ளன. நமது உடலியக்கத்தின் விளைவாக நம் உடலிலிருந்து எப்போதும் கோடிக் கணக்கான அணுக்கள் வெளியேறிக் கொண்டே இருக்கின்றன. அவ்விழப்பை ஈடுசெய்வதற்காக நாம் உணவு உண்ணுகிறோம்.
உடலிலே அழுக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் படிந்து கொண்டேயிருக்கிறது. அவ்வழுக்கைப் போக்கி உடலைத் தூய்மையாக வைத்துக் கொள்வதற்காகவே நாள்தோறும் குளிக்கிறோம்.
ஐம்புலன்கள், கை, கால் முதலிய உடற் கருவிகளை இயக்கிக் கொண்டே இருக்கிறோம்। அதனால் நரம்புகள் சோர்வடைகின்றன. நரம்புகளின் சோர்வைப் போக்கி முறுக்கேற்றிக் கொள்ள ஒய்வு கொள்ளுகிறோம்இ தூங்குகிறோம்.

பரு உடலுக்கு இவ்வாறு காப்பு, தூய்மை, ஓய்வு எந்நாளும் உரிய காலங்களில் தேவையாக உள்ளன. இதேபோன்று நுண்ணுடலாகிய உயிருக்கும் காப்பு, தூய்மை, ஓய்வு எனும் மூன்றும் தேவைப்படுகின்றன.
இவற்றை விழிப்பாற்றல், தற்சோதனை, தவம் எனும் மூன்று சீரிய செயல்கள் மூலம் பெற வேண்டியுள்ளன।

மறதியும்-விழிப்பும்
எல்லாம் வல்ல முழுமுதற் பொருள்தான் இயற்கை। இதனையே தெய்வமென்று பேசப்படுகிறது. இது முதல் நிலையில் சுத்தவெளியாக இருந்தது. பின் தனக்குள் தானே இயக்க விரைவு பெற்று நுண்ணிய இயக்க ஆற்றலாக-பரமாணுக்களாக மலர்ந்தது. பரமாணுக்கள் கூடிய சிறிய, பெரிய கொத்து இயக்க நிகழ்ச்சிகளே போரியக்க மண்டலமாக (Universe)விளங்குகின்றது. இத்தகைய கொத்தியக்க நிகழ்ச்சிகளில் உண்ர்ச்சி நிலையோடு இயங்கும் உருவங்கள் தாம் உயிரினங்கள்.


உயிரினங்களில் பாரிணாமத் தொடர்பால் சிறப்பு பெற்ற நிலையே மனிதன்। போரியக்க மண்டலக் காட்சிகளாக உருவம், ஒலி, ஒளி, சுவை, மணம் என்ற ஐவகை விளைவுகளையும் உணரும் ஐம்புலன்களையும்,இவையனைத்துக்கும் மூலமான வெட்டவெளியின் பெருமையை உணரத்தக்க ஆறாவது அறிவையும் பெற்று மனிதன் வாழ்கிறான்.

உடற் கருவிகளின் சிறப்பாலும் அறிவின் சிறப்பாலும் இயற்கை வளங்களை வாழ்வின் வளங்களாக விருப்பம்போல மாற்றி அமைத்து துய்த்து மனிதன் வாழ்கிறான்। தன் செயல் திறனிலும் புலன் கவர்ச்சியிலும் முழுவதும் ஈடுபட்டு, தன் உயிர் சிறப்பும் உயிரின் மூலச் சிறப்பும் மறந்து விடுகிறான். இதனால் அறிவு குறுகிய நோக்கில் செயல்படுகிறது பேராற்றல் பெற்ற இயற்கையே எல்லாமாகி தானுமாகி இன்ப துன்ப உணர்ச்சிகளால் எல்லைகட்டப் பெற்று இயங்கும் பேருண்மையை மறந்து தான் ஏதோ தனித்த பொருளாக இயங்குவதாகக் கருதி மயங்கி வாழ்கிறான்.


இத்தகைய புலன் மயக்க மறதியில் செயல் புரியும் ஆர்வமாக எழும் உயிர் விரைவு, பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் எனும் ஆறு மன உணர்ச்சி எண்ணங்களாக எழுகின்றன. பெரும்பாலும் மக்கள் இவ்வுணர்ச்சி மனோ நிலைகளில்தான் எண்ணம், சொல், செயல், இவற்றை ஆற்றுகின்றார்கள். இதன் விளைவாகத் தனக்கும் பிறர்க்கும் துன்பத்தைப் பெற்றும் அளித்தும் வாழ்கின்றனர்.
இயற்கை நியதியை உணர்ந்து பிறர் தேவைக்கும் விருப்பத்திற்கும் மதிப்பளித்து முறையோடும் அளவோடும் ஆற்றும் செயல்களே நற்கர்மங்கள். இவற்றால் எல்லோரும் இன்பம் காத்து வாழலாம். இயற்கை நியதியை மறந்தும் மதியாமலும், சமுதாய மக்கள் கருத்தையும் நலனையும் மறந்தும் மறதியாலும் ஆற்றும் செயல்கள் எல்லாம் தீய வினைகளாகும்.
ஒரு மனிதன் தன்னைப் பழக்கிக் கொள்ளும்வாறு தேவைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப நல்வினையோ தீவினையோ அவனிடம் தோன்றிக் கொண்டேயிருக்கும்।

எந்த செயலும் புலன்கள் உறுப்புகள் இவற்றில் இயக்கப் பதிவாக அமையும்। எண்ணப் பதிவாக அமையும். வித்து அணுக்களில் பரம்பரைத் தரபதிவாக அமையும். இம்மூன்று பதிவுகளும் சேர்ந்து உயிரணுக்களில் பாரிணாமச் சிறப்பாற்றலாக அமையும். இவ்வாறு மனிதன் பெறும் பதிவுகளே வினைப்பதிவுகளாகும்(Impressions Of Deeds).

இன்று உலகெங்கும் மனிதகுல வாழ்வில் அமைதி குலைந்து காணப்படுகிறது। பிணக்கும், பகையும், போட்டியும், போரும் வாழ்வில் துன்பங்களை மலியச் செய்து வருகின்றன. இவற்றிற்குக் காரணம் மனிதனேயாகும். தீவினைப் பதிவுகளால் தரக்குறைவாகத் தன்னை மாற்றிக் கொண்டான். அறிவைப் புலன் கவர்ச்சியில் மயங்க வைத்துக் கொண்டு நினைவில் குறுகி நிற்கின்றான். தனக'கு மூலமான பேராதார நிலையை மறந்து விட்டான். இவையே துன்பங்கட்குக் காரணமாகும்.

உலகில் அமைதி நிலவவேண்டுமெனில், மனித குலம் இனிமை காத்து வாழ வேண்டுமெனில், தீய செயல் பதிவுகளை மாற்றி நற்செயல் பதிவுகளுக்குப் பழகிக் கொள்ளவேண்டும்। தவறு புரிந்து ஏற்றுக் கொண்ட, உயிரணுக்களில் பதிவாகியிருக்கும், தீவினைப் பதிவுகளைப் (Impressions Of Sins)போக்கித் தூய்மைபெற வேண்டும். தனது உயிர் மூலம் அறிந்து அறிவில் தெளிவும் முழுமையும் பெற அறிவை ஒடுக்கி உள் நோக்கிப் பயில வேண்டும். இத்தகைய செயல்கள் மூலம் உயிருக்குக்காப்பு, தூய்மை,ஓய்வு என்ற மூன்றும் கிடைக்கும். இவற்றிற்கான பயிற்சி முறைதான் நோன்பு என்றும் தவம் என்றும் கூறப்படுகின்றது.

இத்தகைய நோன்பு முறையை நமது முன்னோர்கள் இருவகையாகப் பிரித்தார்கள். அவற்றில் ஒன்று பக்தி நெறி மற்றொன்று ஞானநெறி. குழந்தை வயதுடையவர்களும் அறிவின் நுண்மை இல்லாதவர்களும் தெய்வ நிலையைக் கூர்ந்துணர்ந்து அதில் நிலைத்துப் பயில முடியாது. ஆகவே அவர்களுக்கு தெய்வ நிலையின் பெருமைய விளக்கி அதன் இருப்பு நிலையல் நம்பிக்கை வைத்து வணங்கவும், சமுதாய நலன் கெடாத வகையில் தனது இனிமை காக்கும் செயல்களையே புரிந்து வாழும் எண்ணம், சொல், செயல், பயிற்சிகளையும் வகுத்தார்கள். இதுவே பக்தி நெறியாகும்.
தெய்வ நிலையினைக் கூர்ந்துணரும் அறிவுடையோர்கள் முதலில் தனது உயிர் நிலையை உணரவும், பின் உயிரியக்க விரைவைப் படிப்படியாகக் குறைத்து நிலைத்து நின்று பரமாகி நிற்கவும் ஏற்ற தவ முறையே வகுத்தார்கள்। இதன் மூலம் ஒரு மனிதன் தனது அறிவைப் பற்றி, உயிர் மூலத்தைப் பற்றி தெளிவாக உணர்ந்துக் கொண்டு வாழ்வாங்கு தானும் வாழ்ந்து வாழத் தெரியாதவர்களுக்கும் வாழ வழிகாட்டி உதவும் நெறியை வகுத்தார்கள். இதுவே ஞான நெறியாகும்.

