September 15, 2009

ஆசை சீர் அமைத்தல் சில உட்கருத்துக்கள் அதன் வழிமுறைகளும்
ஆசை சீர் அமைத்தல் சில உட்கருத்துக்கள் அதன் வழிமுறைகளும்வெளியூர் இரயில் பயணம்। உங்கள் மனைவி உங்களுக்கு காச்சிய பாலை ஒரு போத்தலில் விட்டு உங்களிடம் கொடுத்து, போகும் வழியில் அருந்துமாறு சொல்கிறார். நீங்களும் சரி என்று எடுத்து செல்கிறீகள். வழியில் உங்களுக்கு பசியில்லை, வயிறு நிறைந்துவிட்டது. உங்களால் இனி பாலை குடிக்க முடியாது என்ற நிலை. நாளைக்கு குடிக்கலாம் என்றால் பால் கெட்டுவிடும். கெட்டுவிட்ட பிறகு மற்றவர்களுக்கு கொடுக்கலாம் என்றால் ஆசை கடும் பற்றாக மாறும்.அதாவது பேராசையாக மாறும். இன்று என்னால் குடிக்க முடியவிலை. நாளை வைத்திருந்தால் பால் கெட்டுவிடும் அதனால் இன்று வேறு ஒருவருக்கு கொடுப்பது நிறைமனம்மாகும். நீங்கள் பால் அருந்த நினைப்பது ஆசை.அது முடியாமல் போக நீங்களே வைத்துக்கொள்ள நினைப்பது பேராசை,உங்களால் அருந்த முடியாமல் உங்ளுக்கு போதும் மற்றவர்களுக்கு கொடுக்க நினைப்பது சீர் செய்யப்பட்ட உங்கள் நிறைமனம். நம் மன எண்ணங்களை,மன ஆசைகளை சீர்த்தூக்கி சரியான வழித் தடங்கள்களில் வைத்தோம் என்றால் ஆசைகளை நாம் சீர் செய்திருக்கின்றோம் என்று தான் பொருள்.எந்த இடதில் மனம் விரிகிரதோ அங்கு ஆராய்ச்சி வயமாகும்.அந்த மனதை விரிவிலேயே வைத்துக் கொண்டு இருக்கும்போது ஆசை பேராசையாக மாறாது. சினம் வராது. ஏனென்றால்,மனவிரிவில் எல்லாம் விளங்கிக் கொள்கிறது.ஆசையை முறைப்படுத வேண்டும், அப்படி ஆசை முறைப்படுத்திவிட்டால் அந்த ஆசை நிறைமனம் என்பதாக மாறும். ஆசை முறை கெட்டுப் போனால் பேராசை, முறைப்டுத்தப்பட்டால் நிறைமனம்.
சினம் எப்போது உண்டாகிறது என்றால் ஆசைக்கு தடை உண்டாகும்போது। இன்பம் என்ற கற்பனைக்குத் தடை உண்டாகும்போது,தான் அனுபவித்துக் கொண்டுடே இருக்கக்கூடிய இன்பதில்ருந்து தன்னை யாராவது தடுக்கும்போது, அதுதான் தடையாக இருக்கிறது என்று எண்ணும் போது,அந்த தடையை நீக்க முயலும் போது, அந்த முயற்சில் வேகத்தில் வரக்கூடிய உணர்ச்சிவயமான மனநிலைதான் சினம்.குணங்களை ஆறு குணங்களாக பிரித்து இருக்கிறார்கள்.ஆறுவகை குணங்கள் எல்லாம் தீமை தரத்தக்க உணர்ச்சி வயப்பட்ட அறிவின் மாற்றம்.
தீமை தரத்தக்க உணர்ச்சி வயப்பட்ட அறிவின் மாற்றம்.
1
பேராசை
2
சினம்
3
கடும்பற்று
4
முறையற்ற பால்க்கவர்ச்சி
5
உயர்வு தாழ்வு
6
வஞ்சம்

சீர்செய்யப்பட்ட அறிவின் செயல் நிலை
1
பேராசை
மாற்றம்
நிறைமனம் உணர்வாக மாறும்
2
சினம்
மாற்றம்
பொறுமை என்ற உணர்வாக மாறும்
3
கடும்பற்று
மாற்றம்
ஈகை உணர்வாக மாறும்
4
முறையற்ற பால்க்கவர்ச்சி
மாற்றம்
கற்பு நெறியாக மாறும்
5
உயர்வு தாழ்வு
மாற்றம்
நேர்நிறை உணர்வாக மாறும்
6
வஞ்சம்
மாற்றம்
வாழ்த்துக்காளாக மாறும்

