July 17, 2009

சமயமும் சமுதாயமும்


எழுமீன்! எழுமீன்!...என்று இளைஞர்களை தட்டி எழுப்பினார் ஒரு மகான்।அவர்தான் விவேகானந்தர். சோம்பிக்கிடந்த இந்து சமயத்தை துக்கி நிறுத்திய தூன் அவர். சமுதாய கொடுமைக்கும் சமய இழிநிலைக்கும் எதிராக போர்க்கொடி துக்கியவர்। சமய சீர்த்திருத்தங்களையும் சமுக மாற்றங்களுக்கும் வித்திட்டவர்।துணிவான வீரர் அவர்.அவரை போன்று சமயத்தின் பெயரால் எற்படும் தீமைகளை தட்டி கேட்க உணர்வுள்ள இளைஞர்கள் முயற்வது பாரட்ட தக்கது... முட்டாள்தனமும், மூட பழக்கமும் சேர்ந்து இந்து மதத்தை இழி நிலைக்கு இட்டு சென்று விட்டன. ஞானிகளும், யோகிகளும். சித்தர்களும் பெரிய மகான்களும் போற்றிய தெய்வீக தத்துவ நெறிகளை விட்டு பாமரத்தனமான கொள்கைகளை நம் மக்கள் கடைப்பிடித்து போற்றுவது மிகவும் வெட்கக்கேடான விஷயம்தான்.

இருப்பினும் இவ்வரான மூடாத்தனத்தில் மூழ்கிக்கிடக்கும் நம்மின மக்களை மாண்புறும் பாதைக்கு வழி நடதுவது யார்? ஆயிரம் பெரியார் வந்தாலும் சீர்த்திருத்த முடியாத நம் சமுகத்தை? அடிப்படையில் நமது சமயத்தின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டிருப்பது என்பது மறுக்க முடியாத உண்மை। எல்லொராலும் ஏறிமிதிக்கபடும் இந்து சமயத்தின் நல்ல கருத்துக்கள் மறைக்கபட்டும் மறக்கபட்டும் விடுகின்றன। ஒரு சில ஒவ்வாத கருத்துக்கள் ம்ட்டும் எடுத்தாண்டு இந்து சமயமே அருகதை அற்ற சமயமாக பாரிமான வளர்ச்சியை காட்ட முற்படுகின்றனர்। ஒருவகையில் சரியான நல்ல ச்மய கருத்துக்கள் ஒரு சாரசரி இந்துவின் வாழ்க்கையில் நடைமுறையில் கடைபிடிக்கவில்லை।அல்லது சொல்லிதரவில்லை
பூசாரிகளுக்கு இறைவனை தொழுவது ஒரு தொழில்।தொண்டுள்ள்த்தோடு சமுதாய நோக்கோடும் யாரும் இறைவனை வணங்குவது கிடையாது,சமயம் ஒரு வியபார பொருளாகிவிட்டது.முன்பு போல் குரு குல கல்வியும் கிடையாது। வாழையாடி வாழையாக வந்த பன்பாடு கூறுகளை இழந்து விட்டோம்। நமக்கு உண்மைகளை யார்தான் செல்லி தர கூடும்?

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் சமயத் துறையில் வார்தெடுக்கப்பட்ட நல்லொழுக்கங்களும் நற்ச்சிந்தனைகளும் கால ஒட்டத்தில் காடசி விசப்பட்டன। ஒரு சில காரணங்களினால்.. மொழியை சீர்செய்வது போன்று சமயத்தை சீர்செய்ய முடியாதா? நல்ல சமய கருத்தும் நல்ல சமுக தெளிவும் கொண்ட ஒரு தனிமனிதனை அல்லது சமுகத்தை வழி நடத்த முடியாதா? நாம் குண்டுச்சட்டியில் குதிரை ஒட்டுபவர்கள்சுயநல விரும்பிகள் சமயம் சமுகம் என்று வரும் போது பொது நலத்தை விட தனி நலததை பெரிதாக போற்றுவோம். சமய சமுகத்தில் எற்படும் தீமைகளை தட்டி கேட்கமால் புரையேட விட்டுவிட்டொம். இன்று விருச்சமாய் வளந்து சமய சமுக சீர்கேடுகளுக்கு ஆணிவேராய் அமைந்து விட்டது.


கழிவுகளினால் மாசுறும் சில நதிகளை போன்று சில கேவலமான கருதுக்களினாலும் பாதகமான நிகழ்வுகளினாலும் இந்து சமயமும் பாழ்பட்டு இழிவுபட்டுள்ளன। நன்னிலத்தில் விளையும் பதர்களை களை எடுப்பது போன்று சாக்கடையாய் ஆகிவிட்ட சமயத்தை சுத்தம் செய்வது யார்?

ஒட்டு மொத்த சமய குறைக் கூறால்கள் நமது சமுதாயத்தை கடை நிலைக்கு இட்டு சென்றுள்ளன॥ சமுதாய இடரை களைய வந்த திராவிட கட்சிகளும் அவர்களின் கொள்கைகளும் அவர்களின் சினிமா தாக்கங்களும் இந்த தமிழ் சமுதாயத்தை சிரழித்ததுதானே மிச்சம் । தார்மீக கருத்துகளை அவர்களால் சொல்லமுடிய வில்லை ஏனெனில் அவர்களுக்கு ஆன்மிக பலம்மில்லை॥ நல்ல உள்ளம் கொண்ட பெரியார் போற்றுதலுக்குரிய தலைவர், அவர் போன்ற சமுக சீர்திருத்தவாதிகள் ஆன்மிக பலம் கொண்டு பாதகமான சமய கருத்துக்களை எதித்து போராடி இருத்தால் சமுகம் சிறப்புறுறிருக்கும்.

ஆன்மிக பலம் என்பது ஒரு மகத்தான சக்தி। அந்த சக்தியை தவறான பாதையில் இட்டு செல்லும் போது இந்த சமுதாயம் ஜீவ சக்தியை இழக்கும்।அதே சமயம் சாக்கடையாய் ஆக்கப்பட்ட இந்த சமய நதியை துய்மை படுத்தி அவ்வபோழுது கால ஒட்டத்தில் ஒதுங்கும் ஒவ்வாத கழிவுகளை அகற்றி வற்றாத கங்கை நதியாயை மாற்றினால் அர்ப்பரித்து வரும் கங்கை நதியின் சக்தியை போன்று நமது சமயமும் பெருக்கெடுத்
து ஒடும் ஜீவ சக்தியை பொங்கி எழச் செய்யும்। மன வளமும் இந்த தமிழ் சமுதாய நலமும் காக்கப்படும்.


மனமாற்றம் மனிதனுக்கு மட்டும் அல்ல மதத்திற்கும் சேர்த்துதான்.
.
Post a Comment