காப்பு, தூய்மை, ஓய்வு எனும் மூன்று வகையாலும் உடலோம்பல் எவ்வளவு முக்கியமோ அவ்வாறே உயிரோம்பலும் மனிதனுக்கு இன்றியமையாதது என அறிந்தோம்। உயிர் தூய்மைக்கான பக்தி நெறி,ஞான நெறி, இரண்டு வழிகளில் பக்தி நெறி மனிதனை ஒரளவு தான் பண்படுத்துகின்றது. ஞான நெறியின் மூலம் தான் அறிவின் முழுமைப் பேற்றை அடைய முடியும். ஞான நெறியால் தான் உயிரின் இருப்பு,இயக்கம், விரிவு இவற்றைப் பற்றி தெளிந்து முழுமையாக முடியும்.

பக்தி நெறியிலிருந்து ஞான நெறிக்கு உயர வேண்டுமெனில் மனதை உயிரில் ஒடுங்கி மனம், உயிர் இரண்டையும் பற்றி விளங்கிக் கொள்ள வேண்டும்। உயிரின் இயக்க விரைவைக் குறைத்து ஞானப் பேற்றை அடைந்துப் பின் தன் மூல நிலையான நிறை நிலையை (தெய்வ நிலையை) அனுபவமாக உணர்ந்து கொள்ள வேண்டும். இதற்கு ஏற்ற முறையான உளப்பயிற்சி அகநோக்குப் பயிற்சியாகும். இப்பயிற்சி முறைதான் யோகம் என்று கூறப்படுகின்றது.

மனதை உயிரில் ஒடுக்க வேண்டுமெனில், இயக்க மையத்தை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்। உடல் முழுவதும் உயிர் பரவி இருந்தபோதும் அது மூலாதாரம் எனும் முதுகுத்தண்டின் கீழ்ப் புறத்தில் தான் மையம் கொண்டிருக்கிறது. உயிராற்றலுக்குக் குண்டலினி சக்தியென்னும் ஒரு சிறப்புப் பெயருண்டு. இதனால்தான் குண்டலினி அமர்ந்திருக்கிறதென்று கூறுவது வழக்காயிற்று.

உயிராற்றலான குண்டலிணி சக்தியின் இயக்க மையத்தை புருவ மையத்துக்கு மாற்றியமைத்தால்தான் மனதை அதில் ஒடுக்க முடியும்। உயிரியக்க மையத்தை மூலாதாரத்திலிருந்து மாற்றவும் பின் அதில் மனதை ஒடுக்கவும் ஏற்ற பயிற்சி தான் குண்டலினி யோகம்.

உயிரியக்க மையத்தை மூலாதாரத்திலிருந்து எழுப்பிப் புருவ மையம் கொண்டு வர மூச்சுப் பயிற்சியைப் பின்பற்றினார்கள்। நமது முன்னோர்கள் மூச்சுப் பயிற்சியின் மூலம் குண்டலினி சக்தியை நெற்றிக்குக் கொண்டு வர பல ஆண்டு காலம் தேவை. மேலும் அச்சக்தி ஏறிவரும் வழியில் சுவாதி\u202டிடானம் எனும் நீர் மையத்தையும், மணிப்புரகம் எனும் வெப்ப மையத்தையும், அனாகதமெனும் காற்று மையத்தையும், விசுத்தி எனும் புதாகாச மையத்தையும் கடந்து வரவேண்டியுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் இடப்பெயற்சி கொள்ளும்போது சில பல உடல் நோய்கள் காணும். அவற்றையெல்லாம் அனுபவித்துப் பெரு முயற்சியோடு தான் மேலேறி வரவேண்டும். இல்லறத்தில் வாழ்வோர்களுக்கு இம்முறை ஏற்றதல்ல.

எளிய முறை குண்டலினி
எளிய முறை குண்டலினி யோகத்தில் தேர்ந்த ஒரு வல்லவர் விரும்பினால் ஒருவருடைய குண்டலினி சக்தியை ஒரே நிமிடத்தில் புருவ மையத்திற்கு இடம் மாற்றி அமைத்து விடலாம்। காந்தத்தைக் கொண்டு இரும்பை இழுப்பது போல தனது தவ ஆற்றலைக் கொண்டு மற்றொருவர் குண்டலினியை எழுப்பி மாற்றி அமைத்து விடலாம். புருவ மையம் வந்த உடனே குண்டலினி இயக்கம் நன்றாக உணரப் பெறும். ஆக்கினை சக்கரம் என்று கூறுவது வழக்கு. அவ்விடத்திலேயே மனதைக் குண்டலினியில் பழக உயிருக்கும் மனதுக்கும் இடையே உள்ள தொடர்பு விளங்கும்.


மனம் வேறு உயிர் வேறு என்று தான் பொதுவாக மக்கள் கருதுகிறார்கள்। அப்படியல்ல. உயிரே தான் படர்கை நிலையில் மனமாக இருக்கிறது. உயிர் உடலில் இயங்கும் போது எக்காரணத்தாலும் உடலில் எந்தப் பகுதியிலேனும் அணு அடுக்கச் சீர் குலைந்து போனால் உயிருக்குத் துன்ப உணர்ச்சி ஏற்படுகிறது. அவ்வுணர்ச்சியிலிருந்து மீள ஒரு பொருளோ, செயலோ,பிறர் உதவியோ தேவைப்படுகின்றது. அப்போது தேவை என்ற மனநிலையாக உயிர் ஆற்றல் ஓங்கி நிற்கின்றது. பின் அதுவே முயற்சி,செயல், இன்ப துன்ப விளைவுகள், அனுபோகம், அனுபவம், தெளிவு,முடிவு என்ற நிலைகளாகப் படர்ந்து இயஙகுகின்றது. இந்த உண்மை யோகத்தின் முதல் படியாகிய ஆக்கினை தவப்பயிற்சியால் தெளிவாக விளங்கும்.

ஆக்கினைச் சக்கரம்
உயிர் புலன்கள் மூலம் விரிந்து படர்கை நிலையில் மனமாக இருக்கிறது। புலன் மயக்கத்தில் குறுகி நிற்பதால் உயிரின் பெருமையும் பேராற்றலும் மறந்து பிற பொருட் கவர்ச்சியில் சிக்குண்டு இயங்குகின்றது. உயிரின் இத்தகைய மயக்க நிலைதான் மாயை எனப்படும். உயிர் அடையும் மனோ நிலைகளில் தனக்கும் பிறர்க்கும் துன்பம் விளைவிக்கும் தீமைகள் அறுவகைக் குணங்களாகும்.

அவையே பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்வேட்பு, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் என்பனவாகும்। அறுகுண வயபட்டு மக்கள் செயலாற்றும் போது ஏற்படும் தீய விளைவுகளே எல்லாத் துன்பங்களும் ஆகும். மயக்க நிலையிலிருந்து தெளிவு பெற உயிருக்கு விழிப்பு நிலைப் பயிற்சி அவசியம்.

ஆக்கினைச் சக்கர யோகத்தால் உயிருக்கு இத்தகைய விழிப்பு நிலைபேறு கிட்டுகின்றது। மேலும் புலன்களைக் கடந்து நிற்கும் வல்லமையும் இப்பயிற்சியினால் ஆன்மாவுக்கு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருக்கிறது. புலன்கள் மூலம் ஆன்மா செயலாற்றும் போது தனது ஆற்றலை அழுத்தம், ஒலி, ஒளி, சுவை மணம் இவையாக மாற்றி அதையே தனது இன்ப துன்ப உணர்ச்சிகளாக அனுபவிக்கின்றது.

தனது இயக்க விளைவுதான் இன்பமும் துன்பமும் எனும் உண்மையை உணராமல் மயங்கி நிற்கும் நிலையிலிருந்து தெளிவு பெற்றுத் தன் ஆற்றலைப் பொறுப்புணர்ந்து செலவிடும் பண்பு ஆன்மாவுக்கு இப்பயிற்சியினால் ஓங்கும்। தேவையுணர்ந்து தனது ஆற்றலைச் செலவிடவும் தேவையில்லாத போது செலவிலிருந்து தன்னை மீட்டு சேமிப்பு நிலையில் இருக்கவும் ஆன்மாவுக்குத் திறமை பெருகும். மெய்ஞானம் என்ற அருட்கோயிலுக்குள் புகும் வாயில் ஆக்கினைச் சக்கர யோகமேயாகும். ஆசானால் எழுப்பப் பெற்ற குண்டலினி சக்தியின் இயக்க விரைவு நாளுக்கு நாள் கூடிக் கொண்டேயிருக்கும். உடல்நலம், மனநலம் ஓங்கும். முகம் அழகு பெறும்.

