September 30, 2009

தமிழர் வாழ்வு நெறி


தமிழர் வாழ்வு நெறிஅறம் தமிழர் இலக்கிய வானில் முக்கியதுவம் பெரும் ஒரு சொற்றுடர்। சங்க காலம் தொட்டு இன்றைய நவின இலக்கியம் வரை அறத்தின் மாண்பு வழியுறுத்தி கூறப்பட்டுள்ளன.தமிழரின் வாழ்வியல்,அறத்தோடு இனைந்த ஒன்றேயாகும்.அறத்தை நெறிப்படுத்தி முறையுற வகுத்த பெருமை பழந்தமிழ் இலக்கியத்தின் சிறப்பாகும்।அவ்வாறு நெறியும் முறையும் போற்றி வளர்த்த காரணத்தால்தான்,பழைய அற நெறி பாக்கள் எல்லாம் கலைச்செல்வம் மிளிர்வதுடன் நுட்பமும் தூய்மையும் குன்றாமல் விளங்குகின்றன.மற்றவர் காமத்து பாக்களை புனைந்துரைத்துக் களித்து திரிந்த அந்த காலத்தில், தமிழ் சான்றேர்கள் உள்ளத்தின் உணர்வை தெரிந்தெடுத்துக் கலைத்தொண்டு ஆற்றிய சிறப்புக்கு காரணம் அதுவே ஆகும்.மனிதன் நாகரிகம் பெற்றது முல்லை நிலத்திலே ஆகும்। மக்கள் இயற்க்கையோடு இனைந்து வாழ்வதற்க்கு ஏற்ற இடம் அதுவே ஆகும். தமிழ் இலக்கியத்தை அறம் புறம் என்று இருவகையாக்காலாம். அகத்துறையே தமிழ் இலக்கியதில் சிறப்பாக பேசப்படுகிறது. இப்படி பேசப்படும் தமிழ் இலக்கியத்தில் அறம் சிறப்பாக ஆய்ந்துரைக்கப்பட்டுள்ளது.அறம் உயர்ந்த நாகரிகத்தின் மறு வடிவம்.வாழ்வியல் பன்பாடு மக்கள் தான் பெற்ற அனுபவ கூறுகளை,வாழ்க்கை படி நிலைகளில் வைத்து வாழ்வது ஆகும். நாகரிகம் பிறந்த முல்லை நிலத்திலே கற்ப்பை போற்றுவது தமிழரின் வாழ்வியல் கூறாகும். ஆங்கிலத்தில் உள்ள முல்லை நிலப் பாக்கள் கருத்துவைகையால் வேறுபட்டுள்ளன. தமிழில் உள்ளவாறு முல்லை நிலத்து தமிழர் வாழும் கற்பொழுக்க மிக்க காதலர்கள் வாழ்க்கை பண்புகூறுகள் ஆங்கில அல்லது மேனாட்டு இலக்கியத்தில் அமையவில்லை.
கற்பொழுக்கத்தின் திறன் காதல் வாழ்க்கையில்தான் அடங்கியிருக்கிறது,”காதலாகி கசிந்து கண்ணிர் மல்கி” என்று தேவாரம் பேசுகிறது। பழந்தமிழர் இலக்கியத்தில் காதல் அன்பின் மறுவடிவம், இன்பத்தின் முழு வடிவம். அக்காரணத்தினால்தான் பன்பாடுமிக்க தமிழர் நாகரிகம் இன்பத்தை இருவகைப்டுத்தினார். சிற்றின்பம், பேரின்பம். முன்னது ஆசையின் பிறப்பிடம், பின்னது ஆன்மாவின் இருப்பிடம். இது தான் அறத்தின் உயர்ந்த நிலை. சிற்றின்பத்தை சிறுமை படுத்தி பேரின்பத்தை பெருமைப்படுத்தி பேசுவது தமிழரின் வாழ்வு, இறையோடு கலந்த வாழ்வை நிறை எய்துவது தமிழரின் வாழ்வியலின் நோக்கு.அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல.
அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை; புகழும் இல்லாதவை. - What from virtue floweth, yieldeth dear delight; All else extern, is void of glorys light.
குறிப்பு:15 ஆண்டுக்கு முன் எழுதிவை.புக்கிட் மெர்த்தாஜாம் இந்து இளைஞர் இயக்கத்தில் இனைந்த்திருத்த்போது அந்த இயக்கம் வெளிட்ட இயக்க மலருக்கு வரைந்த கட்டுரை .அந்த நிகழ்வுக்கு தமிழ் குயில் கா. கலியபெருமாள் சிறப்ப்ரை ஆற்றினார்.விடுப்பட்ட எழுதுலகம் இப்பொழுது வைப்பதிவில் தொடர்கிறது,நன்றி வலைப்பதிவு உலகத்தினர்க்கு..

September 22, 2009

வாழ்க மாரி தாயே !

வானத்து தடாகத்தில்
வழிந்தோடும் நீறுற்றுகள்
நானல் இலைப் போல் Add Image
நகர்தோடும் மேகத்தாமரைகள்
வற்றாத ஆகாச கங்கை
வளைந்தோடும் வானவில்
மிதந்து வரும் வான் பூக்கள்
மகரந்ததை தூவி விடமுகில் மேகங்கள்
கார்கால வயலுக்குள்
கறைந்து போக
குளிர்ந்த நீரலைக்குள்
வெப்ப கர்பங்கள்
வெளி வர துடிக்கும்
நீர் குமிழ்கள்

ஆகாச தாமரைகள்
அணித்திரண்டு வர
வானத்து தடாகம்
மடைத் திறந்திட
கொட்டும் மேளத்துடன்
கூடிக் குளவும்
மின்னல் தாரகை

வெண்ப் பூக்கள் எல்லாம்
மாலைகளாக
மழைத் துளிகள் எல்லாம்
வாழ்த்துக்களாக.
மாரித் தாய் மன மகிழ
பூமி தாய் பூரிக்க
புலர்ந்தது இனிமை
பூமி எங்கும் இனி
பூபால இராகம் தான்

வாழ்க மாரி தாயே !
வாழ்க மழைத் தாயே !

September 19, 2009

விழி நீர் வழிந்தது உதிரமாய்விழி நீர்
வழிந்தது உதிரமாய்

உடலோ
சல்லாடையாய் துளைத்தது
துப்பாக்கி முனை.......

