August 27, 2009

நீர்குமிழ் போல் வாழ்க்கை


இரவுகளின் வரவு
இன்றயை நாட்களின்
முடிவுகள்..............
வாழ்க்கையின் கனவுகள்
வருங்காலத்தின் நிஜங்கள்

வசந்தங்களின் வரவு
வாழும் உலகில்
மாற்றத்தின் கதவுகள்........
மாறாத மனங்கள்
வீழ்ச்சியின் விழும்
விட்டில் பூச்சிகள்........

ஆசை கரங்கள்
அனைத்திடும்
அன்பு மலர்கள்.........
அரவணைக்கும்
ஆன்மாவின்
அன்பு குணங்கள்

இதயம் என்பது
உயிர்த்துடிப்பு
இயங்க மறுக்குமா
மனத்துடிப்பு?

நிலையில்லா
மனித நிலை
நீர் அலையில்
எழும்பும்
நீர்குமிழ் போல்
வாழ்க்கை

சுடரும்
சூரிய கரங்கள் பட்டு
மாயாஜால வர்ணங்களின்
பிறப்பெடுத்து
கனப்பொழுது
மின்னி மறையும்
வாழ்க்கை குமிழ்

இதற்க்குள் ஏன் இத்தனை இருமார்ப்பு?
இதற்க்கு தான இத்தனை பரபரப்பு?

August 23, 2009

மனைவி நல வேட்பு நாள்
உள்ளத்தின் ஒளிக்கீற்று


நீண்ட நெடும் பயணம்
எந்தன் தேகதின் வலுக்கூட
குன்றி விட்டது......
அன்பின் நிலையே இன்னும்
பன் மடங்கு மேலே மேலே
உயர்ந்து உயர்ந்து
விண்ணை தொட்டு விட்டது

கால ஓட்டதில்
கரைந்து போன கரைகள்
அதன் வடுகள் மட்டும்
இன்னும்
மறையாமல் போன மர்மம்
என்ன?

கோடுகள் கூட
கட்டம் போட்ட
வாழ்கையாயை
என்னை சிறை வைத்தன
நீர்த்து போன
எனது சில்லைரை தனங்கள்
சிறு கிறுக்கல்கலாயை
சிரிக்கின்றான........

மரூத்து போன மரகட்டையாய்
மாற்றத்தை தேடு
இந்த வாழ்க்கை
குறுத்து முனையாய்
தொட்டது
ஒரு
தவ யோக சாலை

எங்கோ ஒரு ஒளிக்கீற்று
என் உள்ளத்தில்
ஒளிர்ந்தது
கடல் அலையாய்
அலைந்து கொண்டிருந்த
என் மனச்சாலை
மவுனத்தின் விளிம்பில்..........

ஊக்கம் பெறும்
என் உடலும்
உணர்வு பெறும்
என் மனமும்
ஆக்கத்தின் தலை வாசல்

சுடர் ஒளி என் மனக்கதவை
தட்டுகின்றன
சோதி ஒளி என் மனச்சிறையை
எரிக்கின்றனதூய இல்லற ஞானியின்
தவ யோக வாழ்க்கை முறை
என்னை அழைக்கிறது...
.


வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

August 17, 2009

சுகந்திர குறட்டை’


மீன்டும் ஒருமுறை
சுகந்திர தினம்
கணக்கு வழக்குகளை
சரி பார்க்கும் நேரம்

எங்கள்
சமுக ஒப்பந்தங்கள்
மீள் அரங்கெரும் நேரம்

கூட்டி கழித்து பார்த்தால்.......
லாபமா? நட்டமா?
கணக்கு புரியவிலை
எங்கோ இடிக்கிறது

நாடு என்ற
பேரங்காடியில்
வாங்கிய பொருளை
மீண்டும் ஒரு முறை
சரி பார்க்கின்றேன்

சில பொருட்கள்
ஊசி போன வடையாய் போனது
சில பொருட்கள்
அழுகிய முட்டையாய் ஆனது

சில ரொட்டி துண்டுகள்
உப்பி போய்க்கிடந்தன
சமுதாய வாடை
“கப்” என்று அடித்தன

இப்பொழுது புரிந்தது
விலை ஏறவும் இல்லை
இறங்கவும் இல்லை

நாம்தான்
உறங்கிவிட்டொம்
“சுகந்திர குறட்டை’
இன்னும்
ஆவெசமாய்
குரல் கொடுத்துக்கொண்டிருத்தது.