சாந்தியோகம்
ஆக்கினைச் சக்கரமாகிய நெற்றிக் கண் யோகத்தினால் குண்டலினி இயக்கம் சில சமயம் உடல் தாங்கும் ஆற்றலுக்கு மேலாக ஓங்கும்। அப்போது தலை கனம் உண்டாகும். இந்தக் குறிப்பே சாந்தி யோகப் பயிற்சிக்கு ஏற்றதாகும். அப்போது ஆசானை ஆண்டி சாந்தி யோகப் பயிற்சியைத் தெரிந்து கொள்ள வேண்டும் வேறு முறைகள் மூலம் குண்டலினி ஏற்றம் பெற்றோர் சாந்தி யோக முறையறியாமல் பலர் குண்டலினி ஏற்றத்தைத் தாங்கும் சக்தியின்றி துன்புற்று வருந்துகிறார்கள். இத்தகையோர் உடனடியாகச் சாந்தி யோகம் தெரிந்துப் பயிலுதல் வேண்டும்.

துரிய நிலை
ஆன்மா தனது பழிச் செயல் பதிவுகளிலிருந்து தூய்மை பெற ஏற்றதோர் பயிற்சி துரியநிலை யோகமாகும்। உயிராற்றல் மிக நுண்ணிய இயக்க நிலைக்கு இந்தப் பயிற்சியின் மூலம் திரும்பும். பிரபஞ்ச காந்த சக்தியோடு தொடர்பு கொள்ளும் ஆற்றல் ஓங்கி உள்ளுணர்வு (Intution) ஒளிரும். துரியநிலை யோகமானது ஆசான் தனது தவ ஆற்றலைக் கண்கள் மூலம் மாணவனுக்குப் பாய்ச்சிக் குண்டலினி சக்திக்கு ஒரு உயர் ஆற்றல் அளிக்கும் செயலாகும். மூளையின் நுண் பகுதிகளையெல்லாம் தூண்டி இயங்க வைக்கும் ஆற்றல் துரியநிலை யோகத்திற்கு உண்டு. இதன் மேண்மையினை எழுதி விளக்குவது அரிது. அவரவர்கள் அனுபவத்தால் பயனடைந்து விளங்கிக் கொள்ளவேண்டியது.

தற்சோதனை
துரியநிலை யோகத்தால் ஆன்மா தூய்மையடைந்து வரும்போதே தற்சோதனைப் பயிற்சியினைத் தொடங்க வேண்டும்। எண்ணம், சொல்,செயல் இவற்றின் விளைவறிந்து செயலாற்றும் ஒழுக்கப் பயிற்சியிலிருந்து தான் யார்? என்று தெளிந்து கொள்ளும் முழுமைப் பேறு வரையில் இப்பயிற்சி விரிவடைந்து பயன் தருகின்றது. ஒழுக்கம், கடமை, ஈகை,உயிர் விளக்கம், மெய் பொருள் விளக்கம் அனைத்தும் தற்சோதனை பயிற்சியினால் பெறப்படும்.

துரியாதீதம்
தெய்வ நிலைக்கு உயிரை உயர்த்தி இரண்டு நிலைகளும் கலப்புறப் பயிலும் யோகமே துரியாதீதமாகும்। இதனைச் சமாதியென்றும், சீவப்பிரம்ம ஐக்கிய முக்தி என்றும் கூறப்படுகின்றது. மனிதனாகப் பிறந்தவன் அறிந்து முழுமைபெற வேண்டிய விளக்கம் அனைத்தும் அந்த யோகத்தால் சித்தியாகும்.

முறையாக இத்தகைய எளிய முறைக் குண்டலினி யோகத்தைப் பயின்றால் மனிதன் தனது அறிவில் முழுமை பெறலாம்। உணர்ச்சி வயப்படாமல் சம மன நிலையில் கடமையாற்றி மகிழ்ச்சியோடு வாழலாம். வாழப் பறந்தவர்கள், வாழ்வை விளங்கிக் கொண்டுதானே வாழவேண்டும்? ஆகவே மெய்ஞ்ஞானம் எனும் அறிவின் விளக்கப்பேறு மனிதனுக்கு இன்றியமையாதது. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் வயதுக்கு வந்த உடன் பயின்று பலன் பெற வேண்டிய உளப்பயிற்சியேகுண்டலினி யோகம்.

சமுதாயச் சீர்திருத்தம்
உலகில் பெரும்பாலான மக்கள் புலன் கவர்ச்சியில் மயங்கி, ஆன்ம நிலையை மறந்து அறுகுண வயமாகி வாழ்கின்றார்கள். துன்பங்கள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. மேலும் பால்கவர்ச்சி விரைவில்,மயக்கநிலையில் பெரும்பாலும் குழந்தைகள் உலகில் உற்பத்தியாகின்றன. அக்குழந்தைகளும் மயக்க நிலையில்தானே வாழ முடியும்? இந்த போக்கிலிருந்து உலகம் திருப்பம் பெற வேண்டுமெனில் திருமணத்திற்கு முன்னதாக ஆணும் பெண்ணும் குண்டலினி யோகம் கற்றுப்பயின்று முழுமை பெறவேண்டும். அப்போது தான் குடும்பத்தைத் திறமையோடு நடத்தும் ஆற்றல் வளருவதோடு அவர்கட்குப் பிறக்கும் குழந்தைகளும் அறிவின் விழிப்பு நிலைக்கு எளிதில் திரும்பிவிடும். இயற்கையான முறையில் கருத்தடைக்கும் குண்டலினியோகம் வழி செய்கிறது. உயிரியக்க மையத்தைக் குறிப்பிட்ட இடத்தில் மாற்றியமைத்துக் கொள்ளும் திறமை உண்டாகிவிட்டால் தேவையானபோது குழந்தைப் பேறு அடையவும்,வேண்டாத போது அதனை தவிர்க்கவும் நுட்பம், ஆற்றல் இரண்டும் குண்டலினியோகத்தால் கிட்டும்.
பொதுவாகச் சொன்னால் குண்டலிணி யோகம் தனிமனித முழுமைக்கும்,உலக சமுதாய நலணுக்கும் ஏற்றதோர் உளப்பயிற்சி முறையாகும்। உயிர் நலம் பேணும் எல்லா முறைகளும் இந்த யோகத்தில் அடங்கியுள்ளன. இவ்வரிய யோகப் பயிற்சி முறையை விரும்புவோர் தகுதியுடையோர் அனைவரும் கற்றுப் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு மக்களுக்கு உதவும் ஒரு அருள் நிலையமே உலக சமுதாய சேவா சங்கமாகும்.

இந்த சங்கத்தின் அருள் விளக்கப் பணி நிலையங்களே மனவளக்கலை மன்றங்கள்। இப்போது பல மன்றங்களில் இச்சங்கக் கிளைகள் அமைக்கப் பெற்றிருக்கின்றன. மற்ற மாநிலங்கட்கும் வெளிநாடுகட்கும் இம்முறையைப் பரப்பி நலமளிக்க நம்மாலியன்ற தொண்டினைப் புரிவோம். இத்தெய்வீகத் தொண்டின் பெருமையுணர்ந்த அறிஞர்கள் பலர் ஞானாசிரியர்களாகப் பயிற்சி ஏற்றுள்ளனர். மேலும் பலர் முன் வரவேண்டும். இவ்வுலகில் எல்லாப் பகுதிகளிலும் இந்த மனவளக்கலை முறை பரவ நாம் ஒன்றுகூடி செயலாற்றுவோம்.

நம்மை அளித்த உலகுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளில் இதுவும் ஒன்றாகக் கருதி உவகையோடு அருட்தொண்டு புரிவோம் வாரிர் என்று தவத்தில் தேர்ந்த அன்பர்கள் எல்லோரையும் அழைக்கின்றேன்। இதனால் உங்கள் குடும்பக் கடமைகள் சிறிதளவும் குறைவு படாமல் இருக்கவும் விழிப்போடு இருக்கவேண்டும்.

இதுவரையில் ஞானம் என்ற துறையில் சில தவறான கருத்துக்கள் உலவி வருகின்றன. அவை
1. ஞானம் என்பது எளிதில் மனிதனுக்குக் கிட்டாது.
2. இல்லறத்தார்களுக்கு ஞானம் ஏற்றதல்ல.
3. பெண்கள் ஞானத்திற்கு ஒவ்வாதவர்கள்.
4. ஞானம் பெற்றால் மனிதன் குடும்பத்தை மறந்து விடுவான்.
5. ஞானம் பொருளாதாரத் துறைக்கு எதிரான ஒன்று.
இவ்வகையான ஐவகைத் தவறான கருத்துக்களையும் திருத்தி இன்று எண்ணிறந்த மக்களுக்கு மெய்விளக்கம் அளித்திருக்கிறது நமது மனவளக்கலை மன்றங்கள்। இத்தகைய மன்றங்கள் வளர வழி செய்து நம் கடனாற்றுவோம்.