எங்கள் ஆவியோ
சூரியன் அஸ்த்தமனத்திற்கு பிறகு
பூமியில் புதையுண்டது।

எங்கள் மரணம்
புத்தகமாய் புரட்டிக்கொண்டிடுக்கிறது
உலகம்........
நாங்கள் ஈழத் தமிழர்கள்

அன்புடன்
கி.மனோக்கரன்
September 18, 2009

கடல் கண்ட தமிழ்


பழைய சிறுவர் கதைகளில் வருவது போன்று முன்பு ஒரு காலத்திலே என்று ஆரம்பிப்பது போன்று எனது பழைய நினைவு பொக்கிஷ்சத்தில் கிடைத்த ஒன்றை துசு தட்டி பார்த்த பொழுது இனிய நினைவுகள் ஒடி வந்து ஒட்டிக்கொண்டன।
இருபது அல்லது இருவத்திரண்டு வயது இருக்கும்।இப்பொழுது டெப் கல்லூரி என்று சொல்லப்படுகின்ற சிரம்பான் தொழில் நூட்ப கல்லூரியில் பயின்று கொண்டிருந்தேன்। எதோ அலுவல் காரணமாக கோலாலப்பூருக்கு வரவேண்டிய வேலை இருந்தது। அந்த சமயத்தில் எனது சிற்றன்னையின் மைந்தன் இரவி என்னிடம் இன்று ஒரு நிகழ்வு பாவலர் மன்றத்தில் கவிதை வகுப்பில் நாம் பங்கெடுப்போமா என்று என்னிடம் வினாவினர்.நானும் சரி என்று அவருடன் சென்று அந்த நிகழ்வில் கலந்துக் கொண்டேன்.
கவிதை வகுப்பில் கலந்து கொள்வது அதுதான் முதல் முறை। கவிஞர் தீப்பொறி பொன்னுச்சாமி பாவலர் மன்றத்தை வழி நடத்திக்கொண்டுருந்தார்। கனீர் என்ற குரல் கம்பிரமான உருவம்.முறுக்கு மீசை. அதுதான் நான் அவரை முதலும் இறுதியாகவும் பார்த்தது.அதன் பிறகு அப்படி ஒரு கவிதை வகுப்பில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு வரவே இல்லை.
தமிழ் நேசன் ஒவியர்। ஒரு அழகிய பெண்,அருவியில் பக்கதில் நிற்பது போன்று ஒரு சித்திரத்தை வரைந்து அதற்கு ஒரு கவிதை இயற்ற சொன்னார்கள்।மொத்தம் இருவது வருகையாளார்கள் இருந்திருப்பார்கள் என்று நினைக்கின்றேன்। அவர் அவர் அவர்களின் கவிதையை சார்ப்பித்திருப்பார்கள்।என் பங்குக்கு ஒரு கவிதை வரைந்தேன்। இதோ என் கவிதை.......
இதழ் சிந்தும் இதயமே
இமயம் என்னும் வரமே
கடல் கொ(க)ண்ட தமிழ் போல
கனவுலகில் வாழ்கின்றேன்

நீ இல்லாமல் என்நினைவு இங்கில்லை
நினைவோ உன்னை மறப்பதற்கில்லை
கனவுலகில் வாழ்வதெல்லாம் - உன்னை
கவிதையில் வடிப்பதற்கு தான
கவிஞர் தீப்பொறி பொன்னுச்சாமி யாரப்பா? இந்த கவிஞன் என்று என்னுடைய கவிதையை பார்த்து।அருமையாக இருகிறது।என்று சொல்லி முடிப்பதற்குள்,ஆ॥ஆ॥ கடல் கொண்ட தமிழ் என்றால் இப்பொழுது தமிழ் எங்கே இருக்கிறது என்று வினா எழுப்பினார்? கொண்ட என்பதை விட கடல் பல கண்ட தமிழ் என்றால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று திருத்தி தந்தார் என் கவிதை வரிகளை।கவிதை நயம் உண்டு,ஆனால் கருத்துப் பிழை என்று உரைத்தார்கள்,தமிழ் எவ்வளவு அழமான மொழி என்பது அப்பொழுது தான் விளங்கியது.தமிழின் இனிமை அதன் தென்மையில் மட்டுமா இருக்கிறது?அதன் எழுத்திலும் அல்லவ இருக்கிறது .ஒரு எழுத்து மாற்றம் அடைந்தவுடன் அதன் பொருளும் அல்லவ மாறுகிறது.தமிழ் புலமை என்பது சாதரணமாகவ வரும்? கற்றால் தானே படியும். அந்த தமிழ் மலையை நினைத்து இன்று பெருமிதம் கொள்கின்றேன்.எனக்கு தமிழில் இன்னும் அடைவு நிலை பெறவில்லையே என்ற மிக பெரிய வருத்தம்.தமிழின் சிறப்பை கூறுவதற்கு கூட தகுதி இல்லாத சிறியோன் என்ற இழி நிலை அல்லவா அடைந்து விட்டேன்.

ஒன்றை உங்களிடம் கூற மறந்து விட்டேன்।எனது நினைவு பொக்கிஷ்சம் நான் வரைந்த ஓவியம்.20 வருடங்களுக்கு முன். அசல் எதோ ஒரு மாத இதழில் இருந்து எடுத்து நான் சோம்பி திரிந்த காலத்தில் வரைந்த ஓவியம்.கால ஓட்டதில் கரைந்து போன காவியம்.


அன்புடன்
கி।மனோக்கரன்

September 17, 2009

எனக்கு அகவை 20 இருக்கும்


அப்பொழுது எனக்கு அகவை 20 இருக்கும்.வாலிபம் கொஞ்சம் வயது பருவம்.அரும்பு மீசையுடன் வலம் வந்துக்கொண்டிருக்கும் கம்பத்து சேவல் நான். கோழியில் இருந்து முட்டை வந்ததா இல்லை முட்டையில் இருந்து கோழி வந்ததா என்பது போல் இந்த .வாழ்க்கையும் புரியாத புதிராய் பெரும் கோட்டையை கட்டுவது போன்று என்னை மிரட்டிக்கொண்டிருக்கும்.. உன்மையில் வாழ்க்கை புரிதல் என்பது அந்த காலத்தில் தோட்டப்புரத்தில் கட்டியிருக்கும் வெள்ளை சினிமா திரைப்போன்றதே. படம் ஒடாத வரைக்கும் வெள்ளை திரையில் ஒன்றுமே இல்லாத ஒரு சுவர்ச் சித்திரமாய் பல்லை இளித்துக்கொண்டிருக்கும். நமது வாழ்க்கை பாதையிலும் செடி கொடி மரங்கள் முளைக்காத பச்சை பசலெனும் புள்வெளி தரைதான் அந்த இளமை காலம்.. கவலைகள் என்றால் என்ன என்று கேட்கும் காலம் அது. விடலைப்பரும் என்பது எந்த கவலையும் இல்லாமல் ஒடித்திரிந்த உல்லாச வாழ்க்கையின் இறுதிக்கட்டம் என்பதும் என்னை போன்ற இளசுகளுக்கு எங்கே தெரியும்? கால ஒட்டதில் முட்புதர்களும் பெரும் பெரும் வினை மரங்களும் நமது வாழ்க்கை பாதையில் நமது பயணங்களுக்கு பெரும் தடையாய் அமைகின்றன..
சோம்பித்திரிந்த அந்த காலக்கட்டதிலே எதோ மதமதப்பில் மிதந்து திரிந்தது போன்று உணர்வு.வேலையா வெட்டியா? உண்டு உறங்கி களித்து திரிந்த காலம். படித்து முடித்து ஒரு நல்ல வேலையில் சேர்ந்து இன்பமயமான வாழ்க்கை தேடி மற்றவர்கள் போன்று நாமும் ஓடி ஒடி தேடிக் கொண்ட வாழ்க்கை தான் இப்பொழுது நாம் வாழும் இந்த வாழ்க்கை. கனவுகளில் கழித்து கற்பனையில் திளைத்து கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று இருமார்ப்பாய் வாழ்ந்த நேரம்,

