July 24, 2009

வாழ்க வளமுடன்...விக்கி

என்னுடன் சில நிமிடங்கள்...


கடந்த ஞாயிறு அன்று வேதாந்திரி மகரிஷியின் பிரிக்பில்ஷில் அமைந்துள்ள மனவள பயற்சி மையத்தில் நானும் எனது நண்பர்கள் செல்வ,ராவ் மற்றும் எங்கள் மனவள மையத்தின் பேராசிரியர் சேது ராமன் அவர்களுடன் கலந்து கொண்டு அளவளாவிட்டு சாரி சாப்பிடுவேம் என்று நினைத்து நாங்கள் நால்வரும் அய்யர் கடையில் அமர்ந்து ஒடர் கொடுத்தா ...வருதய்யா விதவிதமான அய்ட்டம்....இ இ இ இ ....தப்ப நினைக்கதிங்க ... ஒரு ஆறு ஏழு வகை எல்லாம் சைவம் தான்.....ம்ம்ம்ம்ம்ம்னு ஒரு பிடி பிக்கலாமுனு நினைத்து சாப்பிட்டு கொண்டிருந்தால் திடிர் என்று என் பக்கத்து மேஜையில் ஒருவர் சென்று அமர்ந்தார்।யார் அவர் என்று நினைத்த போது மின்னால் வேகத்தில் பளிச்சென்று ஒரு முகம் எனது மனத்திரையில் மின்னி மறைந்தது.....००००००००००० நண்பர் விக்கி ... hai விக்கி என்று அறிமுக படுத்திக்கொண்டென்.அவரை முதன் முதலில் சந்தித்தது மலையா பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த வலைப்பதிவாளர் நிகழ்ச்சியில்।ஆனால் அந்த நிகழ்ச்சியில் அவருடன் அறிமுக படித்திகொள்ளவே அளவாவிக்கொள்ளவோ சந்தர்ப்பம் கிடைக்க வில்லை ஆனாலும் என்னை நினைவில் வைத்து நீங்கள் வலைப்பதிவு பட்டரைக்கு வந்திங்க தானே என்று நலம் விசாரித்தார்।என்னா அவரின் ஞாபக சக்தி। நண்பர் விக்கியை பற்றி என்ன சொல்ல நினைகிறேன் என்றால்,கனிவான முகம் அன்பு ததும்பு வார்த்தைகள்।சாராரி மனிதர் ஆனாலும் உயர்வான கருத்துக்களை அவரின் பதிவில் நாம் காணலாம்।சில சமயங்களில் விரசமான காரசாரமான வார்த்தைகளை அவரின் பதிவில் காணடாலும் கனிவு தரும் அன்பும் மரியாதையை கொண்ட மனிதர் அதையே அவரின் பதிவிலும் நான் கண்டிருக்கின்றேன்।ஒரு பல்முக அம்சம் கொண்ட சிறந்த மனிதர்। அவருடை எழுத்தில் தெரியும் கோவமும் ஆவேசமும் இந்த பூனையும் பால் குடிக்குமா என்று தான் தோன்றும்। ஏன்னென்றால் பால் முகம் மறாத பச்சை குழந்தை முகம் ஆனால் கருத்திக்கள் தெறிக்கும் அவரின் பதிவில்....... (இ.. இ.. இ.. ஒரு ஜொக்க்கு சொன்ன பிரதார்।) நல்ல பாண்பான மனிதர் அய்யா நீங்கள் ।வாழ்துக்கள்.எனக்கு அதி।குமணனின் எழுத்தின் பாதிப்பு அதிகம்।சிறு வயதிலிருந்து அவருடைய எழுத்தோவியங்களை அதிகம் படித்திருக்கின்றேன்।அந்த வகையில் மலேசியாவில் இன்னோரு அதி.குமணனின் வருகை உங்கள் மூலமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றேம்।வளர்ந்து வரும் மலேசியா தமிழ் எழுதுலகில் நீங்கள் ஒரு நம்பிக்கை நட்சத்திரம்। அந்த வகையில் மலேசியா வலைபதிவளார்களக்கு ஒரு ஓ......... போடுவொம்!நன்றி விக்கி இந்த சிறியேனையும் ஞாபகத்தில் வைத்து எழுதியமைக்கு।