பரு உடலுக்கு இவ்வாறு காப்பு, தூய்மை, ஓய்வு எந்நாளும் உரிய காலங்களில் தேவையாக உள்ளன. இதேபோன்று நுண்ணுடலாகிய உயிருக்கும் காப்பு, தூய்மை, ஓய்வு எனும் மூன்றும் தேவைப்படுகின்றன.
இவற்றை விழிப்பாற்றல், தற்சோதனை, தவம் எனும் மூன்று சீரிய செயல்கள் மூலம் பெற வேண்டியுள்ளன
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

October 27, 2009

தன்னை அறிவதே தலையாய நல் அறிவு.வாழ்க்கை என்பது என்ன?
ஏன் நாம் இந்த மண்ணுலகில் பிறந்தோம் வளர்ந்தோம் வாழ்ந்தோம்
என்ற கேள்வி எனக்குள் எழும்பிக் கொண்டுதான் இருக்கிறது.?
நான் புத்தன் இல்லை.
நான் சித்தனும் இல்லை.
ஏய்க்கும் எத்தனும் இல்லை.
ஆனால் சாதரான மான என்னைப் போன்ற
மனிதர்களின் கேள்வி இதுவாக தானே இருக்கிறது?
விடைக் காணா விடைகளை தேடிக் கொண்டிருக்கின்றேன்!
வாழ்க்கை என்னும் பள்ளியில்
எதோ ஒரு தேடல்.......
அந்த தேடலில் சிறுத் துளி தான்
இந்த வாழ்க்கை?

ஒவ்வொரு விநாடியும் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கின்றோம்
காற்றை வெளியே விட்டும், உள்ளே இழுத்தும் நமது வாழ்வு தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.
ஒவ்வோர் இரவும் தூக்கதில் இருந்து காலை விழித்துக் கொள்கிறோம்.
இல்லாவிட்டால் அடுத்த பிறவியில் தான் எழுவோமா? என்ற உறுதி யார் தருவார்?

இரவு பகல்
இன்ப துன்பம்
உறக்கம் விழிப்பு
பிறப்பு இறப்பு
அனைத்தையும் இரண்டாக
வகுத்த இறைவன்
நமது வாழ்க்கையை மட்டும்
ஒரு தவனையில்
பயிலும்
வாழ்க்கை பள்ளிக்கூடமாக
ஆக்கிவிட்டான்.


பிறப்பு ஒன்று இருந்தால்
இறப்பும் ஒன்று இருக்க வேண்டும்
வாழ்வின் முடிவு சாவா?
இல்லை மரணமில்ல பெரும் வாழ்வா?
சங்கடமான வாழ்வா? இல்லை சாகசமான வாழ்வா?
வாழ்க்கையை கற்றுத் தரும் பள்ளி பாடமா இந்த வாழ்க்கை?

நாம் எதிர் நோக்கும் தொல்லைகள்
இறைவன் வகுத்த பாடக் குறிப்புக்களோ
இந்த அனுபவக் கல்வி?
யார் வகுத்த பாடத் திட்டம்?
உணர்ந்த அனுபவங்கள் தான்
வாழ்க்கை என்றால்
நாம் எதற்காக
வாழ்கின்றோம்?
வாழ்வு இதுவெனில்
யார் நமக்கு ஆசான்?
வாழ்வின் பகுப்பாய்வின்
வாழ்க்கை பாடங்களின் பயன் தான் என்ன?
எந்த அறிவையும் அனுபவத்தையும்
தேடுவது இந்த வாழ்க்கை?

எதற்காக இந்த வாழ்வு நமக்கு?
நாம் கற்ற அனுவப் பாடங்கள் யாருக்காக
மனதில் எழும் சிக்கல்கள்,
இன்பத் துன்பங்கள்
எதற்காக?
வாழ்க்கை பாடத் திட்டத்தில்
நாம் எந்த வகை பட்டதாரி?
வாழ்க்கை சோதனையில்
யார் நமக்கு வழிக்காட்டி?
உலகப் பேரேட்டில்
நம் பங்குதான் என்ன?
வாழ்க்கை பாடத்தை
கற்று தேர்ந்த நமக்கு
எந்த பதவி காத்திருக்கிறது?
சுகப் பதவியா? இல்லை சிவப்பதவியா?

பிறகு
இறப்பும் பிறப்பும்
ஏன்
மறைப்பொருளாய்
வைத்தான் இறைவன்?

ஏழ்ப் பிறப்பு என்றால்
எந்த பிறப்பு?
ஞாபகம் இல்லை?
தொடரும் வாழ்க்கை கல்வியோ?
இந்த பிறப்பும்- இறப்பும்?
இல்லை படித்த பாடம் போதும்
என்று கணப்பொழுது
அழைக்கும்
இறைவனின்
ஓலையோ
இந்த மரணம்?

அறிவை தேடுவதோ இவ் வாழ்க்கை?
எத்தகைய பகுத்தறிவு
எத்தகைய படிப்பு அறிவு
எத்தனை அனுபவம் அறிவு
இதுவெல்லாம் அறிவா?
இல்லை இல்லை என்கிறார்
ஒருவர்......

மெய்யறிவல்லாத பிற அறிவு, பேய் அறிவு.
தன்னை அறிவதே தலையாய
நல் அறிவு.....என்கிறார் திருமூலர்.முன்னைப் பிறவியில் செய்த முதுதவம்
பின்னைப் பிறவியில் பெற்றால் அறியலாம்
தன்னை அறிவது அறிவாம் அஃதன்றிப்
பின்னை அறிவது பேய் அறிவாகும்மே
.
(திருமூலர் திருமந்திரம் இருநூறு 180)

நாம் நமது முன் பிறவில் செய்த தவம் எப்படிப்பட்டது? நல்லறம் செய்து - நல்ல தவம் செய்துள்ளோமா? இதை இந்த பிறவியில் எப்படி கண்டறிவது? ஒரு சுலபமான வழி சொல்லுகிறார் திருமூலர். இந்த பிறவியில் நாம் அடைந்துள்ள நலங்களை, பெற்றுள்ள பேறுகளை முன் பிறப்பில் நாம் செய்த நற்றவம் எப்படிப் பட்டது என்பதை எளிதில் புரிந்து கொள்ளாலாம். இந்த தவம் சிறக்க தன்னை அறிந்துணரும் மெய்யறிவை பெறவேண்டும். அப்படி இல்லாமல், அதாவது அந்த மெய்யறிவை அடைய நினையாமல் மற்ற அறிவு நலங்களை பெறுபது- அறிவது பேதமையெ ஆகும். மெய்யறிவல்லாத பிற அறிவு பேய் அறிவு என்கிறார் திருமூலர்..
வாருங்கள் நண்பர்களே.....வாழ்க்கை என்னும் மெய் அறிவுக் கூடத்தை தேடுவோம்!


வாழ்க்கை ஒருபள்ளிக்கூடம் அதுவே மெய் அறிவுக் கூடம்.

October 21, 2009

உணர்சிக் கொப்பளிக்கும்...ஒரு வார்த்தை காதல்


காதல் ஜெயிக்குமா? இல்லை
காதல் மரிக்குமா?
*********************************************
உணர்சிக் கொப்பளிக்கும்
ஒரு வார்த்தை காதல்......
உச்சரிக்க உச்சரிக்க
தெவிட்டத தெள்ளமுது காதல்.......
உணர்வுகளுக்கு உருவேற்றும்
உன்னத காதல்....
மவுனத்தையும் வார்த்தைகளாக்கும்
மகா காதல் இது............

நினைத்த இட மேல்லாம்
சிரித்திடுவான்
சிந்தித்து சிந்தித்து காதல் மொழி
பகர்ந்திடுவான்
அவள் சிரித்தாள் முத்து சிதறல் என்பான்
சிவந்தால் குங்கும சிமிழ் என்பான்

காதல் வார்த்தையால்
அவன் வாழ்க்கை
ஜொலித்துக் கொண்டிருக்கும்
காதலால் அவன்
இதயம் குளிந்து கொண்டிருக்கும்.
இதுவா காதல்?

பணம் மட்டும் வாழ்க்கை என்றால்
காதல் பிணங்கள் என்னதான் செய்யும்?
இனிவரும் காதல், காமப் பேய்களோடா?
காதல் போயின் காதல் போயின் சாதலோ?
இல்லை காத்திருப்பதோ காதல்?
எது காதல்?

உன் மவுனம்
எனக்கு பரிபாசை

எழுத தெரிந்த எனக்கு
உனது காதல் வார்த்தையை
மொழி பெயர்க்க தெரியவில்லை.
மொழி பெயர்க்க தெரியாத
எனக்கு
உன் காதல் புரியாமல் போனது.
இது ஜெயித்த காதலா?
இல்லை
மரித்த காதலா?

உயிர் பூக்களாய்
காதல் வாழ்கிறது.
உதிரிப் பூக்களாய்
வாழ்க்கைக் தொலைகிறது

எனோ தெரியவில்லை
காதலித்த
நமது உடல் மட்டும் வீழ்கிறது.
காதல்
மட்டும் சாவதில்லை
காதல்
காலத்தை கடந்து நிற்கும்.
தாஜ் மகால் போல்......

சாகாத காதல்.....
ஆனால்
தினம் தினம்
செத்துக் கொண்டிருப்பது
காதலித்த நாம்......
இதுவா காதல்?காதலித்த நாம்
காலனோடு செல்வதா?
காதல் மட்டும்
மனித ஜீவனோடு
வாழ்வதா?


