July 23, 2009

சினிமா ஒரு பார்வை
தமிழ்த்திரை உலகம் நம்மை சந்தி சிரிக்க வைக்குமா?அல்லது
சிந்திக்க வைக்குமா
?
கடந்த சில இரவு திங்கள் அன்று தொலைக்காட்சியில் வானவில் சமுக நிகழ்வுகளை அலசும் அலாரம் என்ற நிகழ்ச்சியை கானும் வாய்ப்பு கிட்டியது.நல்ல கருத்தொட்டமான அந்த நிகழ்வில் சினிமா தாக்கத்தை அலசும் அற்புதமான நிகழ்வாய் அமைந்திருந்தது. நானும் எனது பங்குக்கு ஒரு சின்ன அலசல்

தமிழர் வாழ்வியல் துறையில் பிண்ணிப் பினைந்த ஒரு ஆதிக்க துறை சினிமா என்றால் அது மிகை அல்ல. தமிழரின் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் இரண்டார கலந்து ஊண் உயிரை உலப்பிலா இன்பத்தை தருவது தமிழ் திரைப்பட துறை. ஆண் பெண், ஏழை பணக்காரன், முதாலளி தொழிலளி ஆண்டான் அடிமை என்ற வர்க்க பாகுப்பாடு பார்க்காமல் அனைவரையும் ஒன்றுறினைக்கும் துறை சினிமா.

காலங்கள் மாறினாலும் கருத்துக்கள் மாறினாலும் கவலை இல்லாமல் சினிமா படம் பார்க்கும் பண்பாடு தமிழர் மத்தியில் உயர் நிலையில் இருக்கிறது.

சிரிப்பதற்கும் சிந்திப்பதற்கும் என்று இருத்த தமிழ் சினிமா துறையின் அதித வளர்ச்சி இன்று கலாச்சர சீர் அழிவுக்கு உகந்த சாக்கடையாய் மாறிப்போனது விந்தையிலும் விந்தை.

சினிமா பேய் போய் சிரியால் பூதம் கிளப்பி இருக்கிறது, சினிமா. இரண்டரை அல்லது மூண்று மணிநேரம் தான்.ஆனால் சின்ன திரை சீரியாலோ இருப்பத்தி நான்கு மணிநேரம். தமிழ் பெண்களின் அரட்டை அடிக்கும் நேரம் போய் குறட்டை விடும் சத்தமும் போய் குடும்பதில் வில்லியாய் போனதுதான் மிச்சம்.
அரைகுறை ஆடையில் அசிங்கங்களை காட்டி பெண்களை காமப்பொருளாய் சுட்டுவதும் பெண்ணகளை இழிவுபடுத்தி மடத்தனங்களின் மொத்த உருவம் பெண்கள் தான் என்று நினைக்கவைப்பதும்।எவ்வளவு முட்டாள்த்தனம் என்று புரியும். “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்” என்று சொன்ன பாரதியார் மட்டும் பார்த்திருந்தால் மங்கையராய் பிறக்க மாதவம் செய்ய வேண்டாம் என்று தான் சொல்லிருப்பார். பணத்திற்க்காக பண்பாடுகளை விற்க்கும் வேசிகள் போன்று இந்த தமிழ் சினிமா தாசிகள் உருவெடுத்திருக்கின்றனர். எந்த இனத்தில் அய்யா அசிங்கங்கள் இல்லை?ஆனால் அவர்கள் அதை நளினமாக காட்ட கற்றிருக்கிறார்கள். நமோ அதை பொது நூல் நிலையதில் அல்லவா வைக்கின்றேம்.