நாற்ச்சந்தியில் அமைந்துள்ள சாலை ஒரத்து நண்பரின் புத்தகக் கடையில் போடும் அரட்டை தனங்களுக்கு குறைவே இல்லை। அது அனைத்து நண்பர்களும் ஒன்று கூடும் ஒரு கேளிக்கை மையம் போன்றது. ஆனந்தத்திற்க்கும் அரட்டைக்கும் இடை இடையே பக்கத்தில் இருக்கும் தமிழர் உணவகத்திலும் பசி ஆத்தலும் உண்டு. என் நண்பர்களில் சிலர். அப்பொழுத்து தான் ஆசிரியர் தொழிலுக்கு அடி எடுத்து வைத்திருந்தனர்.அவர்கள் செய்யும் வெடைப்புக்கு பஞ்சமே இல்லை. என் நண்பர் ஞாண மூர்த்தி என்ற இலச்சுமணன். ஒரு நட மாடும் புகைப்படக் கலைஞர் அந்த காலத்திலே புகைப்படங்களை மிகவும் அருமையாக எடுபார். இப்பொழுதும் அதைதான் செய்துக்கொண்டிருகிறார்.அருமையான மனிதர்.அவர் செய்யும் சேட்டைகளுக்கு அப்பாப்பா சொல்லி மாளாது.தாமசான பேர்வழி, ஆனால் சமுதாய சேவை என்றால் முதல் மனிதராக இருப்பார். முரட்டு தனமும் அங்கு பளிச்சிடும். அவரும் நானும் போட்டிப் போட்டிக்கொண்டு சித்திரங்களை வரைவதில் முனைப்புகாட்டுவோம். வரைந்த சித்திரங்கள் காலா ஓட்டத்தில் மழைத்துளியாய் மறைந்து போயின. ஒரு சிலவற்றை தவிர. எங்களின் சேவை மையங்களாக பாரதி தமிழ்ப் பள்ளியும் பெர்ணம் தோட்டத்து மாரியம்மன் கோவிலின் தேவார வகுப்பும் தான்.

இன்று நினைத்து பார்க்கிறேன்।காலங்கள் எவ்வளவு சீக்கரத்தில் நகர்து விடுகிறது.நத்தையாய் நகர்ந்தாலும்.நமக்கும் ஒரு பிரம்மிப்பு.எதோ நேற்றுதான் நடந்தது போன்று வியப்பு அதே வேளையில் ஒரு சோகமும் இளையோடிக் கிடக்கும். எனோ இளைமையை தொலைத்தது போன்றும் ஒர் உணர்வு, ஒவ்வொரு மனிதனுக்கும் இளமைகாலம் எவ்வளவு எழில் நிறைந்த பொற்காலமாகும். கரைந்து போன காலங்கங்களை எண்ணி எண்ணி ஏக்கம் தான் மிகும். இப்படி இருந்திருக்கலாமே.இல்லை அப்படி இருந்திருக்கலாமே என்று. இன்னும் நன்றாக படிப்பிலே அக்கரை செலுத்தியிருக்கலாமே.அந்த தொழில் கல்வியை கற்று இருந்தால் வாழ்க்கை இன்னும் சிறப்படைந்திருக்குமோ? என்று என் கற்பனை கணக்கு போடும். சிறு வயதில் நமக்கு வாழ்க்கை பாடங்களை யார் தான் சொல்லித்ததறுவது? உன் வழி இதுதான் என்று சொல்லி தருபவர்கள் மிக குறைவு. சொல்லித்தந்தாலும் நாம் ஏற்றுக்கொள்கின்ற மனநிலையிலா நாம் இருக்கின்றோம்? இளைய பருவத்தில் பள்ளிப்பாடங்களை சிரத்தையுடன் பயிலும் நாம் வாழ்க்கை பாடங்களை கற்றுக்கொள்வதில் கோட்டை விட்டு விடுகின்றோம்.பிறகு தும்பையை விட்டு வாலை பிடித்த கதையாகி விடுகிறது.ஏன் தான் சிறு வயதில் நமக்கு அறிவு புலப்பட மாட்டேன் என்கிறதோ? நாம் வாழ்ந்த சுழ்நிலையே அல்லது வளர்ந்த சுழலோ? இல்லை அறிவு முதிர்ச்சி நிலை குறைவோ? வாழ்க்கை அடித்தளம் அல்லது நாம் தொடங்க போகும் வாழ்க்கை நிலையின் தொடக்கமே கண் தெரிய காட்டில் விட்டால் எப்படி இருக்கும்? முதல் கோனல் முற்றும் கோனல் என்பது போன்று பெரும்பான்மை இன்றய இளையோர் வாழ்க்கை திக்கு தெரிய காட்டில் கைவிட்டது போன்று தான் அல்லல்படுகின்றனர். அவர்களுக்கு வல்லமை தருவது யாரோ?

யான் இருந்ததோ சிப்பாங் அம்பாட் ஊத்தான் மெலிந்தாங் என்ற கிராமமும் சிறு பட்டிணமும் இனைந்த சிற்றூர்। அந்த சிற்றுருக்கு பக்கத்திலே அழகிய பெர்ணம் ஆறு ஒய்யாரமாய் ஒடிக்கொண்டிருக்கும் அந்த சிற்றுரை போன்றே அமைதி நிறைந்த வாழ்வு அங்கு உள்ள மக்களுக்கு. காலையில் வேலைக்கு சென்று மத்தியம் வேலை முடிந்து வந்தவுடன் நேரே கோப்பிக்கடையில் அரட்டை அடிப்பது அங்குள்ளவர்களின் பொழுது போக்கு.ஒரு தேனீர் கோப்பையில் ஒரு நாள் பூராவும் மல்யுத்ததை பார்த்து களித்து திரிவது,அவர்களுக்கு ஆனந்தம். வாழ்க்கையை உணர்ந்து உள்ள பூர்வமாக வாழும் அவர்களின் வாழ்வியலின் பாங்கு அழகு மிக்கதோர் இனிய இன்பமான வாழ்வுதான். எதற்க்கும் கவலை படாத அவர்களின் வாழ்க்கையை பார்த்தால் நமக்கே போறாமை தான் மிஞ்சும். நல்லது கெட்டது இன்பத் துன்பங்களில் பங்கெடுத்து ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து ஒரு அமைதியான வாழ்க்கை வாழ்கின்றனர்.அது தான் கம்பத்து வாழ்கையோ,ஆனால் கோலாலம்பூர் போன்ற பெரிய பரப்பரபான மக்கள் தொகைக் கொண்ட மாநகரத்தில் உறங்குவதும் தெரியவில்லை விழிப்பதும் தெரியவில்லை.ஒரு நண்பரை பார்பதற்க்கு கூட நேரத்தையும் காலத்தையும் ஒதுக்கித்தான் வரவேண்டியிருக்கிறது. ஒரு இறப்புக்கு கூட நேரத்தையும் காலத்தையும் பார்த்துதான் போகவேண்டி யிருக்கிறது,அப்படி இயந்திர கதியில் சிக்கிக்கொண்டதோ நமது மனித வாழ்க்கை? வாழ்க்கை மட்டுமா? மனமும் கூடதானே?.