October 11, 2009

இறப்பு அது ஒரு சிறப்பு
இறப்பு அது ஒரு சிறப்பு.
சவம் சிவமாகும், சிவம் ஜோதியாகும்

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு।இறப்பும் பிறப்பும்। கனப்பொழுது நிகழும் நிகழ்வு.. வாழும் வாழ்க்கை இருக்கிறதே அப்பப்பா சொல்லி மாளாத துன்பங்கள் துயரங்கள் ஒரு தொடர்க் கதையாய் தொடர்ந்துகொண்டிருக்கும். போதுமடா சாமி இந்த வாழ்க்கை எம்மை இப்பொழுதே எடுத்துக்கொள் என்று இறைவனிடம் மன்றாடு அன்பர்கள் தான் நிறைய உண்டு. போதும் போதும் துன்பங்கள் என்பது போல இன்பம் வரும் போது இறைவனை மறந்து விடுகின்றனர்.அது மனித இயல்புதானே. வாழ்க்கை சுழலில் சிக்கி தவிக்கும் மனிதனுக்கு பிறவி பெருங்கடலை கரை சேர்க்கும் கயிருதான் இந்த இறப்பு.காயமே பொய்யாட காற்றடைத்த பையாடா என்று சித்தர் மொழி பகர்வது போன்று மனித உடல் வெறும் காற்றால் நிரப்பப்பட்ட பை। இந்த காற்று இல்லை என்றால் மனித உடல் வெறும் ஜடம் மட்டும் தான். உறங்குவது போன்றதே இந்த இறப்பு.நெருதல் உளன் ஒருவன் இன்றில்லை, என்னும் பெருமை உடைந்துஇல் வுலகு।நேற்று உயிரோடு இருந்தார், இன்று இல்லாது போயினன் என்று சொல்லும் பெருமையைத் தனக்குரியதாகக் கொண்டது இவ்வுலக இயல்பு. தனக்குரிய பெருமையை அது விட்டு விடாது தவறாமல் செயற்ப்படுத்தும்.
இறப்பு எப்பொழுது வரும் என்று யாரால் பகர முடியும்? உறங்குவது போன்றதே இந்த இறப்பு। கருவறையில் உறக்கம், இந்த உலகில் பிறந்தவுடன் விழிப்பு.மறுபடியும் மீழா துயில், அது தானே இறப்பு. பிறந்து பிறந்து இறப்பதினில் போதும் போதுமே, பிறவி நீங்கி உன்பாதம் சேர வேண்டும் என வேண்டுகிறார் ஒரு தெய்விக கவிஞர். அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது என்றார் ஒளவை.பிறந்து விட்டோம், வாழ்ந்து தான் ஆகவேண்டும்। ஒரு நாள் இறந்தும் ஆகவேண்டும். மனிதன் வையத்துள் நல் வாழ்வு வாழ்ந்தால் வானுறையில் தெய்வத்திற்கு சமமாக மதிக்கப்டுவான். இறந்த பிறகும் எவர் ஒருவர் சிறப்பாக மதிக்கப்படுகின்றரோ அவர் இந்த உலக பேரேட்டில் வரவு வைக்கப்படுவார். நடமாடும் ஜடமாய் வாழ்ந்து, சவமாய் உயிர் பிரிந்து சிவமாய் சீவனை உயர்ந்து நின்று, வான் ஜோதியில் கலப்பதுதானே இறப்பு.இறப்பு என்றவுடன் இந்த ஆண்டு முதலில் என்னைப் பாதித்த ஒரு உயிர் இழப்பு எனதருமை அண்ணன் மகன்।என்னுடன் வாழ்ந்தவன்.எனது தொழிழுக்கு உதவியாய் இருந்தவன். இதோ வருகிறேன் என்று சொல்லி சென்றவன்.திரும்பாமலே இறை அடியை சேர்ந்து விட்டான்.இன்று வரை அந்த பாதிப்பு எனக்கும் என் மனைவிக்கும் உண்டு. மகன் என்றால் அவனை போல் ஒரு அன்புள்ளம் கொண்ட நல்ல மகன் எனக்கு வேண்டும் என்று அந்த எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகின்றேன். நல்ல மனம் படைத்தவர்களை ஏன் தான் இறைவன் சீக்கிரமாய் அழைத்துக் கொள்கிறனோ? அந்த பாதிப்பு இன்னும் எங்களின் நிழலாய் தொடர்கிறது.ஏன் இந்த விளையாட்டு இந்த இறைவனுக்கு?இந்த வாரம் என் சொந்தத்தில் இரண்டு இறப்பு। ஒருவர் என் பெரிய அன்னை மற்றோருவர் என் சித்தப்பா இந்த வார முதலிலும் என் பெரிய அன்னை. 95 முதியவர்,என் அப்பாவின் அண்ணனின் மனைவி.பேரன் பேத்திகளை பெற்ற மகராசி. கிள்ளான் உத்தமாவில் தனது மகன் வீட்டில் காலாமானர். நேற்று 10.10.2009 தில் என் சித்தப்பா அவரை நாங்கள் நைனா என்று தான் அழைப்போம். சா ஆலம் செக்சன் 18னில் அவரின் மகள் வீட்டில் இறந்து போனார். நல்ல தரமான மனிதர்.வெள்ளைக்காரரிடம் சமையல் வேலைப் பார்த்தவர்.நல்ல சிவத்த முகம் நல்ல குண இயல்போடு வாழ்தவர். அவரின் மனைவி அதாவது என் சின்னமா இந்த வருட முதலில் இறந்து போனார். அவர்கள் இருவரும் நல்ல கருத்தொத்த தம்பதியினார். நல்ல மனிதரின் செயல் குணம் தான் மற்றவர்களின் வாழ்க்கைக்கு வழிக்காட்டி.அவர்களின் இறப்புக்கு ஆழ்ந்த அனுதாபம்! இறந்தது அவர்களின் உடலா இல்லை அவர்களின் ஆன்மா? எதுவெண்று எனக்கு தெரியவில்லை। உடல் அழிய கூடியது, ஆன்மா அழிவில்லாதது. அழிவில்லாத ஆன்மாவை வாழ்த்தி வணங்குவோம்.மானிட வாழ்வின் அது ஒரு விடுதலை நாள். இறப்பு மனித வாழ்வின் சிறப்பு. இறந்தவர்களை பெருமையுற பேசுவது தமிழர் வாழ்வியலின் சிறப்பாகும்.

October 8, 2009

யார் தமிழன்?தமிழன் 1
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா

வேதியியலுக்கான நோபல் பரிசு வென்ற தமிழக விஞ்ஞானி!
ஸ்டாக்ஹோம்: செல்களின் டிஎன்ஏக்களில் உள்ள தகவல்களை வைத்து எப்படி உயிர்கள் உருவாகின்றன என்பதைக் கண்டுபிடித்த தமிழரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 3 பேருக்கு இந்த ஆண்டுக்கான வேதியலுக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது।
இவருடன் யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தாமஸ் ஸ்டேய்ஸ், இஸ்ரேலைச் சேர்ந்த அடா யோனத் ஆகியோர் இந்த பரிசை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இந்த மூவரும் செல்களில் உள்ள ரிபோசோம்கள் (ribosomes) குறித்து ஆய்வுகள் மேற்கொண்டனர்.
இதில் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜில் உள்ள எம்ஆர்சி மாலிகுலார் பயாலஜி ஆய்வு மையத்தில் பணியாற்றும் ஆராய்ச்சியாளர். இவர்கள்தான் எக்ஸ்ரே கிரிஸ்டலோகிராபி என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரிபோசோம்களி்ன் அணு கட்டமைப்பை முதன்முதலாக உலகுக்குத் தெரியப்படுத்தியவர்கள்.
உயிர்களில உள்ள ஜீன்களில் உள்ள டிஎன்ஏக்கள் சொல்லும் தகவல்களை வைத்து ரிபோசோம்கள் தேவையான உடலுக்குத் தேவையான ஆயிரக்கணக்கான புரோட்டீன்களைத் (புரத சத்துக்கள்) தயார் செய்கின்றன. டிஎன்ஏக்களின் கட்டளைகளை இந்த ரிபோசோம்கள் எப்படி பெறுகின்றன, அந்த கட்டளைகளை வைத்து புரதங்களை எவ்வாறு தயார் செய்கின்றன என்பதை இந்த மூன்று விஞ்ஞானிகளும் கண்டுபிடித்துள்ளனர்.
உயிர் வாழ இன்றியமையாத ஹார்மோன்கள், நோய் எதிர்ப்பு செல்கள், என்ஸைம்கள் எனப்படும் ஜீரண ரசாயனங்கள் ஆகியவை இந்த புரதங்களில் அடங்கும்.


ரிபோசோம்கள் எப்படி இவற்றைத் தயாரிக்கின்றன என்பதை இவர்கள் கண்டறிந்துள்ளதன் மூலம் நோய்களுக்கு எதிரான மருந்துகள் உற்பத்தியில் இந்த கண்டுபிடிப்புகள் பேருதவியாக இருக்கும்.
மேலும் நோய் உருவாக்கும் பாக்டீரியாக்களில் உள்ள ரிபோசோம்களை கட்டுப்படுத்தி அவற்றின் நோய் தாக்கும் திறனை ஒழிக்கவும் இந்த ஆராய்ச்சி முடிவுகள் உதவும்।


ஸ்வீடனின் ராயல் அகாடமி ஆப் சயின்ஸஸ் வழங்கும் இந்த நோபல் பரிசு வரும் டிசம்பர் மாதத்தில் இவர்களுக்கு அளிக்கப்படும்.
8 வது இந்தியர்… மூன்றாவது தமிழர்!


