May 30, 2009இடிந்த வீடுகள்

ஒடிந்த தீக்குச்சிக்ள்


ஓணாய் ஒலங்கள்

மனித அவலங்கள்மரண கிடங்கில்

மனித சந்தோசம்


விழிக்கிற்றின் சாரளாங்களில்

மனித நேயத்தின் விழுப்புன்கள்


பல் விழுந்த கிழவியின்

பார்வையின் அகோரங்கள்

இழவு வீட்டின்

ஒப்பாரிகள்கற்பிழந்த இழந்த

காமனின் பார்வையில்

மனிதததன்மையின்

விதவைக்கோலங்கள்


வெற்றிலை பாக்கின்

எச்சங்கள்

எங்களின் கனத

இதயததில் விழும்

நெருப்பு துண்டங்கள்.............


ஒடிவராமல் ஒட்டு போட்ட

எங்கள் உறவுக்ளின்

உண்ர்வுகளுக்கு வேட்டு வைத்த

ஒற்றுமை பந்தல்


ஒடிந்து போன கண்ணாடி

துண்டு

உருவத்தை காட்ட மறுக்கின்றன


முடிந்து போன இரவுகள்

எங்கள் மரணத்தை பற்றி

கவலை படுவதில்லை...
அன்பு சாசனத்தில்

இரத்த காட்டேறியின்

கை எழுத்து.....


விழ்ந்தது

இந்த உலகம்

இராவணின் கையில்.....


ஏய்॥

கேடுகெட்ட மனித....

இதற்கு என்ன

சொல்ல போகிறாய்.....


அன்பை போதி

அகிம்சையை போற்று

ஒரு கன்னததை காட்டினால்

மறு கன்னதை காட்டு॥

தன் உயிரை போல்

மன்னூயுரை நேசி...


பாழாய் போன

பழகி போன

இந்த

வார்த்தைகளுக்கு

மறு விசாரனை

தேவை....


மனித நேய அகரதியில்..........


( பி।கு ஈலத்தின் அவலத்தை சில வரிகளில் சொல்ல விழைகினறேன்। தமிழனின் உயிரை காக்க தவறிய சில ந்ல்ல உள்ளங்களுக்கு நன்றி நன்றி நன்றி........அவர்கள் நாய்யாய் பிற்க்க கடவுது)


May 26, 2009

அற்றம் காக்கும் அறிவு

தமிழர்கள் 15-ஆம் நூற்றண்டிலிருந்து அடிமை வாழ்வு வாழ்கின்றோம்।18-ஆம் நூற்றண்டில் கூலி என்ற சொற்ப்பதத்துடன் அடிமை வாழ்வு வாழ்ந்திருறோம்.19-ஆம் நூற்றண்டில் அகதிகள் என்ற சொல்லுடன் சொந்த நாட்டிலிருந்து துரத்தப்பட்டும் தங்கள் தாய் திருநாட்டில் அடிமையாய் அல்லல் படுகிறோம்.கொல்லபடுகிறோம்.

1.முதலில் விஜயா நகர பேராரசிடம் விழ்ந்தோம்
2 நமக்குள் அடித்து கொண்டு முகமதியாரிடம் சரனடைந்தோம்
3 மராட்டியரிடமும் நாயக்கரிடமும் நமது உரிமையை பறிகொடுத்தோம்
4 பிறகு வந்த மேலை நாட்டவனிடம் நமது மானம் மரியாதை இழந்து அடிமையாய் உழைத்து உழைத்து ஒடயை போனது தன் மிச்சம்.
5 இப்பொழுது இந்தி லாலாக்கலிடம் சிங்களவனிடமும் நமது சுகந்திரத்தை இழந்து அடிமை வாழ்வு வாழ்கிறோம்।

தனக்கேன நாடில்லாமால் மொழி பன்பாட்டு கூறுகளை தமிழன் சிறுக சிறுக தனது தனித் தன்மையை இழந்து மற்றவர்களின் அடிவருடியாய் வாழும் வாழ்க்கையை என்ன வென்பது?


உலகின் பல இனங்கள் சுகந்திர காற்றை இன்றைக்கு வரைக்கும் கட்டி காத்து நிற்கின்றன। பல இனங்கள் சுகந்திரத்திற்க்கு போரடி வென்று இன்று பெரும் வல்லராசாக உலகில் வளம் வருகின்றன. சில நாடுகள் போரிலே தோல்வி அடைந்தாலும் வெகு சீக்கிரத்திலே தனது சுகந்திரத்தை மீட்டெடுத்திருக்கின்றன.நாம் மட்டும் மீண்டும் மீண்டும் அடிமை நரகத்திலே விழ்ந்து சுகந்திரதை வென்று எடுக்க முடியாமால் போவதென்?