அன்புடன் மனோகரன்।அதிசயமான இந்தியா।

இதுவா இந்தியா .....அல்லது இதுதான் இந்தியாவா?India - The Incredible

Add Image

July 23, 2009

சினிமா ஒரு பார்வை
தமிழ்த்திரை உலகம் நம்மை சந்தி சிரிக்க வைக்குமா?அல்லது
சிந்திக்க வைக்குமா
?
கடந்த சில இரவு திங்கள் அன்று தொலைக்காட்சியில் வானவில் சமுக நிகழ்வுகளை அலசும் அலாரம் என்ற நிகழ்ச்சியை கானும் வாய்ப்பு கிட்டியது.நல்ல கருத்தொட்டமான அந்த நிகழ்வில் சினிமா தாக்கத்தை அலசும் அற்புதமான நிகழ்வாய் அமைந்திருந்தது. நானும் எனது பங்குக்கு ஒரு சின்ன அலசல்

தமிழர் வாழ்வியல் துறையில் பிண்ணிப் பினைந்த ஒரு ஆதிக்க துறை சினிமா என்றால் அது மிகை அல்ல. தமிழரின் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் இரண்டார கலந்து ஊண் உயிரை உலப்பிலா இன்பத்தை தருவது தமிழ் திரைப்பட துறை. ஆண் பெண், ஏழை பணக்காரன், முதாலளி தொழிலளி ஆண்டான் அடிமை என்ற வர்க்க பாகுப்பாடு பார்க்காமல் அனைவரையும் ஒன்றுறினைக்கும் துறை சினிமா.

காலங்கள் மாறினாலும் கருத்துக்கள் மாறினாலும் கவலை இல்லாமல் சினிமா படம் பார்க்கும் பண்பாடு தமிழர் மத்தியில் உயர் நிலையில் இருக்கிறது.

சிரிப்பதற்கும் சிந்திப்பதற்கும் என்று இருத்த தமிழ் சினிமா துறையின் அதித வளர்ச்சி இன்று கலாச்சர சீர் அழிவுக்கு உகந்த சாக்கடையாய் மாறிப்போனது விந்தையிலும் விந்தை.

சினிமா பேய் போய் சிரியால் பூதம் கிளப்பி இருக்கிறது, சினிமா. இரண்டரை அல்லது மூண்று மணிநேரம் தான்.ஆனால் சின்ன திரை சீரியாலோ இருப்பத்தி நான்கு மணிநேரம். தமிழ் பெண்களின் அரட்டை அடிக்கும் நேரம் போய் குறட்டை விடும் சத்தமும் போய் குடும்பதில் வில்லியாய் போனதுதான் மிச்சம்.
அரைகுறை ஆடையில் அசிங்கங்களை காட்டி பெண்களை காமப்பொருளாய் சுட்டுவதும் பெண்ணகளை இழிவுபடுத்தி மடத்தனங்களின் மொத்த உருவம் பெண்கள் தான் என்று நினைக்கவைப்பதும்।எவ்வளவு முட்டாள்த்தனம் என்று புரியும். “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்” என்று சொன்ன பாரதியார் மட்டும் பார்த்திருந்தால் மங்கையராய் பிறக்க மாதவம் செய்ய வேண்டாம் என்று தான் சொல்லிருப்பார். பணத்திற்க்காக பண்பாடுகளை விற்க்கும் வேசிகள் போன்று இந்த தமிழ் சினிமா தாசிகள் உருவெடுத்திருக்கின்றனர். எந்த இனத்தில் அய்யா அசிங்கங்கள் இல்லை?ஆனால் அவர்கள் அதை நளினமாக காட்ட கற்றிருக்கிறார்கள். நமோ அதை பொது நூல் நிலையதில் அல்லவா வைக்கின்றேம்.

வேற்று மொழி படங்களில் அறிவியல் கூறுகளை கூறுவதற்கும், சமுக சிந்தனைகளை வடிகட்டுவதற்கும், புதிய கலை நுட்பங்களை வெளிக்கொணர்வதற்கும் சினிமாவை ஒரு பெரும் செயற்ப்படும் தளமாக பயண்படுதுகின்றனர். ஆண் பெண் உறவு கொள்ளும் செயற்பாடுகளை தனி காம படங்கள் ஆக வெளிக்கொணர்ந்து பொதுப்படையான படங்களிருந்து அவை தனித்து விடப்படுகின்றன..ஆகையால் பொதுப்படையான ஆங்கில திரைப்படங்கள் குடும்பத்துடன் பார்பதற்கும் தரமானதகவும் நவின கலை அம்சம் மிக்கதாகவும் இருக்கின்றன. ஆனால் நம் தமிழ் சினிமா அரைத்த மாவையே அரைப்பதும் காதலையும் காமத்தையும் அன்று தொட்டு இன்று வரைக்கும் உறுக்காய் போன்று தொட்டுக்கொள்வதும்.அந்த கருவை விட்டால் படம் எடுப்படாது என்பதும் மனித வாழ்கையில் எற்படும் சகல நிகழ்வுகளையும் ஒரு கலவையாக்கி ஒரே படத்தில் தினித்து நம்மை வெண்னையாக்குவது எவ்வளவு அறிவீனமானது. படுக்கை அறை காட்சிகளை நவரசமாய் எடுத்து குடும்பத்துடன் பார்க்கும் போது நம் முகத்தை எங்கே வைப்பது?