நோபல் பரிசைப் பெற்ற 3வது தமிழர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் வெங்கி ராமகிருஷ்ணன் எனப்படும் வெங்கடராமன் ராமகிருஷ்ணன்.

தமிழகத்தின் சிதம்பரத்தில் பிறந்தவர் ராமகிருஷ்ணன்.
1971ம் ஆண்டு இயற்பியலில் பிஎஸ்சி முடித்த இவர் 1976ம் ஆண்டு பரோடா பல்கலைக்கழகத்தி்ல் டாக்டர் பட்டம் பெற்றார்।


இயற்பியல் பயின்றவர் என்றாலும் உயிரியல் துறையிலும் பெரும் மூளை கொண்ட ராமகிருஷ்ணன், அந்தத் துறையில் காலடி எடுத்து வைத்தார்। அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உயிரியல் பிரிவு பேராசிரியராக பணியாற்றிய இவர் செல்கள் தொடர்பான தனது ஆராய்ச்சிகளை துவக்கினார்.


இப்போது லண்டனின் எம்ஆர்சி மாலிகுலார் பயாலஜி ஆய்வகத்தில் தலைமை விஞ்ஞானியாக உள்ள இவர் நோபல் பரிசை வென்றுள்ளார்.
இதற்கு முன்பு சர்। சந்திரசகேர வெங்கட்ராமன் (சர். சி.வி. ராமன்) 1930ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார். புகழ் பெற்ற ராமன் விளைவுக்காக அவருக்கு இந்தப் பரிசு கிடைத்தது.


இதைத் தொடர்ந்து 1983ம் ஆண்டு இயற்பியல் பிரிவில் சுப்பிரமணியன் சந்திரசேகர் நோபல் பரிசைப் பெற்றார்। இவர் சர்.சி.வி.ராமனின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.


தற்போது 2009ம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசை வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் வென்றுள்ளார்.
வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் தற்போது அமெரிக்க குடிமகனாக இருப்பதால் அமெரிக்கராகத்தான் கருதப்படுவார்।


இந்தியாவில் இதுவரை ரவீந்திர நாத் தாகூர், சர் சி.வி. ராமன், ஹர்கோபிந்த் சிங் குராணா, சுப்ரமணியன் சந்திரசேகர், அன்னை தெரசா, அமார்த்யா சென், வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ஆகியோர் நோபல் பரிசினை வென்றுள்ளனர்.

தமிழன் 2
தமிழன் என்றோரு இனமுண்டு
தனியே அவனுக்கொரு குனமுண்டு


தமிழன் என்பது ஒரு தகுதியில்லை! - கமல்ஹாசன்


தமிழன் என்பது ஒரு தகுதியோ ஏணியோ அல்ல…அது ஜஸ்ட் ஒரு அடையாளம்தான். திறமை மட்டுமே பேசும். அடையாளம் திறமையோடு ஒட்டிக் கொண்டு வந்துவிடும், என்கிறார் நடிகர் கமல்ஹாசன்.
நான் தமிழன்தான். ஆனால் தமிழன் என்பது எனக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. தமிழன் என்பது ஒரு அடையாளம். உயர்ந்த நிலையை அடைவதற்கான தகுதியல்ல. தமிழனுக்கு மட்டுமல்ல… வேறு இனத்துக்கும்கூட அது பொருந்தும் என்றே நம்புகிறேன். திறமை இருந்து அந்தத் துறையில் ஒருவர் பளிச்சிட்டால், அடையாளம் கூடவே ஒட்டிக் கொள்ளும். நான் இதை எந்த மேடையிலும் சொல்வேன்.


தமிழனே தமிழனுக்கு உயிராம்- அந்தத் தமிழனே தமிழுக்கு தூக்குக் கயிராம்.

அழகு மிளிரும் சாலை


பூத்துக் குலுங்கும் தமிழ் பூங்காவனம்

அழகு மிளிரும் சாலை
அன்பு மிகும் சோலை
பண்பான பூக்களை
பார்வைக்கு வைக்கும்
தமிழ் பூங்கா

பருவங்கள் மாறுப்படலாம்
மனப்பக்குவங்கள் வேறுப்படலாம்
உருவங்கள் இரண்டு படலாம் -- தமிழ்
உள்ளங்கள் மாறுப்படலாமா?

தமிழனுக்கு தாய் வேறுப் படலாம்
தாலாத தாய் அன்பும் மாறுப் படலாம்
தாய் மொழி தமிழனுக்கு வேறாகுமா -- தாய்மை
தமிழ் தான் தாழ்வாகுமா?

எண்ணியவைகள்
எல்லாம் நல்லவைகளாக
எண்ணங்கள் எல்லாம் - தமிழ்
வண்ணங்களாக ட்டும்

பூத்து குலுங்கும் பூக்கள்லேல்லாம்
புத்துலகு பார்வையாகட்டும்
புதுமை பூக்கள் எல்லாம் - தமிழ்
பா க்களாக ட்டும் - பாதை கலாக ட்டும்

எழில் கொஞ்சும் தமிழ் பூங்கா
ஏற்றம் காணட்டும்
ஏந்திழையே - உந்தன்
எழில் கொஞ்சும் பார்வையால் -- தமிழ்
பூங்கா வாழட்டும் வளரட்டும்

குறிப்பு: முகம் காண அன்புச் சகோதரியே
உங்கள் தமிழ் முக வரிக்கு-- இந்த
அறிவின் சிறியோனின்
அன்பான வாழ்த்துக்கள்
மனத்திடத்தோடு
மாநிலம் போற்ற வாழுங்கள்..
குறைகளை சுட்டிக்காட்டுங்கள்.
நிறைகளை போற்றி வாழ்த்துங்கள்.
வலை அகப்பகத்திலே
நிறைய நல்லோர் உண்டு
நல்ல இலச்சிய வாதிகள் உண்டு
நல்ல அறிஞர்கள் உண்டு
நன் மதியாளார்கள் உண்டு
வாழ்க்கை தெளிந்தோர் உண்டு
சீர்த்திருத்தவாதிகள் உண்டு
சிந்தனை யாளார்கள் உண்டு
அவர்களின் கருத்துக்களை மதிப்பதித்து ஆய்ந்து ஏற்றிப் போற்றுங்கள்.


தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள்.
வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்!
அன்புடன் மனோவியம் மனோக்கரன்


October 7, 2009

தேடிவந்த தேவதைதேடி வந்த தேவதை
தேன் நிலவு தாரகை
ஆடிடும் மின்னல் ஆடை
அனைக்க துடிக்கும் அன்புச் சோலை

ஆயிரம் சூரியன்
அனிவகுத்து நிற்க்குது
ஆடையோ கண்ணைப் பறிக்குது
அற்புத மஞ்சள் சிலையோ!

இவளின் புன்னகை
இனிக்கும் மேனகை
கனிவாய் கவர்ந்திடும்
கவின் உரு தமிழ் தேவதை

கனவில் வாழ்தாலும்
கவிதையாய் வாழ்ந்திடுவாள்
கவி தேவதையாய் நின்றாலும்
தமிழ் காதலியாய் வாழ்திடுவாள்.

ஏடுயேடுத்து கவிதை வரைந்திட
எடுத்திடுவோம் இன் அமுது விழா
ஓலையேடுத்து விருந்துண்ண - அன்பாய்
அழைத்திடுவோம் அன்பு வலைப்பதிவாளாரை

இடம் : ஆகாச கோட்டை
சொர்க்க மணிமண்டபம்
நேரம் : மாலையும் இரவும் மயங்கும் வேளை
பொது போக்குவரது எற்பாடு : வின் மீன்களை வாடகைக
அமர்த்திக்கொள்ளவும்.
( வழி தவறி வின்வெளியில் அலைந்து திரிந்தால் எங்களின் மனாகூனா நிறுவனம் பொறுப்பேற்காது)

அறுச் சுவை விருந்தின்
பல சுவை வரிசைகள்:
१.பால் வீதி
2.எரிக் குழப்பு
3.வின் நட்ச்சத்திரம்
4.சூரிய கதிர்
5.வால் நட்ச்சத்திரம்
6.விடி வெளி

இத்துடன் மலேசிய வானுலக வலைப்பதிவாளார்கள் கூட்டமும் நடைப்பெறுகிறது. வந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

இங்கணம் பொருத்திய தேவதை & சிவனேசு தேவதை குடுப்பதினர்.
உங்களை வருக! வருக! வருக!
என வரவேற்க்கும் தேவதையை உள்ளன்போடு ஏற்றுக்கொண்டோர்
* குறை ஒன்றும் இல்லாத குறை ஒன்றும் இல்லை அவர்கள்,
* சுவீட் பிரண்டு சுபாசினி,
* புன்னகைப்பூ புனிதா,
* தல தமிழ்வானன் அவர்கள்,
* நல்ல நண்பர் வாழ்க்கைப்பயணம் விக்கினேசு,
*மனோவியம் மனோகரன் அவர்கள் .
.

October 6, 2009

பிரம்ம ஞானி பாரதி.