“அற்றம் காக்கும் அறிவு” என்றார் வள்ளுவ பெரும்தகை. நமக்கென்ன அறிவில்லைய? அல்லது சிந்திக்கும் தன்மைதான் இல்லையா?
அறிவு கெட்ட மண்டுகங்கள தமிழன்? நாம் அறிவில் சிறந்தவர்களாயிற்றே பிறகு எப்படி மற்றவன் நம்மை ஏன் சிதற அடிக்கின்றன்?।நமது சுகந்திரத்தை எப்படி காக்க தவறினோம்?

சுயநலமா? நமக்குள் அடித்து கொள்ளும் குனமா? அல்லது நமக்குள் காட்டி கொடுக்கும் நல்ல மனச?

“தமிழர் என்றெரு இனமுண்டு – தனியே அவனுக்கு குனம் உண்டு’ என்று நாமக்கல் கவிஞர் பாடினார்। உன்மைதான் போலும்। முரன்பாடுகளின் மொந்த உருவம் தமிழன் தான் அதனால்தான் அடிமைதானத்தில் சுகம் கண்டு வாய் இருத்தும் பேச முடியாமல்,கண்னிருந்தும் பார்க முடியாமல் கையிருந்தும் உதவ முடியாமல் பக்கத்தில் சாகும் தன் இனம் செத்துகொண்டிருத்தாலும் குடியும் கூத்து கொண்டட்டமாய் இருக்கும் தமிழக தமிழனை என்னவென்பென்?,சுய நலம் தானே இங்கு அனைவருக்கும் பெரும்நலமாய் இருகிறது.

மிகவும் கொடுரமான யுத்தத்தை சிறி லங்கா முன் எடுத்து பல இலச்சம் தமிழ் மக்களை அழித்தும் இந்தியா அதற்கு அதரவு நல்கி தமிழர்களை கொல்வதற்கு முட்டு கொடுத்து இன அழிப்பு கொடுமைகளை செய்த சிறி லங்காவிற்கு செய்த கொலைகளை மறைப்பதற்கு உதவி புரியும் இந்தியா தமிழன் ஒரு பொருட்டே அல்ல அவன் எங்கள் அடிமை என்று சொல்லமால் சொல்லும் துனிவு யார் கொடுத்தார்கள்?அடிமை தமிழன் தானே?
நான் கேட்க்கிறேன்

1.தமிழக தமிழர்கள் இந்தியாவின் அடிமையா?
2.ஏன் தமிழர் நலன்களை இந்தியா வேர் அறுக்கிறது?
3 தமிழன் என்ன இந்தியாவின் விரோதியா?
4.எதிரிக்கு எதிரி நன்பன் என்பதை போல் நம் இன எதிரி சிங்களவனுக்கு இந்தியா ஏன் உதவுகிறது? நமக்கு இந்தியா எதிரியா?
தமிழன் யார் என்ற சுய விமர்ச்சனத்தை ஆராய்ந்து உங்களால் எடுத்து உரைக்கமுடியுமா?

நம்மை ஒரு பொருட்டல்ல என்று நினைக்கும் இந்தியாவை எதிர்ப்பது எப்படி என்று சிந்திக்க வேண்டிய தருணம் வந்து விட்டது?
அடுத்த நூற்றண்டில்லாவது சுகந்திர தனித் தமிழ் நாடு மலருமா? தமிழர் அடிமை விலங்கு உடையுமா?

May 21, 2009

தமிழன் உயர்வான் ....தமிழ் பகையாளன் தானே சாவான்.

எங்கள்
விழிகளில்
விழும் கன்ணீர் துளிகள்
இது........

எங்களின்
நெடுநாள் போராட்டம்
இது.....

எததனை உயிர்களை
பலி எடுத்துதிருக்கிறது
எத்தனை சோகங்கள்

எங்கும்
அழுக்குரல்கள்
எங்கும்
பேரவலம்

பிணங்களுடன்
வாழும்
எங்களுக்கு
இந்த
மனித பேய்களை
கண்டவுடன்
உலகம் இருண்டு விட்டது

கேடுகெட்ட
இந்த உலகம்
எங்களை
கேட்பார் அற்ற
அனாதைகளாக்கி
விட்டது

ஊமை ஜ்னங்களின்
மத்தியில்
உன்மைகள்
மறைக்க பட்டன

குடிதனம்
நடத்தியதை
விட
குண்டு மழையில்
வாழ்ந்தது அதிகம்

நாங்கள் நாட்டில்
வாழ்ந்ததை விட
காட்டில்
வாழ்ந்தது
அதிகம்
ராமனை போல.......

ராமனின் கோலம்
உலகம் அறிந்தது....

எங்களின் சோகம்
உலகம் மறந்தது ஏனோ?

வெரும்
வேசங்களின்
மத்தியில்
நேசங்களை
தேடுகிறோம்।

புலியாய்
பிறந்த எங்கள்
இனத்தில்
நரி குட்டிகள்
எப்படி வந்தான?

புற நானுற்றை
பேசும்
எங்கள்
இனத்தில்
பால் புட்டில்களை
ஏந்தும்
பூனைக் குட்டிகள்
எப்படி வந்தான?

எங்கள் ஒலங்கள்
ஏன்
யார் காதிலும்
விழவில்லை?