August 16, 2009

நான் உன்னைக் காதலிக்றேன்


என் நண்பர் செல்வ
அருமையான தமிழ் பற்றாளார்.
பேச்சுவாக்கில் ஒரு இனிய கவிதையை
சொன்னார்

தன் காதலியை
யார் காதலித்தாலும்
கோவம் வரும் .......
ஆனால்.........
தன் தமிழ் காதலியை
யார் காதலித்தாலும்
அவர்கள் மேல்
அன்பு பெருகும்....... என்று

நானும்
ஆமோதித்தேன்
ஆகா ஓகோ
அருமை அருமை

என்ன தமிழ் பற்று ......
இப்படியும் நல்ல தமிழ் நெஞ்சங்கள்

நண்பா நீ வாழ்க
நீன் கவிதை வாழ்க

August 15, 2009

புயலாய் புறப்படு .....பூவவை மலர்ந்திடு


ஞான குரு வேதாந்தரி மகாரிசின் கனவு மெய்பட அன்ணாரின் பிறந்த நாள் நேற்று, உலகம் நலம் பெற எனது கவிதை ............


இளைஞனே.....
எழுந்துதிரு
எழுச்சிக்கொள்
ஏக்கங்களை விட்டு விடு
எண்ணியதை செய்து முடி

கனவுகளை
காற்றில் விட்டு விடதே
கைகளில் ஏந்திக்கொள்

இமயம் எதிர்படும்
உந்தன்
இயலாமை புலப்படும்
உனக்குள் நீ அகரம்
இசைவாகும் மனச்சிகரம்

இதயத்தை சுகப்படுத்து
இயலாமை இல்லாமல் போகும்

இளைஞனே.....
மனச்சிறையை விடு
மவுன புரட்சிக்கு வழி விடு

காலம் காலமாய்
ஏற்றிவிட்ட
இயலாமை என்ற
மரப்பனுவை மாற்றிவிடு
இயலும் என்ற அனுவை
உடலிலே ஏற்றிவிடு

உன்னால் முடியாது
எதுவுமில்லை
முயற்றால் முடியாது
எதுவுமில்லை
முயற்ச்சி சித்தமாகும்
அதுவே வித்தாகும்

நீ
ஒரு அனு ஆற்றல்
உன் சுழற்ச்சியின் வேகத்தில்
துரும்பாகும் எதிர்ப்பலைகள்

எண்ணத்தை சீர்படுத்து
ஏற்றங்கள் உன் வாழ்வை
நெறிப்படுத்தும்
எதையும்
சாதிக்க முடியும்
என்ற எண்னம்
உனக்கு ஏணிப்படியாகும்

கவலைகளை ஒழிக்கும்
கடும் தவம் செய்
கவலைகள்
கடுகாகும்
மலையலவு பிரச்சனைகள்
மடுவாகும்
நாம் மனம்வைத்தால்
சிறு புள்ளிகலாகும்.

மனவளம் என்பது
வாழ்க்கையின் கற்பகதாரு
அறிவெனும் கனி தரும்
அன்பேனும் கனி தரும்
பண்பெனும் கனி கரும்
அவை அனைத்தும்
சேர்ந்து வரும்
வெற்றிகனி உங்கள் கையில்

இளைஞனே.....
உனக்கு
எதிரி நீ தான்
உன்னை புரிந்துக்கொள்ளதவரைக்கும்
புரிந்து கொண்ட்டால்
பாதை புலப்படும்
புனித பயணம் புரிந்துவிடும்

நீ போடும்
விதை விருச்சாமாகும்
விழுதுகள் வேர்விட்டும் எழும்
உன்
கனவுகள்
விணணை முட்டும்

இளைஞனே.....

கனவுகளை
காற்றில் விட்டுவிடாதே
கைகளில் ஏந்திக்கொள்......

கருமையம்
விழிப்புறும் போது
கவலைகள் பறந்தோடும்
கருவரைகள் உயிர்க்கொள்ளும்
நினைவரைகள்
நிலைக்கொள்ளும்

இளைஞனே.....