பிரம்ம ஞானி பாரதி।


“கவிதை எழுதுபவன் கவியன்று।

கவிதையே வாழ்க்கையாக உடையோன்,

வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி “


- என்றார் மகா கவி பாரதி.இறப்பிலும் பிறப்பிலும் உயர்ச்சிறப்பாய் வாழ்ந்து காட்டிய உலக கவிகளில் சிறந்த கவி மகா கவி பாரதியார். எண்ணிலும் எழுத்திலும் சொல்லிலும் செயலிலும். தான் நினைத்ததை நினைத்தவாறு செய்துக் காட்டிய செயல் வீரர்.


தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ? “
என்று எவ்வளவு தன்னம்பிக்கையாய் கேள்வி எழுப்பிகிறார்? அவன் தானே கர்ம வீரன்।


“காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்; நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை; நோக்க நோக்கக் களியாட்டம். “
என்று குதுகளிக்கும் பாரதியார்।

மனுச சாதி மட்டும் தான் நீ வேறு, நான் வேறு என்பான். உயர்ந்தவன் தாழ்தவன் என்ற பாகுபாடு, மனு குலத்தில் வர்ணாசிரமத்தை வலிந்து தினித்து மகா பாதக செயல்களை, தீண்டாமை என்னும் பெயரில் புகுத்தி கொடும் செயல்களை செய்வான், ஆனால் மிருகங்கள் தன் இனத்தோடு இனமாய் கூடி குளாவி உயர்தவன் தாழ்ந்தவன் என்ற ஏற்ற தாழ்வு பார்ப்பது கிடையா! நீயும் நானும் ஒன்று என்னும் பிரம்மம் ஞானம்। உடலால் வேறுப்படிருக்கலாம் உள்ளத்தால் உணர்வாள் மாறுப்படிருக்கலாம்।ஆனால் உயிரால் நான் அனைத்து ஜீவராசிகளைப் போன்றதே என் உயிர், நான் பிரம்மம்। உயிர்கள் மட்டும் அல்ல,அனைத்து பிரம்மம். கானும் மலையும் பிரம்மம். கடல் நீரும் பிரம்மம். நோக்கும் திசை எல்லாம் பிரம்மம் என்று தன்னையே பிரம ஞானியாய் கான்கிறான் பாரதி.


“சாதிகள் இல்லையடி பாப்பா! குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!
நீதி,உயர்ந்தமதி,கல்வி- அன்புநிறைய உடையவர்கள் மேலோர்।”

மன்னுயிரையும் தன்னுராய் போற்றும் பக்குவம்।தன்னைப்போன்று பிறரையும் பிரம்மம்மாய் பார்த்து।அவர்களுக்கும் குரல் கொடுக்கும் ஒரு சித்தன் தான் பாரதியார்। யாருக்கும் தான் தாழ்ந்து போக கூடாது। யாருக்கும் தலைவாணங்கா கவிஞனின் திட நெஞ்சப் பண்பு। அதே சமயம் தன் இனத்தின் ஒரு பகுதியினார் கூனி குறுகி சிறுமைப் பட்டு வாழ்வது கண்டு ‘நெஞ்சு பொறுக்கிதிலையே இந்த நிலைக்கெட்ட மனிதரை நினைந்து விட்டால்।” என்று பாடியபாரதி,


”அஞ்சி அஞ்சி சாவார் அவர் அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே!! வஞ்சனைப் பேய்கள் என்பார் இந்த மரத்தில் என்பார் அந்த குளத்தில் என்பார்!” ...

என்று நெஞ்சம் வெதும்புகிறார்। நீயும் பிரம்மம் நானும் பிரம்மம் நமக்குள் ஏன் ஏற்ற தாழ்வு? என்று வினா எழுப்பி அவர்களுக்கும் பூனால் இட்டு தன்னைப் போன்று உயர் நிலைக்கு அழைத்து செல்கிறார்।


பாரதியாருடைய கருத்தியலின்படி பரம்பொருள் எல்லாப் பொருள்களிலும் உள்ளும் புறமும் புகுந்து நிரம்பியுள்ளது, செயலில் உள்ளது, ஒவ்வொரு தனிப்பட்டதிலும் அதுவே பிரவேசித்துள்ளது, தனிப்பட்டவைகளும் உண்மை, தனிப்பட்ட ஆத்மாவானது பிரம்மத்தின் பிரதிபலிப்பு அன்று, பரம்பொருளே அப்படி உள்ளது என்பதுவே பாரதியாரது சிறப்பியல்பு, இதுவே அவரிடத்தில் பக்குவம் கொண்ட தத்துவம்,அதன் மரபு।


“விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும் மேவு பராசக்தியே!”

உலகப்பொருள்கள், செயல்கள், பண்புகள், விதிகள் எல்லாம் உண்மை, நித்தியம், சத்தியம் இவையெல்லாம் பரசிவ வெள்ளம், இறைவெள்ளம், உள்ளும் புறமும் ஒன்றுக்கொன்று வேற்றுமை முரணற்றுப் பாய்ந்து ஒரே செயலாக ஊற்றாய்ப் பொழிவது, தனித்த ஒரு சுயசெயல், சுயதீர்மானம், சுய உத்தரவாதம் என்பன இல்லை, பலவாய் வேற்றுமைப்பட்டிருப்பது என்பதுவே நீக்குவதற்கு உரியது.


பிறப்பு என்பது பாபமானதன்று, ஏனெனில் அது இறையிலிருந்து உண்டாகிறது, உலகை நேசித்திருத்தல் என்பது தீமையோ அறியாமையோ அன்று। ஏனெனில் இறையின் இருப்பே இப்படியாக இருக்கிறது, இறப்பு என்பது தண்டனையன்று, ஏனெனில் இயலுலகப்பொருள்களில் இறைவனை உணரும்போது அதனோடு ஒன்றாகிறது, பிறந்து இருந்து மறையும்போது சந்ததித்தொடர்ச்சியைத் தருவது இறை நிலையின் புதுப்பித்துக்கொள்ளும் செயல்தன்மையே ஆகும்। அகத்தில் உள்ளதே புறத்திலும் உள்ளது, அகமும் புறமும் முரணானவையல்ல என்பதிலேயே பாரதியின் தத்துவக்கட்டமைப்பின் சிறப்பும் உள்ளது.


பாரதியின் பாடல்களில் சமுக நீதிக்கும், சமுக மறுமலர்ச்சிக்கும் வித்திட்டுள்ளது போன்று,இறை ஞானம் மட்டும் அல்ல,இறை தத்துவத்தை கூட அவனுடைய பாடல்களில் கானலாம்.


அவன் ஒரு பிரம்ம ஞானி।


October 5, 2009

அன்பு மனம் செங்கரும்பு

நிலம் பார்த்து நீ நடந்தால் - உன்
முகம் பார்த்து நான் வருவேன்.
நிழல் போல் நீ தொடர்ந்தால் - உன்
விழிப் போல் நான் வருவேன்

நிலவாய் நீ இருந்தால் - உன்
நினைவாய் நான் இருப்பேன்
மலராய் நீ இருந்தால் - அதன்
மணமாய் நான் இருப்பேன்

முகிலாய் நீ மிதந்தால் - வான்
மழையாய் நான் பொழில்வேன்
ஒளியாய் நீ இருந்தால் - பொன்
சுடராய் நான் இருப்பேன்

இருவரும் ஒன்றினைந்தால்
இவ்வுலகை வென்றிடுவோம்
அன்பால் பினைந்த திருந்தால்
அழகாய் வாழ்ந்திடுவோம்।


வாழ்க வளமுடன்
கி.மனோக்கரன்

October 2, 2009

எனக்கும் சில அடிமைகள் வேண்டும்


இது விமர்ச்சனம் அல்ல, சில கிறுக்கல்கள் மட்டும்.


//"சில நூற்றாண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட சித்தாந்தம் இது। மனிதர்களின் சிந்தனை-மனம்-சுற்றம் எனும் கூறுகளை அடிப்படையாகக் கொண்டு அமைவது. எல்லா மனிதர்களுக்குமே உணர்ச்சி என்பது இயல்பான ஒன்றாக இருக்கிறது. அப்படி இருக்க ஓர் எதிர்வினைக்கு அல்லது வெளிப்பாட்டுக்கு சிந்தனை முக்கியமா அல்லது உணர்ச்சி முக்கியமா என ஓர் உடனடி தீர்வு காண முடியுமா?"


வருங்கால இயல் என்பது எதிர்க்காலத்தில் என்ன நிகழும் என்பதை கதைகளிலே அல்லது தீர்க்க தரிசனமாய் சொல்ல வரும் நிகழ்வாயை கூட இருக்கலாம்। ஆங்கிலத்தில் fiction story என்று சொல்லப் படும் கதை அம்சம் சில சமயங்களில் மிகப்பட்ட பிரமண்டமான கதை பின்னனியை கொண்டு சொல்லப் படும் ஆங்கில நாவல்கள் போல் அன்றி தமிழிலே குறைவுதான். உண்மை இல்லாத பட்சத்தில் அது ஒரு கற்பனை திறன் மிக்க படைப்பாக கூட இருக்கலாம். அல்லது கற்பனை திறன் கொண்டு புதிய உலகை செதுக்கும் சிற்பியாக கூட இருக்கலாம். தமிழரின் தீர்க்க தரிசனமே அல்லது வருங்காலத்தை பற்றிய சிந்தனை திறன் தமிழரின் இலக்கிய வானில் புத்தம் புது நிலவாகத்தான் இருக்கிறது.