அன்புடன் கி।மனோக்கரன்September 15, 2009

ஆசை சீர் அமைத்தல் சில உட்கருத்துக்கள் அதன் வழிமுறைகளும்
ஆசை சீர் அமைத்தல் சில உட்கருத்துக்கள் அதன் வழிமுறைகளும்வெளியூர் இரயில் பயணம்। உங்கள் மனைவி உங்களுக்கு காச்சிய பாலை ஒரு போத்தலில் விட்டு உங்களிடம் கொடுத்து, போகும் வழியில் அருந்துமாறு சொல்கிறார். நீங்களும் சரி என்று எடுத்து செல்கிறீகள். வழியில் உங்களுக்கு பசியில்லை, வயிறு நிறைந்துவிட்டது. உங்களால் இனி பாலை குடிக்க முடியாது என்ற நிலை. நாளைக்கு குடிக்கலாம் என்றால் பால் கெட்டுவிடும். கெட்டுவிட்ட பிறகு மற்றவர்களுக்கு கொடுக்கலாம் என்றால் ஆசை கடும் பற்றாக மாறும்.அதாவது பேராசையாக மாறும். இன்று என்னால் குடிக்க முடியவிலை. நாளை வைத்திருந்தால் பால் கெட்டுவிடும் அதனால் இன்று வேறு ஒருவருக்கு கொடுப்பது நிறைமனம்மாகும். நீங்கள் பால் அருந்த நினைப்பது ஆசை.அது முடியாமல் போக நீங்களே வைத்துக்கொள்ள நினைப்பது பேராசை,உங்களால் அருந்த முடியாமல் உங்ளுக்கு போதும் மற்றவர்களுக்கு கொடுக்க நினைப்பது சீர் செய்யப்பட்ட உங்கள் நிறைமனம். நம் மன எண்ணங்களை,மன ஆசைகளை சீர்த்தூக்கி சரியான வழித் தடங்கள்களில் வைத்தோம் என்றால் ஆசைகளை நாம் சீர் செய்திருக்கின்றோம் என்று தான் பொருள்.எந்த இடதில் மனம் விரிகிரதோ அங்கு ஆராய்ச்சி வயமாகும்.அந்த மனதை விரிவிலேயே வைத்துக் கொண்டு இருக்கும்போது ஆசை பேராசையாக மாறாது. சினம் வராது. ஏனென்றால்,மனவிரிவில் எல்லாம் விளங்கிக் கொள்கிறது.ஆசையை முறைப்படுத வேண்டும், அப்படி ஆசை முறைப்படுத்திவிட்டால் அந்த ஆசை நிறைமனம் என்பதாக மாறும். ஆசை முறை கெட்டுப் போனால் பேராசை, முறைப்டுத்தப்பட்டால் நிறைமனம்.
சினம் எப்போது உண்டாகிறது என்றால் ஆசைக்கு தடை உண்டாகும்போது। இன்பம் என்ற கற்பனைக்குத் தடை உண்டாகும்போது,தான் அனுபவித்துக் கொண்டுடே இருக்கக்கூடிய இன்பதில்ருந்து தன்னை யாராவது தடுக்கும்போது, அதுதான் தடையாக இருக்கிறது என்று எண்ணும் போது,அந்த தடையை நீக்க முயலும் போது, அந்த முயற்சில் வேகத்தில் வரக்கூடிய உணர்ச்சிவயமான மனநிலைதான் சினம்.குணங்களை ஆறு குணங்களாக பிரித்து இருக்கிறார்கள்.ஆறுவகை குணங்கள் எல்லாம் தீமை தரத்தக்க உணர்ச்சி வயப்பட்ட அறிவின் மாற்றம்.
தீமை தரத்தக்க உணர்ச்சி வயப்பட்ட அறிவின் மாற்றம்.
1
பேராசை
2
சினம்
3
கடும்பற்று
4
முறையற்ற பால்க்கவர்ச்சி
5
உயர்வு தாழ்வு
6
வஞ்சம்

சீர்செய்யப்பட்ட அறிவின் செயல் நிலை
1
பேராசை
மாற்றம்
நிறைமனம் உணர்வாக மாறும்
2
சினம்
மாற்றம்
பொறுமை என்ற உணர்வாக மாறும்
3
கடும்பற்று
மாற்றம்
ஈகை உணர்வாக மாறும்
4
முறையற்ற பால்க்கவர்ச்சி
மாற்றம்
கற்பு நெறியாக மாறும்
5
உயர்வு தாழ்வு
மாற்றம்
நேர்நிறை உணர்வாக மாறும்
6
வஞ்சம்
மாற்றம்
வாழ்த்துக்காளாக மாறும்