தரம் கெட்ட தமிழ் படங்களினால் சமுதாய உணர்வுகள் மங்கி போகின்றன।சமுதாய சூழல் மாறிபோகின்றன ரவுடிகள் கலாச்சரம் திரையில் மட்டுமா? நம்மை பார்க்கும் வேற்று இனம் எதோ ஒரு கொலைகார கும்பலை பார்ப்பது போன்று அல்லவா பார்க்கிரார்கள். இருக்கும் சிறு மக்கள் தொகையில் நம்மை நாமே வெட்டி வீழ்த்தி கொள்வதுதான் அதிகம். தமிழ் சினிமா தமிழர்களின் ரொல் மடலாகவும் உணர்ச்சிகளின் வழிகாலாகவும் அமைவதுதான் உண்மை.


தமிழ் திரைப்படங்களிலும் தமிழ் சீரியலிலும் தமிழ் மொழி பயன்பாடு மகா மட்டமான நிலையில்தான் இருக்கினறன।தமிழை வளர்ப்பதை விட தமிழை கொச்சை படுத்துவதுதான் அதிகம். ஆங்கிலம் கலந்த தமிழ் அதிகம் புழக்கதில் உள்ளன. சினிமாவும் சீரியலும் தமிழை வளப்படுத்துவதை விட்டு விட்டு தமிழை அழிப்பதற்கு முதலிடம் தருகின்றனர். சினிமாவில் வரும் தமிழை கற்று, இருக்கும் நல்ல தமிழை இழக்கும் நிலை வருமா? தமிழ் நாட்டு அரசங்கம் சினிமா தமிழை தரப்படுத்தினால் உலக அளவில் தமிழ் நிலைப்படும்.


நாம் சினிமாவை எதிர்கவில்லை ।’பல நூல் கற்று நீ வழங்கும் கல்வி பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்” என்று கவிஞர் கண்ணதாசன் சொனனது போல் நல்ல தரமான படங்களை தருமாறு வேண்டுகிறோம்.சினிமா நல்லவைகளை போதிக்க வேண்டும்.மனிதனை மனிதனாக வாழவும் வளரவும் வழிச்செய்ய வேண்டும். நல்ல மனித வளத்தையும் மன நலத்தை வளர்க்கும் களமாக சினிமா மாற வேண்டும்॥ சாதரண ஒரு இயந்திரம் மனித வர்க்கத்தின் நேயத்தையும் மாண்பையும் மாற்ற இடம் தரலாமா? நமது எண்ணங்கள்தான் நமது வாழ்க்கையை வடிவமைகின்றன.அவை நல்ல எண்ணங்களாக இருக்கட்டுமே.ஒரு நல்ல மனிதன் தரமான பண்பான சினிமாவை தருவதில் என்ன தவறு இருக்க போகிறது?


உணர்வுள்ள ஒரு தமிழனை உருவேற்றுவதில் தமிழ் திரைப்படத்துறை உணர்வுபுர்வமாக உழைக்க வேண்டும்.அப்பொழுதுதான் தமிழ் கூறும் நல்லுகம் உங்களை இரு கரங்கூம்பி வரவேற்கும்.

July 22, 2009

கெளமார காதல்.......(२)


கெளமார காதல்.........

சல சலக்கும் ஒடையை போல
சர சரக்கும் சருகுகளை போல
கல கல வெனும் குலுங்கும்
கண்ணாடி வளையல் போல.....வாழ்க்கை
கருவண்டு கலகலக்குமா?


உருவமில்லா
உணர்வுகளுக்கு
உருவம் கொடுக்கும்
அன்பு தான் காதலா?

இனம் தெரியாத
இரு உருவங்கள்
இனைவது காதலா
அல்லது
அன்பின் தேடலா?