எண்னங்களை மாற்று
எண்ணியவை நல்லவையாகும்
ஏக்கங்கள் ஆக்கங்கள்லாகும்

எரிந்து விழும்
எரிக்கற்காலாய்
ஆகதே!
ஒடிந்து விழும்
மரக்கிளையாகதே!

சுழலும் சூரியனாக
சுழன்று வரும் புயலாக
பொங்கி எழும் எரிமலையாய்
எழுந்து வரும் பேரலையாக
நீ புறப்படு

உன்
வாழ்க்கை உனக்காகதான்
உணர்வு கொண்டு போராடு
உன்னை உணர்தல்
என்பது
மாபெரும் தவம்
உணர்தவர்கள் மாய்ந்ததில்லை
உணராதவர்கள் உய்ந்ததில்லை
அன்புடன் மனோகரன்
வாழ்க வளமுடன்

August 14, 2009

வாழ்க வளமுடன்வாழ்க்கை என்றால் என்ன? அதன் புரிதலை யார் உனர்ந்துக்கொண்டார்கள் எனற கேள்வி எழும்?உண்மையான வாழ்க்கை கல்வி என்பது யார் நமக்கு சொல்லிகொடுப்பார்கள்? வாழ்க்கை என்னும் அழகிய பூங்காவை செப்பனிட்டு தருபது யார்? இதற்கான விடை எங்கள் ஆசான் அருட்தந்தை வேதாத்திரி மகாரிசி। உள்ளம் தூய்மையுற்றால் உணர்வும் தூய்மை பெரும். வாழ்வும் வளம் பெரும். என்ற தத்துவத்தை உண்ர்திய மகான். மானிடராய் பிறந்த ஒவ்வொரு மனிதனும் ஏன் துன்பம் எனும் சாக்கடையில் உழல்கின்ரான்? நோய் நொடி பினி மூப்பு மனிதனை எவ்வளவு சங்கடத்தில் அழ்த்துகின்றான॥ இதை உணர்ந்த அருட்தந்தை அழ்ந்து அழ்ந்து ஆராய்ந்து வேதாத்திரியும் தவமுறை வாழ்க்கை கல்வியை நமக்கு ஒரு கொடையாய் தந்துவிட்டு சென்றார்। எந்த ஒரு மதமும் மனித வாழ்க்கைக்கு தடையாய் இருக்க கூடாது என்பதற்கு உலக சமாதன சேவை சங்கத்தை தேற்றுவித்தார்।ஆன்மிக பாதை என்பது மத அடிப்படையில் இருக்க கூடாது மனவளத்தில் தான் இருக்க வேண்டும்।அப்போழுதுதான் மனித நலம் போற்றப்படும் என்று எண்னியவர். தன் நாற்பது ஆண்டு ஆன்மிக வாழ்வில் பத்து ஆண்டுகள் வள்ளாலார் நினவில் வாழ்ந்தவர்.வள்ளாலாராய் வாழ்ந்து காட்டியவர்.

நோயா? இந்த எடுத்துகொள்! எளிய முறை குண்டலின் யோகம், எளிய முறை உடல் பயற்சி। மன அமைதின்மையா? மன சங்கடமா? இந்த எடுத்துக்கொள்! எளிய முறை தவம்.! பிணி மூப்பா? இந்த எடுத்துக்கொள்! காய கல்பம் அறிவின் கூர்மைக்கும் தேக பலத்திற்கும் இல்லற இன்பத்திற்க்கு இந்திரிய சக்திக்கும், நீண்ட ஆயுலும் உன் வசப்படும் .சோம்பித்திரியும் நம் மாண்வர் சமுதாயம் சிறப்பான மதிப்பென்களை பெற உதவும்.