ஆசை முறை பிறழ்ந்தபோது எடுக்ககூடிய பல வடிவங்கள் தான் ஆறு குணங்களும்.ஆறு குணங்களையும் ஒவ்வொன்றாக பிடித்து.அது குறைய வேண்டும், இது குறைய வேண்டும் என்று நாம் அவஸ்தைபடுவதைவிட,ஆசையை இன்னது என்று அறிந்து,அங்கேயே அதை ஒழுங்குபடுத்திவிட்டால் மற்ற குணங்கள் வராது.
எண்ணங்களின் பிறப்பிடம் தான் ஆசை,மனதை புத்தியை அல்லது அறிவை ஒருமை நிலை படுத்தி விரிந்த எண்ணங்களை மனதால் புத்தியால் அறிவால் ஆய்வு செய்து, நமது ஆசையை சீர் செய்தால் மனக்கவலை பறந்தோடும்.
நான் சில சமயங்களில் சிந்திப்பதுண்டு ஏன் நமது சமுதாயம் தரம் இழந்து கைக்கட்டி வாய் போத்தி வாழ்ந்துக்கொண்டிருக்கிறது என்று। நமக்குள் அடித்துக் கொள்வதும். நம்மை நாமே இகழ்வது எங்கிருந்து வந்தது இந்த பண்பு? பரப்பரை பரப்பரையாக பாவப் பதிவுகளை எத்தனையோ தலைமுறைகள் தொடந்து வந்துக்கொண்டுதான் இருக்கிறது. DNA என்று சொல்லக்கூடிய அனுக்களின் பதிவுகளை அழிப்பது எண்ண சீர் அமைபுதான்,அல்லது ஆசையை சீர் செய்தல். தனி மனித பண்புகள் தான் ஒரு சமுதாய பண்புகளாக மிளிரும். ஒரு தனி மனித மனவளத்தை இன்னும் மெருகு ஏற்றினால் இந்த சமுதாயம் இன்னும் வளம் பெரும். காலம் காலமாக நமது சமயத்தில்,சமுகத்தில் சொல்லாதா நல்ல பண்புகளா? இருந்தும் என்ன பயன்? மனதை ஆய்வு செய்து மனத்துயரங்களை, துன்பங்களை அகற்ற வழி தந்தார்களா? உயர்ந்த பண்புகளும் அதன் பலன்களும் ஒரு சில குழுக்களுடன் அல்லது குலத்துடன் குரு குல கல்வி போன்று இதுகாறும் இருந்து வந்துள்ளது. அல்லது ஞானிகள் சித்தர்கள் சிந்தனை அடிதட்டு மக்களை சென்று அவர்களை மீளா துயரிலிருந்து மீட்டேடுத்தாத?இல்லையே! இதுதான் வாழ்க்கை, அதுவும் விஞ்ஞாண பூர்வாமாக ஆய்ந்து அறிந்து மூடத்தனத்தை மறுத்து முற்ப்போக்கு சிந்தனையை செலுத்தி அறிவுப்பூர்வாமாக அதே சமயம் ஆன்மீக கருத்தோடும் வாழ்வது எவ்வளவு உயர்ந்த தன்மானமான வாழ்வு தானே.ஆன்மீகம் என்பது மனமும் அறிவு சம்மந்த பட்டது।அதை மதம் என்ற போர்வைக்குள் போட்டு நம்மையும் நமது வாழ்வையும் இருட்டடிப்பு செய்து விடுகின்றனர் சிலர். மதத்தில் நல்ல உயர்ந்த கருத்துக்கள் மறைப்பொருளாய் வைத்துவிட்டு சென்றதனால் அதை பணம் பன்னும் வியாபார மடம்மாகிவிட்டது. மூடத்தனங்கள் முட்டாள் தனங்களை கேள்வி எழுப்பும் போது நாம் நாஸ்திகனாய் ஆகிவிடுகின்றோம்.எங்கள் குரு வேதாத்திரி மகாரிசி அழகாக வாழ்க்கை பாதையை வகுத்து தந்துள்ளார். வாழ்க்கைக்கான வழிமுறை பயிற்சிகள் அழகான பாடத்திட்டத்தில் தொகுத்து தந்துள்ளார்.
அருளருவி என்ற புத்தக தொகுப்பை நீங்களும் படித்து பாருங்கள்
அருளருவின் பொருளடக்கத்தின் சில தலைப்புக்கள்1.தற்காலத்திற்கேற்ற யோக முறை
2.குண்டலினி யோகமும்
3.வாழ்க்கை தத்துவம்
4.எண்ணம் ஆராய்தல்
5.ஆசை சீர்மைப்பு
6.சினம் தவிர்தல்
7.கவலை ஒழித்தல்இனிமையான வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை பயிற்சிகள்
1.எளிய குண்டலின் யோகம் (தீச்சை)
2.காயகல்பம் ( வித்து சக்தி என்னும் உயிர்ச்சக்தியை மேல் எழுப்பி உடலை காத்தல்)
3.தியானம் தவம் யோகம் ( சில ஆற்றலை பெரும் முறை)
4.எளிய முறை யோகம் பயிற்சிகள் (எளிய முறை உடல் பயிற்சிகள்)
5।அகத்தாய்வு பயிற்சிகள் (மனதை ஆராய்தல்)ஒரு தனி மனிதனின் ஒழுக்கத்திற்க்கும் சமுதாய மேன்பாட்டிற்கும் வாழ்க்கை கல்வி முறை எவ்ளவு அவசியம்। நமக்கு பிள்ளைகளை அறிவிற் சான்றோன்னாகவும் அகத்தை அறிந்த ஒழுக்க சீலனாகவும் வாழவும் வளரவும் வேதாத்திரி மகாரிசி கற்று தந்த பாடத்தை நாமும் அதனுடன் ஒன்றி நிற்ப்போம்.அண்னாரின் ஆன்மீக வழி தமிழ் சமுகத்தை துனப கடலில்யிருந்து மீட்டெடுக்கும்.வாருங்கள் நண்பர்களே, அகத்தை ஆய்வு செய்வோம்.
கருத்துக்கள் சில அருளருவியில் இருந்துஆக்கம் மனோகரன்


Post a Comment