May 26, 2009

அற்றம் காக்கும் அறிவு

தமிழர்கள் 15-ஆம் நூற்றண்டிலிருந்து அடிமை வாழ்வு வாழ்கின்றோம்।18-ஆம் நூற்றண்டில் கூலி என்ற சொற்ப்பதத்துடன் அடிமை வாழ்வு வாழ்ந்திருறோம்.19-ஆம் நூற்றண்டில் அகதிகள் என்ற சொல்லுடன் சொந்த நாட்டிலிருந்து துரத்தப்பட்டும் தங்கள் தாய் திருநாட்டில் அடிமையாய் அல்லல் படுகிறோம்.கொல்லபடுகிறோம்.

1.முதலில் விஜயா நகர பேராரசிடம் விழ்ந்தோம்
2 நமக்குள் அடித்து கொண்டு முகமதியாரிடம் சரனடைந்தோம்
3 மராட்டியரிடமும் நாயக்கரிடமும் நமது உரிமையை பறிகொடுத்தோம்
4 பிறகு வந்த மேலை நாட்டவனிடம் நமது மானம் மரியாதை இழந்து அடிமையாய் உழைத்து உழைத்து ஒடயை போனது தன் மிச்சம்.
5 இப்பொழுது இந்தி லாலாக்கலிடம் சிங்களவனிடமும் நமது சுகந்திரத்தை இழந்து அடிமை வாழ்வு வாழ்கிறோம்।

தனக்கேன நாடில்லாமால் மொழி பன்பாட்டு கூறுகளை தமிழன் சிறுக சிறுக தனது தனித் தன்மையை இழந்து மற்றவர்களின் அடிவருடியாய் வாழும் வாழ்க்கையை என்ன வென்பது?


உலகின் பல இனங்கள் சுகந்திர காற்றை இன்றைக்கு வரைக்கும் கட்டி காத்து நிற்கின்றன। பல இனங்கள் சுகந்திரத்திற்க்கு போரடி வென்று இன்று பெரும் வல்லராசாக உலகில் வளம் வருகின்றன. சில நாடுகள் போரிலே தோல்வி அடைந்தாலும் வெகு சீக்கிரத்திலே தனது சுகந்திரத்தை மீட்டெடுத்திருக்கின்றன.நாம் மட்டும் மீண்டும் மீண்டும் அடிமை நரகத்திலே விழ்ந்து சுகந்திரதை வென்று எடுக்க முடியாமால் போவதென்?

“அற்றம் காக்கும் அறிவு” என்றார் வள்ளுவ பெரும்தகை. நமக்கென்ன அறிவில்லைய? அல்லது சிந்திக்கும் தன்மைதான் இல்லையா?
அறிவு கெட்ட மண்டுகங்கள தமிழன்? நாம் அறிவில் சிறந்தவர்களாயிற்றே பிறகு எப்படி மற்றவன் நம்மை ஏன் சிதற அடிக்கின்றன்?।நமது சுகந்திரத்தை எப்படி காக்க தவறினோம்?

சுயநலமா? நமக்குள் அடித்து கொள்ளும் குனமா? அல்லது நமக்குள் காட்டி கொடுக்கும் நல்ல மனச?

“தமிழர் என்றெரு இனமுண்டு – தனியே அவனுக்கு குனம் உண்டு’ என்று நாமக்கல் கவிஞர் பாடினார்। உன்மைதான் போலும்। முரன்பாடுகளின் மொந்த உருவம் தமிழன் தான் அதனால்தான் அடிமைதானத்தில் சுகம் கண்டு வாய் இருத்தும் பேச முடியாமல்,கண்னிருந்தும் பார்க முடியாமல் கையிருந்தும் உதவ முடியாமல் பக்கத்தில் சாகும் தன் இனம் செத்துகொண்டிருத்தாலும் குடியும் கூத்து கொண்டட்டமாய் இருக்கும் தமிழக தமிழனை என்னவென்பென்?,சுய நலம் தானே இங்கு அனைவருக்கும் பெரும்நலமாய் இருகிறது.

மிகவும் கொடுரமான யுத்தத்தை சிறி லங்கா முன் எடுத்து பல இலச்சம் தமிழ் மக்களை அழித்தும் இந்தியா அதற்கு அதரவு நல்கி தமிழர்களை கொல்வதற்கு முட்டு கொடுத்து இன அழிப்பு கொடுமைகளை செய்த சிறி லங்காவிற்கு செய்த கொலைகளை மறைப்பதற்கு உதவி புரியும் இந்தியா தமிழன் ஒரு பொருட்டே அல்ல அவன் எங்கள் அடிமை என்று சொல்லமால் சொல்லும் துனிவு யார் கொடுத்தார்கள்?அடிமை தமிழன் தானே?
நான் கேட்க்கிறேன்

1.தமிழக தமிழர்கள் இந்தியாவின் அடிமையா?
2.ஏன் தமிழர் நலன்களை இந்தியா வேர் அறுக்கிறது?
3 தமிழன் என்ன இந்தியாவின் விரோதியா?
4.எதிரிக்கு எதிரி நன்பன் என்பதை போல் நம் இன எதிரி சிங்களவனுக்கு இந்தியா ஏன் உதவுகிறது? நமக்கு இந்தியா எதிரியா?
தமிழன் யார் என்ற சுய விமர்ச்சனத்தை ஆராய்ந்து உங்களால் எடுத்து உரைக்கமுடியுமா?

நம்மை ஒரு பொருட்டல்ல என்று நினைக்கும் இந்தியாவை எதிர்ப்பது எப்படி என்று சிந்திக்க வேண்டிய தருணம் வந்து விட்டது?
அடுத்த நூற்றண்டில்லாவது சுகந்திர தனித் தமிழ் நாடு மலருமா? தமிழர் அடிமை விலங்கு உடையுமா?
Post a Comment