வேற்று மொழி படங்களில் அறிவியல் கூறுகளை கூறுவதற்கும், சமுக சிந்தனைகளை வடிகட்டுவதற்கும், புதிய கலை நுட்பங்களை வெளிக்கொணர்வதற்கும் சினிமாவை ஒரு பெரும் செயற்ப்படும் தளமாக பயண்படுதுகின்றனர். ஆண் பெண் உறவு கொள்ளும் செயற்பாடுகளை தனி காம படங்கள் ஆக வெளிக்கொணர்ந்து பொதுப்படையான படங்களிருந்து அவை தனித்து விடப்படுகின்றன..ஆகையால் பொதுப்படையான ஆங்கில திரைப்படங்கள் குடும்பத்துடன் பார்பதற்கும் தரமானதகவும் நவின கலை அம்சம் மிக்கதாகவும் இருக்கின்றன. ஆனால் நம் தமிழ் சினிமா அரைத்த மாவையே அரைப்பதும் காதலையும் காமத்தையும் அன்று தொட்டு இன்று வரைக்கும் உறுக்காய் போன்று தொட்டுக்கொள்வதும்.அந்த கருவை விட்டால் படம் எடுப்படாது என்பதும் மனித வாழ்கையில் எற்படும் சகல நிகழ்வுகளையும் ஒரு கலவையாக்கி ஒரே படத்தில் தினித்து நம்மை வெண்னையாக்குவது எவ்வளவு அறிவீனமானது. படுக்கை அறை காட்சிகளை நவரசமாய் எடுத்து குடும்பத்துடன் பார்க்கும் போது நம் முகத்தை எங்கே வைப்பது?


தரம் கெட்ட தமிழ் படங்களினால் சமுதாய உணர்வுகள் மங்கி போகின்றன।சமுதாய சூழல் மாறிபோகின்றன ரவுடிகள் கலாச்சரம் திரையில் மட்டுமா? நம்மை பார்க்கும் வேற்று இனம் எதோ ஒரு கொலைகார கும்பலை பார்ப்பது போன்று அல்லவா பார்க்கிரார்கள். இருக்கும் சிறு மக்கள் தொகையில் நம்மை நாமே வெட்டி வீழ்த்தி கொள்வதுதான் அதிகம். தமிழ் சினிமா தமிழர்களின் ரொல் மடலாகவும் உணர்ச்சிகளின் வழிகாலாகவும் அமைவதுதான் உண்மை.


தமிழ் திரைப்படங்களிலும் தமிழ் சீரியலிலும் தமிழ் மொழி பயன்பாடு மகா மட்டமான நிலையில்தான் இருக்கினறன।தமிழை வளர்ப்பதை விட தமிழை கொச்சை படுத்துவதுதான் அதிகம். ஆங்கிலம் கலந்த தமிழ் அதிகம் புழக்கதில் உள்ளன. சினிமாவும் சீரியலும் தமிழை வளப்படுத்துவதை விட்டு விட்டு தமிழை அழிப்பதற்கு முதலிடம் தருகின்றனர். சினிமாவில் வரும் தமிழை கற்று, இருக்கும் நல்ல தமிழை இழக்கும் நிலை வருமா? தமிழ் நாட்டு அரசங்கம் சினிமா தமிழை தரப்படுத்தினால் உலக அளவில் தமிழ் நிலைப்படும்.


நாம் சினிமாவை எதிர்கவில்லை ।’பல நூல் கற்று நீ வழங்கும் கல்வி பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்” என்று கவிஞர் கண்ணதாசன் சொனனது போல் நல்ல தரமான படங்களை தருமாறு வேண்டுகிறோம்.சினிமா நல்லவைகளை போதிக்க வேண்டும்.மனிதனை மனிதனாக வாழவும் வளரவும் வழிச்செய்ய வேண்டும். நல்ல மனித வளத்தையும் மன நலத்தை வளர்க்கும் களமாக சினிமா மாற வேண்டும்॥ சாதரண ஒரு இயந்திரம் மனித வர்க்கத்தின் நேயத்தையும் மாண்பையும் மாற்ற இடம் தரலாமா? நமது எண்ணங்கள்தான் நமது வாழ்க்கையை வடிவமைகின்றன.அவை நல்ல எண்ணங்களாக இருக்கட்டுமே.ஒரு நல்ல மனிதன் தரமான பண்பான சினிமாவை தருவதில் என்ன தவறு இருக்க போகிறது?


உணர்வுள்ள ஒரு தமிழனை உருவேற்றுவதில் தமிழ் திரைப்படத்துறை உணர்வுபுர்வமாக உழைக்க வேண்டும்.அப்பொழுதுதான் தமிழ் கூறும் நல்லுகம் உங்களை இரு கரங்கூம்பி வரவேற்கும்.

Post a Comment