பிரபாஞ்ச சக்தி வேண்டுமா? எங்கும் வியப்பித்திருக்கும் காந்த அலைகள் வேண்டுமா? இருகிறது தீபப்யற்சி..எடுத்துக்கொள்ளுங்கள்!.வற்றாத ஜீவ சக்தி என்று கருணை உள்ளத்தோடு வழிகாட்டியவர்..வாழ்க்கைக்கு எது தேவை/ அதை வடிகட்டி பக்குவ படுத்தி வாரிவழங்கிய வள்ளல் அவர்.
உன்னையே நீ உணர்ந்து உயர்வடைவாய் என்ற உத்தமர், அனைவரும் பிரம்மம் என்ற ஏற்ற தாழ்வற்ற மானிடத்தை விரும்பியவர். நீயும் பிரம்மம் நானும் பிரம்மம் என்ற பிரம ஞான பயற்சியை தந்தவர்
புரியாத மொழியில் அர்சானை ஆராதனை அன்ணிய மொழியில் பரவசப்டும் நாம் வாழ்க வள்முடன் என்ற ஆன்மிக சக்தி நம் தமிழ் மொழியின் தாரக மந்திரமாய் உலகின் எட்டு திக்கிலும் பரவிக்கொண்டிருகிறது.எங்கள் மன்றத்தில் இரு சீனர்கள் அன்பர்கள் எங்களுடன் இனைந்து இப்பயற்சியை மேற்கொண்டு வருகிறார்கள்.ஒரு சீன அன்பர் தன் பிள்ளையும் தமிழ் கற்றுக்கொள்வதற்கு தமிழ் பாலர் பள்ளியில் சேர்த்து இருக்கின்றார்.தமிழின் இனிமை அவருக்கு புரிந்த அளவுக்கு நம் தமிழர்களுக்கு புரியமால் போனது வேதனையை தருகிறது.இந்த சீன அன்பர்களை போன்று உலகில் பல ஆயிரம் அன்பர்கள் தமிழை கற்றுனர்ந்து ஆன்மிக வழியில் செல்வதற்க்கும் உலகம் உய்யவும் நமது வேதாந்திரி மகாரிசி வாழிகாட்டி இருக்கின்றார்.

இந்த வாழ்கையை எளிய முறை படுத்தி இனிய முறையில் வாழ்ந்து வளம் பெற அவர் தந்த வழிமுறை நமது சமுதாயம் பின்பற்றினால் கொலை கொள்ளை கயமை மறைந்து போற்றப்படும் சமுதாயமாக மாறும்.

அண்னாரின் பிறந்த நாள் இன்று உலகம் தழைக்கவும் உலக மக்கள் நலம் பெறவும் அவருடனும் எங்கள் மன்றத்தின் சார்பாகவும் இனைந்து வாழ்க வளமுடன் என்று மன வளம் பெற வேண்டுகின்றேன்
அன்புடன் மனோகரன்


August 13, 2009

நீதான் என் நிஜ முகம்


கனவுகளின்
கரித்துண்டு
எப்படி
உன் அழகான வெள்ளை
மனதில் படிந்தது

என் மனக்கண்ணாடி முன்
உன் முகம்
அழகாய்
தெரிகிறது
எப்படி?


நீ எதை நினைகின்றாய்
அதுவாய் ஆகின்றாய்
என்பார்கள்..

எவ்வளவு பெரிய உண்மை

எம்பொழுது
உன்னை மறந்தேன்
நினைப்பதற்க்கு?
என் ஜீவ செல்கள்
ஒடிக்கொண்டிருபது
உன்
மூச்சி காற்றை
ஏற்றுக்கொள்வதற்கு தானே

என்
நினைவெல்லாம்
நீ தான்
என்
நிழல் கூட
நீ தான்

என் முகத்திற்கு
நான்
என்ற முக முடி
அணிந்திருக்கின்றேன்
அகாங்காரமா?
இல்லை
உள்ளத்தின் உணர்வாய்
உன்னுள் இருக்கின்றேன்
என்ற
ஆணவமா?
நான் நானா இல்லை
நீ என்னுடன் இருக்கும்
ஒவ்வொரு நிமிடமும்

என் நிஜமுகம்
நீதான்
நானே நீயாகும் போது
எனக்கு எதற்கு
இன்னொரு முகம்?

August 11, 2009

சவம்+சிவம்ஆதி வெளியை
தேடி ஒடும்
ஜீவ நதி
ஆதியும் அந்தமும்மில்லா
அருட்பெரும் ஜோதி
சவமாய் இருந்த இவன்
ஜீவன் என்ற
உயிர் ஆற்றால் பெற்று
சிவம் ஆனான்
ஆதிவெளியை
தொட்ட போழுது
சிவம் சவம் ஆனான்
ஆதிக்கு சமம் ஆனான்
சமம்+ஆதி
சமாதி ஆனான்.