ஆசை முறை பிறழ்ந்தபோது எடுக்ககூடிய பல வடிவங்கள் தான் ஆறு குணங்களும்.ஆறு குணங்களையும் ஒவ்வொன்றாக பிடித்து.அது குறைய வேண்டும், இது குறைய வேண்டும் என்று நாம் அவஸ்தைபடுவதைவிட,ஆசையை இன்னது என்று அறிந்து,அங்கேயே அதை ஒழுங்குபடுத்திவிட்டால் மற்ற குணங்கள் வராது.
எண்ணங்களின் பிறப்பிடம் தான் ஆசை,மனதை புத்தியை அல்லது அறிவை ஒருமை நிலை படுத்தி விரிந்த எண்ணங்களை மனதால் புத்தியால் அறிவால் ஆய்வு செய்து, நமது ஆசையை சீர் செய்தால் மனக்கவலை பறந்தோடும்.
நான் சில சமயங்களில் சிந்திப்பதுண்டு ஏன் நமது சமுதாயம் தரம் இழந்து கைக்கட்டி வாய் போத்தி வாழ்ந்துக்கொண்டிருக்கிறது என்று। நமக்குள் அடித்துக் கொள்வதும். நம்மை நாமே இகழ்வது எங்கிருந்து வந்தது இந்த பண்பு? பரப்பரை பரப்பரையாக பாவப் பதிவுகளை எத்தனையோ தலைமுறைகள் தொடந்து வந்துக்கொண்டுதான் இருக்கிறது. DNA என்று சொல்லக்கூடிய அனுக்களின் பதிவுகளை அழிப்பது எண்ண சீர் அமைபுதான்,அல்லது ஆசையை சீர் செய்தல். தனி மனித பண்புகள் தான் ஒரு சமுதாய பண்புகளாக மிளிரும். ஒரு தனி மனித மனவளத்தை இன்னும் மெருகு ஏற்றினால் இந்த சமுதாயம் இன்னும் வளம் பெரும். காலம் காலமாக நமது சமயத்தில்,சமுகத்தில் சொல்லாதா நல்ல பண்புகளா? இருந்தும் என்ன பயன்? மனதை ஆய்வு செய்து மனத்துயரங்களை, துன்பங்களை அகற்ற வழி தந்தார்களா? உயர்ந்த பண்புகளும் அதன் பலன்களும் ஒரு சில குழுக்களுடன் அல்லது குலத்துடன் குரு குல கல்வி போன்று இதுகாறும் இருந்து வந்துள்ளது. அல்லது ஞானிகள் சித்தர்கள் சிந்தனை அடிதட்டு மக்களை சென்று அவர்களை மீளா துயரிலிருந்து மீட்டேடுத்தாத?இல்லையே! இதுதான் வாழ்க்கை, அதுவும் விஞ்ஞாண பூர்வாமாக ஆய்ந்து அறிந்து மூடத்தனத்தை மறுத்து முற்ப்போக்கு சிந்தனையை செலுத்தி அறிவுப்பூர்வாமாக அதே சமயம் ஆன்மீக கருத்தோடும் வாழ்வது எவ்வளவு உயர்ந்த தன்மானமான வாழ்வு தானே.ஆன்மீகம் என்பது மனமும் அறிவு சம்மந்த பட்டது।அதை மதம் என்ற போர்வைக்குள் போட்டு நம்மையும் நமது வாழ்வையும் இருட்டடிப்பு செய்து விடுகின்றனர் சிலர். மதத்தில் நல்ல உயர்ந்த கருத்துக்கள் மறைப்பொருளாய் வைத்துவிட்டு சென்றதனால் அதை பணம் பன்னும் வியாபார மடம்மாகிவிட்டது. மூடத்தனங்கள் முட்டாள் தனங்களை கேள்வி எழுப்பும் போது நாம் நாஸ்திகனாய் ஆகிவிடுகின்றோம்.எங்கள் குரு வேதாத்திரி மகாரிசி அழகாக வாழ்க்கை பாதையை வகுத்து தந்துள்ளார். வாழ்க்கைக்கான வழிமுறை பயிற்சிகள் அழகான பாடத்திட்டத்தில் தொகுத்து தந்துள்ளார்.
அருளருவி என்ற புத்தக தொகுப்பை நீங்களும் படித்து பாருங்கள்
அருளருவின் பொருளடக்கத்தின் சில தலைப்புக்கள்1.தற்காலத்திற்கேற்ற யோக முறை
2.குண்டலினி யோகமும்
3.வாழ்க்கை தத்துவம்
4.எண்ணம் ஆராய்தல்
5.ஆசை சீர்மைப்பு
6.சினம் தவிர்தல்
7.கவலை ஒழித்தல்இனிமையான வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை பயிற்சிகள்
1.எளிய குண்டலின் யோகம் (தீச்சை)
2.காயகல்பம் ( வித்து சக்தி என்னும் உயிர்ச்சக்தியை மேல் எழுப்பி உடலை காத்தல்)
3.தியானம் தவம் யோகம் ( சில ஆற்றலை பெரும் முறை)
4.எளிய முறை யோகம் பயிற்சிகள் (எளிய முறை உடல் பயிற்சிகள்)
5।அகத்தாய்வு பயிற்சிகள் (மனதை ஆராய்தல்)ஒரு தனி மனிதனின் ஒழுக்கத்திற்க்கும் சமுதாய மேன்பாட்டிற்கும் வாழ்க்கை கல்வி முறை எவ்ளவு அவசியம்। நமக்கு பிள்ளைகளை அறிவிற் சான்றோன்னாகவும் அகத்தை அறிந்த ஒழுக்க சீலனாகவும் வாழவும் வளரவும் வேதாத்திரி மகாரிசி கற்று தந்த பாடத்தை நாமும் அதனுடன் ஒன்றி நிற்ப்போம்.அண்னாரின் ஆன்மீக வழி தமிழ் சமுகத்தை துனப கடலில்யிருந்து மீட்டெடுக்கும்.வாருங்கள் நண்பர்களே, அகத்தை ஆய்வு செய்வோம்.
கருத்துக்கள் சில அருளருவியில் இருந்துஆக்கம் மனோகரன்


தாய் அன்பின் தாலாட்டும் அடிச்சுவடு


அன்னையே நீ
எரியும் நெருப்பானாய்
உருகும் மெழுகானாய்

அன்னையே
உன் கருவரையை
எனக்கு மறைவரையாய்
தந்தாய் - இலவசமாய்
நான் உயிர்தெழும் வரைக்கும்
.
உதிரத்தை பாலக்கி
உயிர்ச்சக்தியாய் தந்தாய்
தாய் அன்பை தானமாய் தந்தாய்
தளராத உன் பாசத்திற்கு தரத்தான் முடியுமா ஈடு?

அன்பு மழையில் நான் திளைத்தேன்
அன்னையே பாச மழையில் நீ நனைந்தாய்
முல்லைக்கு தேர்த்தந்தான் பாரி அன்று
இந்த பிள்ளைக்கு குடைத் தந்தாய் இன்று
ஆக்கம். மனோகரன் .

September 13, 2009

ஆசையை சீரமைதல்


ஆசையை துறப்பது அன்று அறிவு ஆசையை சீர் அமைப்பது அறிவு.

ஆசையை துறந்தவன் யார்? ஆன்மாவை அளந்தவன் யார்।? போதிமரத்து புத்தன் கூட போதித்தான் ‘ஆசையை துற” என்றும்।ஆசைதான் அனைத்து துன்பத்திற்க்கும் காரணம் என்றான்.ஆசை என்பது மனிதனின் உள்ளக்கடலிலே எழும் பேராலை, அதை அனைப்போட்டு தடுத்தாலும் ஆழிப்பேராலையாயை எழும் இன்னும் இன்னும் உயர்த்தில் எழும் பேராசைகள். மனிதனின் ஆவா அப்படி. குளத்திலே கல்லை விட்டேரிந்தால் நீர்ராலைகள் மேல் எழும்புவதை போன்று எண்ணக்குளத்திலே எழும் ஆசைகள் பேராசைகளாக உறுமாறுவதைக் காண்பீர்கள்.


சரி புத்தனின் கதைக்கே வருவோம்। ஆசையை துற என்று பகர்ந்த புத்தனிடமும் எழுந்தது பேராசை। அளவிட முடியாத பேராசை என்ன என்று கேட்க்கிறிர்களா? ஆம் அந்த உத்தம மகா புருசனின் உன்னத வேட்க்கை பசி பிணி பட்டினி சாவு கோவம் குரோதம் சண்டை சச்சரவு அற்ற உத்தம மானிடர் இந்த குவளயத்தில் உலா வர வேண்டும் என்ற பேராசை. என்ன நடக்கிற காரியமா? அன்பை போதித்தான்! அகிம்சையை போதித்தான்! நல்ல பண்பை போதித்தான. வையம் வாழ உத்தமர் நலம் பெற உலகம் பூராவும் சென்றது அவன் போதனை, போதித்தான் போதித்தான் உலகம் எங்கும் சென்றது அவன் போதனை.ஆனால் மனிதன் மாறித்தான் இருக்கின்றானா?. போர் அற்ற உலகத்தை கண்டானா?, சொல்லேனாத துயரத்தை கானும் உலக மக்களின் துன்பம் தான் தொலைந்ததா? வாழ்வில் இருள் விலகி ஒளித்தரும் உலகம் பிறந்ததா?