முகம் தெரியா
முகவரிகளை
மூச்சுக் காற்றயை--உள்ழித்து
முழு மதியாயை மனதில் ஏற்றுவது
சுகமான சுகம் தான்
சுவையான அனுபவம் தான்...........


அவள் நினைவாள்
வாடுவதும்....
அவள் நினைவாள்
எங்குவதும்....
ஏடுடெத்து கவிதை புனைவதும்
வாலிப பருவத்து விளையாட்டு தான்


வசந்தங்கள் மாறும் போது
வாழ்கை நிலையும் மாறும்
முகம் தெரிய முகவரிகளை
தேடிய நிலை மாறி
உனக்குள்
உன்னையே தேடும் நிலை வரும்
உன்னையே நீ அறியும் கலையும் வரும்..........

உள்ளத்தின்
உணர்வுகளுக்கும்
ஒடுங்குகின்ற எண்ணங்களுக்கு
இடையில் மலர்வது
கனிவுரும் காதலா ?
கனிந்த காமம்மா?.................

ஆதி மனித காதலை அந்தம் மில்லா தேடலை
தொடரும் என் கவிதை வரிகள் ............

July 20, 2009

கெளமார காதல்...(1)......


கெளமார காதல்.........

சில்லென்று
ஒரு சின்ன புஷ்பம்
சிரித்துக்கொண்டொடும்
மின்ணல் இடையில்
துள்ளல் நடையில்
துவண்டு சாயும்.....அது மயங்கி
என் மடியில் வீழும்...........

இமயத்தின் சாரலில்
இதயம் கொஞ்சம் மலரும்- எந்தன்
இளமை அங்கு திமிரும்
இனிமை எங்கும் மயங்கும்

கனா காணும் காலம்மெல்லாம்
கவிதை பொங்கும் -எந்தன்
கவி உள்ளம் - அவள்
கருவிழியில் மையம் கொள்ளும்

தன்னொளி நிலாவில்
தவழ்து வரும் அழகு -- அவள்
தரணி புகழ் பாடும்
தமிழ் பெண்னவள்--என்னவள்


மலர் சோலையில்
மயில் ஆடும் எந்தன்
மனச்சோலையில்
அவள் நினைவாடும்......

குயில் போல் குரல்
குங்கும சிமிழ் போல் நிறம்
பயிற் போல் செழிப்பு
பைந்தமிழ் வனர்ப்பு

சிந்தனை சிலுவையில்
சிறைப்பட்ட என்னை-- தன்
நெஞ்சத்தில் சுமந்தவள்
என்னவள் -- என் இலலத்தவள்,,,,,,,,,,,,,

ஆதி மனித காதலை
அந்தம் மில்லா தேடலை
தொடரும் என் கவிதை வரிகள் ............

July 17, 2009

சமயமும் சமுதாயமும்


எழுமீன்! எழுமீன்!...என்று இளைஞர்களை தட்டி எழுப்பினார் ஒரு மகான்।அவர்தான் விவேகானந்தர். சோம்பிக்கிடந்த இந்து சமயத்தை துக்கி நிறுத்திய தூன் அவர். சமுதாய கொடுமைக்கும் சமய இழிநிலைக்கும் எதிராக போர்க்கொடி துக்கியவர்। சமய சீர்த்திருத்தங்களையும் சமுக மாற்றங்களுக்கும் வித்திட்டவர்।துணிவான வீரர் அவர்.அவரை போன்று சமயத்தின் பெயரால் எற்படும் தீமைகளை தட்டி கேட்க உணர்வுள்ள இளைஞர்கள் முயற்வது பாரட்ட தக்கது... முட்டாள்தனமும், மூட பழக்கமும் சேர்ந்து இந்து மதத்தை இழி நிலைக்கு இட்டு சென்று விட்டன. ஞானிகளும், யோகிகளும். சித்தர்களும் பெரிய மகான்களும் போற்றிய தெய்வீக தத்துவ நெறிகளை விட்டு பாமரத்தனமான கொள்கைகளை நம் மக்கள் கடைப்பிடித்து போற்றுவது மிகவும் வெட்கக்கேடான விஷயம்தான்.

