June 3, 2009

எங்கே போகிறது இந்த சமுதாயம்?



எங்கே போகிறது இந்த சமுதாயம்?








நாமும் நமது சமுதாயமும் எங்கோ போகிறோம்? இன்றைய தமிழ் நாளிதழில் கொலை கொள்ளை கற்பழிப்பு அடிதடி குண்டர் கும்பலின் அட்டகாசம் என்னும் செய்திதான் அன்றாட நிகழ்வாகி விட்டது.











நமக்குள் அடித்து கொள்வது,நமக்குள் குறிப்பறிப்பது, தமிழனை தமிழன் காட்டிகொடுப்பது.இன்னும் எஸ்ட்ரா எஸ்ட்ரா .நாமோ சிறிய இனம் நம் இனத்தையே வெட்டி சாய்ப்பதில் என்ன சுகமோ. இருக்கும் இன விகிதாசாரத்தை குறைப்பதிலே குறியாய் இருப்பதில் வல்லவர்கள் நம்மவார்கள்.
சிந்திப்பதே இல்லை நம் இன இளைஞர்கள்.பாருங்கள். மருத்துவமணையில் புகுந்து ஒருவனை தாக்கி இருக்கின்றனர். அபத்து அவசர வேலையில் மற்றவர்கள் மருத்துவமணையில் சென்று நோயாளியை பார்பதற்க்கு கூட முடியாது போல அல்லவா செய்துவிட்டார்கள் இது போன்ற சேட்டைகள் மற்றவர்களை பாதிக்கும் என்பது கூடவ தெரியாது? மிருகத்திற்கும் இவனுக்கும் என்ன வித்தியாசம்?








மற்றவர்கள் நம் இனத்தை இழிவாக பார்பதற்கு இவர்களும் ஒரு காரணம். நம்மை முரடர்களாக நினைப்பதற்கும் காட்டுமிராண்டி போல் நாகரிகம் அற்றவர்களாக சித்தரிப்பர்கும் யார் காரணம்?

ஒழுக்கம் என்ன விலை என்று கேட்பார்கள் போல் இருக்கிறது நேர்மை நாணயத்தை । நாங்கள் பார்த்ததே இல்லை என்பார்கள் கொலையும் கொள்ளையும் நாங்கள் விளையாடும் மைதானம் என்பார்கள். ஒரு சிலர் செய்யும் தவறுகள் ஒட்டு மொத்த தமிழ் இனத்தையே தலைக்குனிய வைக்கிறது.

மூடாதனம் மட்டும் அல்ல முட்டாள் தனமும் சேர்ந்து நம் இனத்தை போக்கட்டவர்களாக ஆக்கியிருப்பது தான் உன்மை.
Post a Comment