மனிதன்! ஆசைகளை திரிஷ்ட்டிக்கும் பிரம்மன் ஆயிற்றே? புதுப்புது ஆசைகள் பேராசைகளாக புதிப்பிதுக்கொண்டு செல்கின்றான.பிரம்மனும் தோற்றான் இந்த மகா மனிதனிடம்.


ஆசை கடும் பற்றாக மறும் போது மனிதன் துன்ப சுழலிலே சிக்குகின்றான்,ஆசை அறிவின் எழிச்சி।அந்த எழுச்சியை ஒழுங்கு படுத்த வேண்டும்.எப்படி ஒழுங்கு படுத்துவது? தத்துவ மேதை அருட்த்தந்தை மகாரிசி வேதாத்திரி சொல்கிறார் நீர்நிலைகளில் வெள்ளம் வந்தால் ஏரியில் விட்டும் ஏரி நிறைந்தால் அனைகளில் நிரப்பி அனைகள் நிறைந்தால் ஆற்றிலே விட்டும் முடிவில் கடலிலே கலக்கும் அந்த நீர் அமைதி பெறுவதை போல் ஆசையை தவிர்தல் என்பதை விட ஆசையை சீர் அமைக்கும் வழி மிக முக்கியம்.


உள்ளத்தில் களங்கம.வாழ்க்கை முறையில் எற்படும் தேவை இல்லா பழக்க வழக்கங்கள்।எண்னத்தில் தெளிவின்மை வைத்துக்கொண்டு துன்பம்மில்லா வாழ்வை வாழமுடியுமா? மனத்துயரம் என்பது நம்முடைய இருப்பில் திருப்தியின்மையின் அவலம்தான். ஆசைநிறைந்த மனம் தப்பே இல்லை। ஆசை மனதை நெறிப்படுத்தி முறைப்படுத்த கற்றுக்கொண்டால் மனம் ஒன்றி பேராசை அற்ற நியாமான ஆசைகளாய் துன்பம் அற்ற இனப மயமான வாழ்வாக அமையும்।


கடும் பற்று என்னும் ஆசையை நாம் நியாமான ஆசையாக மற்ற சொல்கிறார் இல்லற ஞானி வேதாத்திரி மகாரிசி.ஆசையை தவிர்த்தல் என்பதவிட ஆசையை சீர் அமைத்தல் என்பது எவ்வளவு பொருள் நிறைந்த தாக்கம். தமிழ் மறை தரும் தமிழர் வாழ்வியல் நெறியை பாருங்கள்.

“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல் நீரபிற”


ஆக்கம் மனோவியம் மனோகரன்

September 11, 2009

ஏற்றிடும் இன்ப ஆராதனை


விழிகளின் ஓரம்
விரல்களின் ஷ்பரிசம்
இதழ்களிம் ஒரம்
இமைகளில் தாபம்

கனிந்திடும் அதரசம்
யென்று நினத் தேன்
காதல் மொழித்
தந்து அனைத் தேன்
என் விழி நிலவு
என்று நினத் தேன்
என் விரச
தாபங்களில்
விழ்ந் தேன்

சுவை தரும் அமுத பானம்
சுவைத்திடும் இன்ப தேனாம்
இசைந்திடும் ஆனந்த கானம்
இளமையின் இன்ப வானம்

சித்தம் கலங்கினும்

சிந்தை மகிழினும்
சீர் சித்திரமாய்
சிரித்திடினும்
முத்த மழை கொடுத்தலும்
முகத்திரை அகலாது
முத்திரை பதித்து
முழு மதியாய் நின்று - என்னை

அத்தான் என்று அழைப்பதிலே
ஆனந்தம் கோடிக் கோடி
ஆசை தீர அனைப்பதிலே
ஆயுள் அதை விட கோடிக் கோடி


தொட்டுவிட இடை
துவண்டு விடும்
துள்ளல் நடையும்
மின்னல் கொடியும்
தளர்ந்து விடும்
அள்ளி அனைத்திட
ஆனந்தம்
தொடர் கதையாய்
தொடர்ந்து விடும்

எண்ணி எண்ணி
சிந்திடும் புன்னகை
ஏக்கத்தில் கண்னம்
சிவந்திடும் தாரகை
எழில் கொஞ்சும் மேனகை - அவள்
எனக்கோர் ஏந்திழை

பள்ளியறை பாடங்கள்
பளிங்கு திரழ் தேகம்
சொல்லி வைத்த ஆலாபங்கள்
சொக்கிடும் மன தாளங்கள்

ஏற்றிடும் இன்ப ஆராதனை
ஆற்றிடும் ஆனந்தத்தின்
வைபோகம்
பச்சைக்கிளி இச்சைக்கிளியானால் -
என்னவள்
இல்லற விருந்தானால்
நல்லறம் தாங்கிடும் மருந்தானால்
சங்க தமிழ் கூறும்
அகத்துப் பொருள்லானால்।

அன்புடன்
மனோகரன்

September 10, 2009

கணவன் மனைவி அகராதி -சிரிக்கவும் சிந்திக்கவும்
எத்தனையோ அகராதியை பார்த்திருப்பிர்கள்। புதுப்புது அகராதி நிறைய பயன் பாட்டிற்க்கு வந்திருக்கு। புதிய கலைச்சொற்கள் நம்ப தூய தமிழ் மொழியின் வளப்பத்திற்க்கு உறுதுனையாக இருக்கும்।எத்தனையே துறைகளுக்கு இன்னு புதிய கலைச்சொற்கள் கண்டுபிடிக்க படவில்லை।அதிலே ஒன்று குடும்ப நலத்துறை। இதில் என்ன ஆச்சிரியம் என்றால் குடுப்ப நலத்துறை அமைச்சர் நேரிடையாக என்னிடம் வந்து நம்ப தமிழ் மக்கள் குடும்ப நல அர்த்தங்கள் தெரியாமல் ரொம்பவே சிரமப்படுகிறார்கள் என்பதனால் குண்டுச்சட்டிகுள் குதிரை ஒட்டி முதல் பரிசு பெற்ற உங்களால் தான் முடியும் என்று மான்றாடி கேட்டுக் கொண்டு இந்த மகத்தான பனியை உங்களிடம் ஒப்படைக்கின்றேன் என்றார்கள்।நானும் மகா கனம் பொருந்தியவர்கள் என்ற காரணத்தினால்। ( உடைந்துவிட்டது அவர்கள் உட்க்கார்ந்த நாற்க்காலி...அதை வேறு மாற்றவேண்டுமே।எங்கே மறுபடியும் வந்து அமர்ந்து விடுவர்கள் என்ற பயத்தின் காரணத்தினால் ஒத்துக்கொண்டேன்).
இதோ என்னால் முடிந்த அளவுக்கு மூளையை கசக்கி கசக்கி என் சின்ன புத்திக்கு ஏற்ற அளவுக்கு முயன்று எழுதியுள்ளேன்।எவ்வளவே செஞ்ச நம்ம இது கூடவ செய்ய மாட்டோமா என்ன?.(என்னை சந்தித்த அமைச்சரின் பெயர் கடைச்சி வரைக்கும் மறந்தே போய் விட்டது) அதற்காக பொய்யினு மட்டும் சொல்லிடதீங்கோ...அதை கேட்ட அவங்க மனசு தாங்கது. எற்கனவே நாற்காலி ஒடஞ்சு போச்சு,இப்ப அவங்கள தாங்ற காலு ஒடஞ்சுட போது!

