May 19, 2009

இன துரோகியால் விழ்ந்தது தமிழ் இனம்



வீழ்ந்தது நிலம் அல்ல .....மானம்




ன்னவென்று சொல்வேன் அந்தோ! பரிதாபம்। தலைமுறை கோடி கண்ட தமிழினம் தலைகுனிந்து நிற்கிறது। முப்பத்தி ஏழு ஆணடுகளுக்கும் மேலாக தமிழீழ மக்களின் உரிமைக்காக போரடிய எழுச்சிமிக்க மாவீரன் விழ்ந்தான் என்னும் செய்தி உண்மையாக இருக்க கூடாது என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்।






நம் தமிழர்களை என்ன வென்பது ஒரு மாவீரனை துரோகதனத்தால் வீழ்திவிட்டார்கள்। தமிழனை நம்பினால் துரோகம் தான் சன்மானம் என்று சரித்திரத்தில் எழுதிவிட்டார்கள்। கட்டபொம்மான் காலத்தில் ஒரு எட்டப்பன்। ஆனால் இன்று பிரபாகரன் காலத்திலே இரட்டை வடுகபூபதிகள்। ஒன்று கருனா & கருனா (சதி )ஒருவன் முதுகில் குத்தினான் மற்றோருவன் நாடகம் ஆடுகிறான். தமிழர்கள் ஒன்று பட்டு வாழ்ந்ததாக வரலாறு இல்லை ஜாதியால் பிரிந்தோம் ।மதத்தால் பிரிந்தோம் மொழியால் கூட நம் பிரிந்துதான் இருக்கிறோம்। வட்டர ரீதியில் கூட இவன் வேறு அவன் வேறு என்று பிரிந்துதானே வாழ்ந்து வருகிறோம்। பிறகு நமக்குள் எப்படி ஒற்றுமை வரும்। எப்படி ஒன்றுபட்ட சக்தியாய் நமது எதிரியை எதிர்த்து நிற்போம்?






வஞ்ஞிக்கப்பட்ட தமிழ் இனத்திற்க்காக போரடி களம் பல கண்ட அந்த போரட்ட சக்தியை எதிரி விழ்தினான் என்பதைவிட நமது முட்டாள் தனத்தால் விழ வைத்ததோம் என்பது சால பொருந்தும் நமது சக்தி ஒருங்கிணைக்கப்படாத வரைக்கும் நாம் பலவினம் பட்டுதான் இருப்போம்।



புற நானுற்றுத் தமிழன் மாவீரன் பிரபாகரன் வீழ்தாலும் ஒவ்வொருத் தமிழர் உள்ளத்திலும் என்றும் வீற்றிப்பான்। என்ன இங்கு மனதுக்கு கஷ்ட்டமாக இருகிறது என்றால் தமிழ் இன துரோகிகள் சிலரால் தமிழர் மானம் மரியாதையும் இங்கு விலை பேசப்பட்டிருக்கிறது ।






கலங்கும் நெஞ்சம்



மனோகரன் கிருட்ணன்.



Post a Comment