இருப்பினும் இவ்வரான மூடாத்தனத்தில் மூழ்கிக்கிடக்கும் நம்மின மக்களை மாண்புறும் பாதைக்கு வழி நடதுவது யார்? ஆயிரம் பெரியார் வந்தாலும் சீர்த்திருத்த முடியாத நம் சமுகத்தை? அடிப்படையில் நமது சமயத்தின் அஸ்திவாரமே ஆட்டம் கண்டிருப்பது என்பது மறுக்க முடியாத உண்மை। எல்லொராலும் ஏறிமிதிக்கபடும் இந்து சமயத்தின் நல்ல கருத்துக்கள் மறைக்கபட்டும் மறக்கபட்டும் விடுகின்றன। ஒரு சில ஒவ்வாத கருத்துக்கள் ம்ட்டும் எடுத்தாண்டு இந்து சமயமே அருகதை அற்ற சமயமாக பாரிமான வளர்ச்சியை காட்ட முற்படுகின்றனர்। ஒருவகையில் சரியான நல்ல ச்மய கருத்துக்கள் ஒரு சாரசரி இந்துவின் வாழ்க்கையில் நடைமுறையில் கடைபிடிக்கவில்லை।அல்லது சொல்லிதரவில்லை
பூசாரிகளுக்கு இறைவனை தொழுவது ஒரு தொழில்।தொண்டுள்ள்த்தோடு சமுதாய நோக்கோடும் யாரும் இறைவனை வணங்குவது கிடையாது,சமயம் ஒரு வியபார பொருளாகிவிட்டது.முன்பு போல் குரு குல கல்வியும் கிடையாது। வாழையாடி வாழையாக வந்த பன்பாடு கூறுகளை இழந்து விட்டோம்। நமக்கு உண்மைகளை யார்தான் செல்லி தர கூடும்?

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் சமயத் துறையில் வார்தெடுக்கப்பட்ட நல்லொழுக்கங்களும் நற்ச்சிந்தனைகளும் கால ஒட்டத்தில் காடசி விசப்பட்டன। ஒரு சில காரணங்களினால்.. மொழியை சீர்செய்வது போன்று சமயத்தை சீர்செய்ய முடியாதா? நல்ல சமய கருத்தும் நல்ல சமுக தெளிவும் கொண்ட ஒரு தனிமனிதனை அல்லது சமுகத்தை வழி நடத்த முடியாதா? நாம் குண்டுச்சட்டியில் குதிரை ஒட்டுபவர்கள்சுயநல விரும்பிகள் சமயம் சமுகம் என்று வரும் போது பொது நலத்தை விட தனி நலததை பெரிதாக போற்றுவோம். சமய சமுகத்தில் எற்படும் தீமைகளை தட்டி கேட்கமால் புரையேட விட்டுவிட்டொம். இன்று விருச்சமாய் வளந்து சமய சமுக சீர்கேடுகளுக்கு ஆணிவேராய் அமைந்து விட்டது.


கழிவுகளினால் மாசுறும் சில நதிகளை போன்று சில கேவலமான கருதுக்களினாலும் பாதகமான நிகழ்வுகளினாலும் இந்து சமயமும் பாழ்பட்டு இழிவுபட்டுள்ளன। நன்னிலத்தில் விளையும் பதர்களை களை எடுப்பது போன்று சாக்கடையாய் ஆகிவிட்ட சமயத்தை சுத்தம் செய்வது யார்?

ஒட்டு மொத்த சமய குறைக் கூறால்கள் நமது சமுதாயத்தை கடை நிலைக்கு இட்டு சென்றுள்ளன॥ சமுதாய இடரை களைய வந்த திராவிட கட்சிகளும் அவர்களின் கொள்கைகளும் அவர்களின் சினிமா தாக்கங்களும் இந்த தமிழ் சமுதாயத்தை சிரழித்ததுதானே மிச்சம் । தார்மீக கருத்துகளை அவர்களால் சொல்லமுடிய வில்லை ஏனெனில் அவர்களுக்கு ஆன்மிக பலம்மில்லை॥ நல்ல உள்ளம் கொண்ட பெரியார் போற்றுதலுக்குரிய தலைவர், அவர் போன்ற சமுக சீர்திருத்தவாதிகள் ஆன்மிக பலம் கொண்டு பாதகமான சமய கருத்துக்களை எதித்து போராடி இருத்தால் சமுகம் சிறப்புறுறிருக்கும்.