மகா மகா கனம் பொருந்திய வலைப்பதிவாளர்களே! உங்களூக்கு ஒரு ரகசியம் சொல்வேன்।புது புது வார்தைக்கு அர்த்தம் தெரியாமல் குழப்பி போனதனால் சில வார்த்தைகள் தமிழா? இல்லை ஆங்கிலமா? என்று தெரியாதனால் தமிழ்லிங்கிலிஷ்ஸீலே சொல்லி இருகிறேன் அதற்க்கு வேண்டுமானல் நீங்கள் தனியாக ஒரு அகராதியை வாங்கி வைத்து கொள்ளுங்கள்। இல்லை என்றால் சன் டிவியை நாள் பூரவும் வலம் வாருங்கள்।மற்றபடி இலவசமாக என் க.ம அகராதியை வானத்தில் இருத்து தரை இறக்கம் செய்துக்கொள்ளுங்களேன்। எங்கள் வ.ச.சங்கதிற்கு மட்டும் உங்களால் முடிந்ததை போடுங்கள்

மீண்டும் மீண்டும் சந்திப்போம் அடுத்த அடுத்த குறிப்புடன்

பின் குறிப்பு: க ம =காமக் குறிப்பு அல்ல (கணவன் மனைவி அகராதி)
வ.ச =வாலிபர் சங்கம் அல்ல (வலைப்பதிவாளர் சங்கம்)


இதோ கணவன் மனைவி அகராதி

நான் பார்க்கும் பார்வையின் அர்த்தம் வேறு
நீ பார்க்கும் பார்வையின் விளக்கமே வேறு

நான் பார்த்தால் பூஜியம்
நீ பார்த்தால் கேள்விகள் ஆயிரம்

நான் பார்ப்பதோ சாதாரனம்
நீ பார்ப்பதோ மின்சாரம்

நான் பெக்க்ஷ் மிஷ்ண்- நிறைகளை காட்டுவேன்
நீயே ஷ்கேனர் மிஷ்சன் -- குறைகளை கண்டுபிடிக்கும் இயந்திரம்

நான் சாதாரன பிரிண்டார்- கனவுகள் கருப்பு வெள்ளை
நீயே கலர் பிரிண்டார் - கனவுகள் வர்ன கலவைகள்

நான் வாழ்க்கையை துவைக்கும் வாஷீங் மிஷ்சின்
நீயோ பிள்ளையை சுமக்கும் மிஷ்சின்

நானே ஒரு டியுப் லைட் - சாதாரனம்
நீயே ஒரு குடுப்ப குத்துவிளக்கு - தெய்விக உதாரணம்

நான் உனக்கு சிறு புள்ளி
நீ எனக்கு வள்ளி தெய்வானையை கண்டால் மட்டும் வில்லி.
அன்புடன்
மனோகரன்

September 9, 2009

செம்ப்புலத்துத் குருதி செங்க்கொடையாய் தந்துவிட்டீரோ
எங்கினும் காணா கொடுமையாடா
எங்கு நோக்கினும் பிணங்களாடா
இனம் தின்னும் கழுகுகள் - கொடும்
ஈனப்பிறவி எடுத்தானவோ? அன்றே பேய்கலோ?

ஏன் இந்த அவலம் விளங்க வில்லை
ஏன் இந்த கயமை புரிய வில்லை
விடியல் இங்கு இல்லை - எமக்கோர்
விழிகளின் கண்ணிரும் மிஞ்ச வில்லை.

என் தமிழ் ஈழமே ! என்ன செய்வேன் !
அந்தோ! பதைப் பதைக்கும் நெஞ்சம்
உனக்கோ இந்தக் கதி, உயிர் பலிக் கேட்டு
உலவும் அரக்கர் கூட்டம் உவகைக் கொள்வோர்

சென்நாய் போன்று தெருவில் சுகம் கானும் துரோகிகள் கூட்டம்
வகைதொகைத் தெரிய செத்தொழிந்த எம் மக்கள் கூட்டம்
மானம் காத்து மய்ந்தொர் எம் மறவர் கூட்டம்
செம்ப்புலத்துத் குருதி செங்க்கொடையாய் தந்துவிட்டீரோ எம் இளைஞர் கூட்டம்

ஏடு எடுத்து கவிதை வரைத்திட, எம் உள்ளம் விம்மிட
எம் மக்கள் வீடு யிழந்து நாடு யிழந்து காடு யிழந்து
வீழ்ந்து போனிரோ! இல்லை யுகம் யுகமாய் எழுந்து வருவீரோ!
வீறு கொள்ளும் தமிழ் ஈழம் எங்கள் மூச்சு என்று முழக்கமிடுவீரோ!

நாட்த் தோரும் தமிழன் இங்கு சாகிறான் - பதைப்பதைக்கும்
நல்லோர் கூட்டம் - இன் நானிலத்தில் எங்கோனும் கானோம்
வல்லோர் உயர்ந்தும் நல்லோர் தாழ்ந்தும் இருப்பது தான்
இறைவன் வகுத்த விதியோ? இல்லை ஈனர்கள் தொகுத்த சதியோ

September 8, 2009

ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள்

பெண்
நான் பார்த்தால் சாதாரணம்
நீ பார்த்தால் மட்டும் மின்சாரம்

மழைநான் அழுதால் கண்ணிர்
மேகமே நீ அழுதால் மழை

வயிறு
பற்றி எரியும் விறகு
புகை வரா அடுப்பு

பட்டிணம்
நகர் எங்கும்
காங்கீரட் காடுகள்
இடை இடையில்
மரத்துக்கு பதில்
மனிதர்கள்

வெண்சுருட்டு
இழுத்து விடும் மூச்சு
எறித்து விடும் உன் இதயம்.பிணம்
காசுக்கு
அலைந்தவன்
நெற்றியில் காசு

ஆகாசம்
பூமியின் ஆயுத கிடங்கு
அன்புடன் மனோகரன்

பெற்ற தவம் ஏனோ?


வெட்ட வெளி அங்கு இருக்க
தண்டு வடச்சுத்தி எழுந்திருக்க
தொட்ட இடம் சுடர் ஒளியாய்
சுத்தவெளியில் கலந்திருக்க
பெற்ற தவம் ஏனோ
பெரும் வெளியில் கலந்திரோ?
வாழ்க வளமுடன்
மனோகரன்

September 7, 2009

மலர்ந்த முகம்


மலர்ந்த முகம்

மலர்ந்த முகமே வாழ்க்கையின் இன்பம் என்ற முதுமொழி தமிழில் உண்டு।மிகவும் எழிற் நிறைந்த தத்துவ நோக்கம் தன்னுள் அடக்கி கொண்டிருக்கிறது. மலர்ந்த முகத்தை உண்ர்ந்துக் கொள்வது என்பது வாழ்க்கையின் ரகசியத்தை அறிந்து கொள்வதற்க்கு சமம்.