அந்த வகையில் நண்பர் விக்கியின் எனக்கு சில அடிமைகள் வேண்டும் என்னும் சிறுகதையின் ஒரு சின்ன அலசல்।நல்ல கற்பனை கதை. வாருங்கால இயலின் வாசலாகவும் எதோ ஒரு புதுமை உலகிற்க்கு நம்மை அழைத்து சென்றுள்ளார்.புதிய சிந்தனை.புதிய வார்ப்புக்கள்.நவீன மலேசிய இலக்கிய வானில் புதிய நம்பிக்கையை என்னும் நாற்றை விதைத்திருக்கிறார்.


கதையின் தலைப்பு மாறுப்பட்டு சிந்திக்கும் ஒரு மனிதனின் செயல் வடிவமா?அல்லது திரைப்போடப்ப்ட்ட மனித வர்க்கத்தின் பிரதிபலிப்பா என்று தெரியவில்லை।இன்னும் கூடுதலாக சொல்லவேண்டும் என்றால் எழுத்தாளனின் எண்னங்களின் வடிவங்களின் வாய்க்கால என்று புரியவில்லை॥அடிமை வேண்டுமா? இல்லை அடிமை போன்ற மனைவிகள் சிலர் வேண்டுமா? என்னிடம் சொல்லிவிடுங்கள் விக்கி. அதிசயத்தக்க அருமையான தலைப்பு, காலத்தின் தேவைக்கு ஏற்ற பொருத்தமான தேர்வுதான்.


//அச்சமயம் எனக்கு 25 வயது இருக்கலாம். வாழ்க்கை இயந்திரத்தை விட வேகமாக‌ ஓடிக் கொண்டு இருந்த பொழுது இக்கதை நடந்தது. சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் 2518-ஆம் ஆண்டு நடந்த கதை. 2012ல் பூமி அழிந்து போய்விடவில்லையா என கேள்வி கேட்க நினைப்பவர்கள் ஒரு டீ சாப்பிட்டுவிட்டு வரவும். அது வரை நான் கதை சொல்லிக் கொண்டு இருக்கிறேன்.//

கடந்த காலத்தில் எப்படி இருந்தது இந்த உலகம்?,நிகழ் காலத்தில் எப்படி இருக்கிறது இந்த உலகம்? இனி வருங்காலங்களில் எப்படி இருக்கும் இந்த உலகம்? கணக்குப் போட்டு காலத்தை வெற்றவர்கள் உண்டு।கதை அளந்து காலத்தை தொலைந்தவர்கள் அதிகம்।ஒரு சிலரின் கனிப்புக்கள் காலத்தை வெல்வது மற்றும் அல்ல உலகத்தின் போக்கை கூட மாற்றக்கூடும். உதாரணத்திற்க்கு தொமஸ் அல்வா எடிசன் கண்டுப்பிடிப்பு மெதுவாய் ஆமை வேகத்தில் நகர்ந்த உலக நாகரிகத்தை அதி நவீன உலகத்திற்க்கு இட்டு சென்றுள்ளது.அதோ போன்று அனுயுகம் நமது நாகரிகத்தை வின்வெளியிலும் வியப்பித்திருக்கிறது. ஒரு காலத்தில் நிலவில் கால் பதிப்பது என்பது கனவில் மட்டும் இயலும் காரியம். ஆனல் இன்று விண் வெளிப்பயணம் என்பது சாத்தியமான ஒன்றுதானே. மனித சிந்தனை திறன் விண்ணை முட்டும் அளவுக்கு வியப்பித்திருக்கிறது.சிந்தனையின் விளைவு தானே இன்றய நாகரிக உலகம்.


நாளைய மனிதன் விண்ணில் மேடை அமைத்து,வியப்பித்திருக்கும் விண்வெளியில் விந்தைகளை செய்து விண் கிரகங்களை வெற்றிக்கொள்வான் என்பதை மறுக்க முடியாத உண்மைதான்। செவ்வாய் கிரகத்திலும் சரி வேறேந்த கிரகத்திலும் சரி காலனி அமைத்து இங்குள்ள மக்களை அங்கு கொண்டுச் சென்று அடிமை படுத்தி, மக்களின் முளை திறன்களை எந்த நேரத்திலும் கட்டுப்படுத்தி மக்களை தன் வயப்படுத்த கூடிய கண்டுப்பிடிப்புக்குள் மனித வர்கத்தை சுதந்திரம் அற்ற மாக்களாக வைக்க கூடிய வாய்ப்பு அதிகம். அதியுர் நாகரிகம் பெற்றாலும் அடிமை விளங்கு உடைப்பதற்க்கு மனிதன் என்றுமே போராடிக்கொண்டுதான் இருப்பான்.


//உலக வளர்ச்சி ஆட்சியாளர்களுக்குத் தலைவலியாக அமைந்திருந்த காலக் கட்டம் இருந்தது. அதை தகர்ப்பதற்கான வழிகளை கண்டறிய ஏகப்பட்ட பணம் வாரி இறைக்கப்பட்டது. அவர்கள் நினைக்கும் வகையில் மக்கள் இருந்துவிட்டால் பிரச்சனைகள் இல்லை।//


//அன்று மித மிஞ்சிய மன வருதத்துடன் வீடு திரும்பினேன். அலுவலகக் கட்டிடத்திலேயே வீடு இருந்தது. வீட்டுக்குப் போக மூன்று கிலோ மீட்டர் உயரம் பயணிக்க வேண்டும். குளித்துவிட்டு வந்த போது 3 புதிய தகவல்கள் உள்ளதாக தபால் பெட்டி அறிவிப்பு செய்தது.//

//பாரி, அம்மா பேசுகிறேன். எப்போது வீட்டுக்கு வரப் போகிறாய். உன‌து திருமணம் சம்பந்தமாக அரசாங்கத்திடம் விண்ணப்பம் செய்துவிட்டாயா ? உனது திருமண வயது காலாவதியாக இன்னும் 3 வருடங்களே எஞ்சியுள்ளன என்பதை கவனத்தில் கொண்டாயா...?"//

நண்பர் விக்கியின் அற்புத படைப்பு. எதிர்க்காலம் எப்படி இருக்கும் என்பதை நன்றாக சிந்தனை திறன் கொண்டு வடித்துள்ளார். நல்ல சிந்தனை வளம். விரசம் இல்லை கதையில்.காமத்தை, கண்ணாடி பொக்கிஷத்தில் வைத்த வைரம் போல் அழகுற எடுத்தாண்டு இருக்கீர்கள். காமத்து வரிகளை பச்சையாய் அசிங்க படுத்துவதற்க்கும் ஆநாகரிகமாக உட்படுத்துவதற்க்கும் எனக்கு உடன்பாடில்லை நண்பரே.அந்த வகையில் உங்களின் சில வார்தைகள் தான் ஆனாலும் சிறப்பான வரிகள்
காமத்து வரிகளை ஊறுக்காய் போன்று தொட்டுக்கொண்டால் சுவை। அதைவிடுத்து ஒரு பானை ஊறுக்காயில் கொஞ்சம் சோற்றை வைத்தால் எப்படி இருக்கும்? அது விஷம் அன்றே?.


வாழ்க்கையில் அற்புதமான அந்த விஷசயத்தை சந்தனமாய் குழைந்து கொடுத்து, அதனுடன் காமத்து பாடல்களை அழகுற இலக்கிய நயத்தில் வழங்கிய கண்ணாதாசனின் இறவா பாடல்களை நாம் மறக்க முடியுமா?
உங்கள் கதை அழகான எழுத்தோட்டம் நீர்ரோடை போன்று சல சல வென்று ஒடும் எழுத்து நடை ।ஆரம்பம் விருவிருப்பான கதை ஓட்டம்। ஆனால் முடிவில் சிறிது மெது நடையோட்டம். இப்படி பட்ட கதை கரு பிரபல ஹோலிவுட் படங்களுக்கு பழசு. உங்கள் கதையில் சிந்தனை திறன் மிக்க வாழ்க்கையை வடிவமைதுள்ளீர்கள். மேலை நாட்டவர்களை விட இன்னும் கூடுதாலாக சிந்த்திக்கவேண்டும் நாம். தமிழர்களுக்கு தேவையான கரு பொருள். இன்னும் நீங்கள் புதுமையான சிந்தனைகளை உங்கள் கதைகளில் புகுத்தவேண்டும்.


சித்தம் கலங்கியவனின் அறிவு சிந்திக்க மறுக்கும்। சித்தம் தெளிந்தவனின் அறிவு சிந்தித்துக்கொண்டே இருக்கும். வீக்கி நீங்கள் இன்னும் ஆழமாக சிந்தித்து அருமையான நல்ல படைப்புக்கு சிற்பியாக இருக்க வேண்டும்.


மொத்தத்தில் உங்கள் சிறுகதை கரும் வானத்தில் துரிகையில் வரைந்த வண்ணச்சித்திரமாய் தெரிகின்றது। அந்த வண்னச்சித்திரத்தில் உலகின் எதிர்க்காலமும் தெரிகின்றது. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் விக்கி.