ஆன்மிக பலம் என்பது ஒரு மகத்தான சக்தி। அந்த சக்தியை தவறான பாதையில் இட்டு செல்லும் போது இந்த சமுதாயம் ஜீவ சக்தியை இழக்கும்।அதே சமயம் சாக்கடையாய் ஆக்கப்பட்ட இந்த சமய நதியை துய்மை படுத்தி அவ்வபோழுது கால ஒட்டத்தில் ஒதுங்கும் ஒவ்வாத கழிவுகளை அகற்றி வற்றாத கங்கை நதியாயை மாற்றினால் அர்ப்பரித்து வரும் கங்கை நதியின் சக்தியை போன்று நமது சமயமும் பெருக்கெடுத்
து ஒடும் ஜீவ சக்தியை பொங்கி எழச் செய்யும்। மன வளமும் இந்த தமிழ் சமுதாய நலமும் காக்கப்படும்.


மனமாற்றம் மனிதனுக்கு மட்டும் அல்ல மதத்திற்கும் சேர்த்துதான்.
.

இறைவன்


இறைவன்
எழுதிய கடிதம்
வானத்திற்கும் பூமிக்கும்

இறைவன்
அமைதியான போது
காற்று
தென்றலாய் மாறியது

மனிதனை பார்த்து
இறைவன்
ஆத்திர பட்ட போது
காற்று புயாலாய் மாறியது

இறைவன்
மனிதனை பார்த்து
பரிதாவ பட்ட போது
பனி மலை பூரித்தது


மனிதனை
இறைவன்
மூர்கமாய் நினைத்த போது
எரிமலை குழம்பாய் வெடித்ததுஇறைவன்
மனிதனை
ஆசையாய்
பார்த்த போது
நட்சத்திரம் மின்னியது

மனிதனை
இறைவன்
கோபக்கனலாய்
பார்த்தபோது
இடி மின்னாலாய்
முழங்கியதுஇறைமனம்
அமைதிக்கொண்டபோது
மனிதன் நிறைமனம் ஆனான்

மனித குறைமனம்
அமைதி கொள்ளாத போது
சோலை வனம்
பாலைவனம் ஆனாது

இறைவன்
மனிதனை பார்த்தபோது
அற்புதங்கள்
நிகழ்ந்தன
மனிதன்
இறைவனை பார்ந்தபோது
கற்ச்சிலைகள்
உருவாகின........

மன்னித்து விடு
இறைவா!
உன்னை
சிலை(சிறை) எடுத்தற்க்கு!

அன்புடன்
மனோகரன் கிருட்ணன்


July 3, 2009

“உயிர்த்தெழுவோம்”

“உயிர்த்தெழுவோம்” நிகழ்வு
July 03, 2009, 12:10 am மலேசியாஇன்று பிரிவு: செய்தி

“உயிர்த்தெழுவோம்” நிகழ்வு

“விடுதலையை வென்றெடுக்காமல் போனால் நாம் அடிமைகளாக வாழவேண்டும்.
தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழவேண்டும்.
பயந்து பயந்து பதற்றத்துடன் வாழவேண்டும்.
படிப்படியாக அழிந்துபோக வேண்டும்.
ஆகவே சுதந்திரத்திற்காகப் போராடுவதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை.”
தமிழீழத் தேசியத் தலைவர்
மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்

DEAR FRIENDS,
AN “UYIRTELUVOM” GATHERING WILL BE HELD IN HONOUR
OF THE TAMILEELAM FREEDOM FIGHTERS AND TO SUPPORT THE INTERNED TAMILS
ON 5TH JULAY 2009 AT 7.00 PM
AT GIRL GUIDES HALL, BRICKFIELDS, KUALA LUMPUR.
PLEASE INVITE ALL YOUR FRIENDS TO THE EVENT.அன்பிற்குறிய நண்பர்களே…
தமிழீழத்தில் தடுப்பு முகாம்களிலும், வதை முகாம்களிலும்
தினம்தோறும் அடிப்படை வசதிகளின்றி வாடிக் கொண்டிருக்கும்
ஈழத்தமிழ் மக்களின் உயிர் காக்கவும் அவர்களை மீட்டெடுத்து
மீள் குடியேற்றவும், ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய
உரிமையுடன் கூடிய தமிழீழத் தனியரசுக்கான இலட்சிய
வேட்கையை உலக சமூகத்துக்கு எடுத்துரைக்கவும் மலேசிய
தமிழ் மக்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தவும் வருகிற
ஞாயிற்றுக்கிழமை, 5 ஜுலை, 2009 இரவு மணி
7.00 தொடங்கி கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ்
சாரணியர் மண்டபத்தில் உயிர்த்தெழுவோம் நிகழ்வு
நடைப்பெறவுள்ளது. குடும்பத்தினரோடு திரளாக கலந்து
கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.மேலதிகத் தொடர்புகளுக்கு : 016-3262479 012-3142900 016-6031085