August 7, 2009

தாய்


விண்ணுக்கும் மண்ணுக்கும்
பாலம் சமைத்து
மண்ணுலகம் நோக்கி விரைந்தான்
இறைவன்......

மண்னுலகில் தான்
எப்போழுதும் இருக்க முடியாது
என்பதால்
தாய்யை படைத்தான்

தாய் இறைவனின்
திருக்கோவில்
தாய்மை இறைவனின்
கருவறை

இறைவன் தாடகத்தில்
பூத்த மை
இறையாண்மை
மண்னுலகத்தில்
போற்றும் மை
தாய்மை

மழலைக்கு சோறுட்டும் பொழுது
தன்நிலவை அழைக்கும் தாய்மை
அவளே முதுமை அடைந்துவிட்டாள்
தன்நிழலாய் அழைப்பது
வறுமை சிறுமை வெருமை

என்ன மானிடம் இது?............

வாழ்வில் இனிமையை தந்த இறைவன்
அகத்துய்மையை தர மறுப்பாதேன்?

@@@@@@@@@@@@@@

இறைவன்
போட்ட கோலம்
எரிமலை குழம்பாய்
வெடித்து சிதறியது
தமிழனின் கறிக்குழம்பில்

தன் சமைக்கும்
சமையலில்
வெந்தியத்தை போட்டான்
வெங்காயத்தை போட்டான்
பெருங்காயத்தை போட்டான்

இந்த தமிழனின்
காயத்திற்க்கு
இனமானம் என்ற
கல்பத்தை போட மறந்தான்
இறைவன்......

August 2, 2009

கவிதை துளிகள்

மின்னல் வெட்டு
ஆயிரம் மவுனங்களூக்கு
ஒரு புன்னகை போதும்
உந்தன் மின்னல் வெட்டில்
பட்டுத்தெறிக்கும்
எந்தன் ஜீவ நாதம்
நீ
கட்டளை இட்டால்
கலைந்து போகும்
மேகக்கூந்தலின் காலடிச்சுவடை பற்றி
ஏறி வந்து எட்டிப்பிடிம்பேன்
கோடி நட்சத்திரத்தை
உந்தன் கடைக்கண் பார்வைக்காக.....

ஆனாலும்....
கோடான கோடி நட்சத்திரங்களில்
விடிவெளி ஒன்று தான்
நிலவெளியாய் நினைத்து
அதிலே
காலாற நடப்போம்
காதல் சமைப்போம்.

@@@@@@@@@@@@@@@2@@@@
கண்ணிர்த்துளி
நான்
விழித்தெழுந்த போது
என் விழியாய் அவள் இருந்தால்
நான்
கிழர்ந்தெழுந்த போது
என் உடலாய் அவள் இருந்தால்
இன்று
என்
விழிகளில் வெளிவரும்
கண்ணிர்த்துளிகளுக்கு
உயிராய் அவள் இருந்தால்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கண்ணகி
கோவம் கொண்ட கண்ணகி
மதுரையை எரித்தால்
அவள் விட்டெரிந்த தீ
இன்னும்...........
சிலருடைய கண்னிருக்காக
எரித்துக்கொண்டிருக்கிறது
சூரியனை.

August 1, 2009

மாசில்லா நிலவு மனைவி


நினைவுகளை வருடி
நித்தமும் அவள்
மனதை திருடி
கனவுகள் பல பரப்பி
கவிதையாக்குவேன்
பல வண்னங்களை பார்த்து
வாழும் வாழ்க்கை
அவள் எண்ணங்களை
சுவாசித்து
அனுதினமும்
அவள் நினைவுகளை
மூச்சுக்காற்றாய் உள்ழிழுத்து
மவுனமாகும்
என் இதயம்

நறுமண பூவென்று
திருமணமானது
இருமணம் இனைந்து
ஒரு மணமானது
வாழ்க்கை என்னும்
கண்னாமூச்சி
வடிக்கட்டும் தேத்துள் வலை போன்றது
இனியவைகளை எடுத்து
இல்லறம் நடத்து
அவள் இதய சுவாசம்
என்றும் பத்திரமாக இருக்கும்
உன்னிடம்......