மனித வாழ்க்கையில் முள் நிறைந்த பாதைகள் தான் அதிகம்।பஞ்சு மெத்தையில் அனுபவித்த சுகத்தை விட பாழும் முட்ச்செடியில் விழ்ந்து துன்பத்தில் துய்ந்த வலிதான் அதிகம். துன்பம் வரும் வேளையிலே சிரிங்க என்று சொன்னார் வள்ளுவர். துன்பமே வாழ்க்கையாய் ஆகும் போது சிரிப்பதற்க்கு முகம் மலர்வதற்க்கும் எங்கணம் இயலும்?

இரட்டை தண்டவாள பாதையை போன்று, இந்த வாழ்க்கைச் சாரம்। மனைநலம் அல்லது துனைநலம் அன்றி பெரும் பார சுமைகளை கடக்க முடியாது. இருமணமும் ஒருங்கினைந்து செல்லும் பொழுது வாழ்க்கை என்னும் இரயில் வண்டி சுமுகமாகவும் சுலபமாகவும் இயங்கும். இருவர் மனம் இயல்பாக இருக்கும் போது வாழ்க்கை சக்கரமும் நன்றாகவே ஓடும்.அப்பொழுது இல்லறம் மலர்ச்சி கானும். ஆயிரம் பிரச்சனைகள் இருக்கட்டுமே அதை அன்பான முறையில் பேசி திர்த்து கொள்ளாமே.இருமன ஒன்றினைந்த்திருந்தால் மலையாலவு பிரச்சனைகளும் சிறு புள்ளிகள் போன்று ஆகும். மனம் இருத்தால் மார்க்கம் உண்டுடல்லவா? மலர்ந்த முகமே வாழ்க்கையின் சிறந்த மூதலீடு.

தனிமை வாழ்வின் காரணமாக ஆதரவு அற்ற நிலையில் கண்கான கடலிலே தனிமை சிறையில் சிக்கி சீர்ரழிந்து சின்ன பின்னபின்மாகி எத்தனையே பேர் உற்சாகம்மின்றி திகைத்து திண்டாடியாவாறு நடைப்பினமாய் வாழ்ந்து மறைகின்றனர்।அவர்களின் வாழ்வில் மலர்ச்சி இல்லை.மலர்ந்த முகத்தை உணர்ந்துக்கொள்ளும் திறனும் இல்லை.

வீடு நேக்கி வரும் கணவனை மலர்ந்த முகத்தோடு வரவேற்க்கும் அன்பு மனையாளின் முக கவர்ச்சிக்கு கோடி இன்பத்துக்கு சமம் அல்லவா? இல்லற வாழ்வின் ஜீவாதார வாழ்கையேடு ஒட்டிய தேவைகள் எவ்வளவோ இருப்பினும் முகமலர்ச்சி மிக அவசியம்।

அழகான வேலைப்பாடுகளால் செய்யப்பட்ட எத்தனையே விலை உயர்ந்த கலைப் பொருட்களை விட எளிமையும் அழகும் பெற்று விளங்கும் முக மலர்ச்சி, ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி எவ்வளவு முக்கியம்? புன்னகை தானே இயற்க்கை தந்த நகை. இறைவன் தந்த கொடை.

September 4, 2009

காற்றுக்கூட தமிழ் படையாய் வரும்


கனவுகள் காற்றாய் மிதக்கட்டும்
நினைவுகள் நிலாவாய் தெரியட்டும்
உணர்வுகள் மட்டும் ஓங்கி நிற்கட்டும்
உலகமே உந்தன் காலடியில் - ஒரு நாள்
உழர்ந்து திரியட்டும்

தமிழா! உன்னை அறிந்து கொள்
உலகம் உன்னை தெரிந்து கொள்ளும்.

பிறக்கும் போது புலியாய் பிறந்தவன் நீ
பிறருக்கு மட்டும் ஏன் எலியாய் தெரிகிறாய்?
இருக்கும் வரை இறைதேடும் பறவையாய் திரிகிறாய்
இறந்த பிறகும் ஈன பிறவியாய் அலைகிறாய்

வேங்கை என்றும் துயில் கொள்வதில்லை
வீறு கொண்ட யானைகள் என்றும் வீழ்வதும் இல்லை
சிறகுகள் முளைத்த சிங்கமாய்
சிலிர்லெழு தமிழா - நற்ச்சிந்தனையை வார்த்தெடு

ஒற்றுமையை ஓங்க செய்
உலகம் உன்னை தாங்கும்
உனக்குள் இருக்கும் இருளை போக்கு
உலகம் உன்னை போற்றும்

வீரத்தின் விளை நிலம் நீயடா
வீவேகத்தை தொலைத்தானால்
வீழ்ந்து கிடக்கிராய்
தேக பலம் மட்டும் போதுமா?
தேங்கிடக்கும் தண்ணிரை போல்
ஏன் இன்னும் ஏங்கிக்கிடக்கிறாய்?

காலம் வரும் நம் கடும்தவம் புரியும்
காற்றுக்கூட தமிழ் படையாய் வரும்
வெற்றிக்கொடி எட்டுத் திக்கிலும் பரவும்
ஈனர்கள் கொட்டம் அடங்கும்
எங்கும் தமிழ் கொடி பறக்கும்

தமிழா! உன்னை அறிந்து கொள்
உலகம் உன்னை தெரிந்து கொள்ளும்
விடுதலை வேட்கையாய் எற்றுக்கொள்
விடியல் உன்னை தேடி வரும்

September 3, 2009

வேதாத்திரி மகரிசியின் தெய்வீக வார்த்தைகள்

வேதாத்திரி மகரிசியின் தெய்வீக வார்த்தைகள்


உணவில் எளிமை, உழைப்பில் கடுமை
ஒழுக்கத்தில் உயர்வு, உத்தமர் இயல்பு
உடையில் ஒழுக்கம், ,உள்ளத்தில் கருணை
நடையில் கண்ணியம், நல்லோர் பண்பு.

இன்பமாக வாழ முழுமைப் பேறுபெற
தவம் அறம்,அளவுமுறை,அயராவிழிப்பு.தேவை

உண்மையில் எதிரி உனக்கு உண்டு எணில்
உள்ளத்தில்லெழும் ஒழுங்கற்ற எண்ணமே.
* வேதாத்திரி மகரிசி


எண்ணம் என்ற நிலத்திலே
எண்ணத்தால் அகத்தாய்வாய் ஏரைப்பூட்டி
எண்ணத்தை ஆய்ந்து ஆழ்ந்து உழுது
எண்ணத்திலே தெளிவு என்ற நீர் பாய்ச்சி
எண்ணத்திலே நன்மை என்ற வித்திட்டு
எண்ணத்திலே அறம் என்ற பயிர் வளர
எண்ணத்திலே வினைகள் என்ற களை நீக்கி
எண்ணத்திலே இறையுணர்வு என்ற உரமிட்டு
எண்ணத்திலே தவத்தினால் செழித்தோங்கி
எண்ணத்திலே “ வேதான் யோகான்” என்ற நிலை உணர்ந்து
எண்ணத்திலே அன்பு கருணை பூண்டு தொண்டாற்றி
எற்றம் பெற்று அடையும் இன்பம் வீடாகும்
ஆக்கம் அ/நி.காழிபாலன்