நிறம் பார்க்கும்
மனித
மரங்களின்
மத்தியில்
எங்கள்
உதிரம்
என்ன
கருப்பா?.......

மரண்
ஒலங்களில் கூட்
இது
தமிழனின்
ஒலம்
என்று
ஒதுக்க பட்டதென்?

அன்புடன்
மனோகரன் கிருஸ்ண்ன.

May 19, 2009

இன துரோகியால் விழ்ந்தது தமிழ் இனம்வீழ்ந்தது நிலம் அல்ல .....மானம்
ன்னவென்று சொல்வேன் அந்தோ! பரிதாபம்। தலைமுறை கோடி கண்ட தமிழினம் தலைகுனிந்து நிற்கிறது। முப்பத்தி ஏழு ஆணடுகளுக்கும் மேலாக தமிழீழ மக்களின் உரிமைக்காக போரடிய எழுச்சிமிக்க மாவீரன் விழ்ந்தான் என்னும் செய்தி உண்மையாக இருக்க கூடாது என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்।


நம் தமிழர்களை என்ன வென்பது ஒரு மாவீரனை துரோகதனத்தால் வீழ்திவிட்டார்கள்। தமிழனை நம்பினால் துரோகம் தான் சன்மானம் என்று சரித்திரத்தில் எழுதிவிட்டார்கள்। கட்டபொம்மான் காலத்தில் ஒரு எட்டப்பன்। ஆனால் இன்று பிரபாகரன் காலத்திலே இரட்டை வடுகபூபதிகள்। ஒன்று கருனா & கருனா (சதி )ஒருவன் முதுகில் குத்தினான் மற்றோருவன் நாடகம் ஆடுகிறான். தமிழர்கள் ஒன்று பட்டு வாழ்ந்ததாக வரலாறு இல்லை ஜாதியால் பிரிந்தோம் ।மதத்தால் பிரிந்தோம் மொழியால் கூட நம் பிரிந்துதான் இருக்கிறோம்। வட்டர ரீதியில் கூட இவன் வேறு அவன் வேறு என்று பிரிந்துதானே வாழ்ந்து வருகிறோம்। பிறகு நமக்குள் எப்படி ஒற்றுமை வரும்। எப்படி ஒன்றுபட்ட சக்தியாய் நமது எதிரியை எதிர்த்து நிற்போம்?


வஞ்ஞிக்கப்பட்ட தமிழ் இனத்திற்க்காக போரடி களம் பல கண்ட அந்த போரட்ட சக்தியை எதிரி விழ்தினான் என்பதைவிட நமது முட்டாள் தனத்தால் விழ வைத்ததோம் என்பது சால பொருந்தும் நமது சக்தி ஒருங்கிணைக்கப்படாத வரைக்கும் நாம் பலவினம் பட்டுதான் இருப்போம்।புற நானுற்றுத் தமிழன் மாவீரன் பிரபாகரன் வீழ்தாலும் ஒவ்வொருத் தமிழர் உள்ளத்திலும் என்றும் வீற்றிப்பான்। என்ன இங்கு மனதுக்கு கஷ்ட்டமாக இருகிறது என்றால் தமிழ் இன துரோகிகள் சிலரால் தமிழர் மானம் மரியாதையும் இங்கு விலை பேசப்பட்டிருக்கிறது ।


கலங்கும் நெஞ்சம்மனோகரன் கிருட்ணன்.May 10, 2009

அன்புத்தாய்க்கு

அன்புத்தாய்
நாக அம்மாள்
அவர்களுக்கு
அன்னையர் தின
காணிக்கை
கருனைகோர் ஆலயம் -
உந்தன்

உள்ளம் அம்மா

கருவரையிலிருந்து

கல்லரை வரைக்கும்

உந்தன் பாசம் போகுமா?

சிலுவையை

நாங்கள் சுமக்கவில்லை

நீதான்

எங்கள்

பாசங்களை சுமந்தாய்!

உன்ந்தன் தாய்மைக்கு

எது ஈடு?

உறவென்னும்

உற்ற ஜோதி ஏற்றி வைத்தாய்

இரவு பகல் பாராமால்

எங்கள் உயிரை காத்து நின்றாய்

அன்னையே!

அன்புத்தாயே!

உன்ந்தன்

உதிரம் தான்

எங்கள்

உறவு


இதோ....


உனக்காக

ஆயிரம் உறவுகள்

உள்ளன்போடு

உறவாடும்

உன்ந்தன்

தாய்மை அன்புக்காக.......

அன்புடன்
மனோகரன்

May 8, 2009

மதி கெட்டத்தாடா ஈனத்தமிழனுக்கு.....

மதி கெட்டதாடா ஈனத்தமிழனுக்கு!...........
உன்னை தூற்றுவதற்கு கூட மனம் வரவில்லையாடா ஈனத்தமிழனே!

ங்கத்தமிழ் தந்த தங்க தமிழனின் உரை..............இதோ!

மகிழ்ச்சிக்கு காரணம் நான் உன்னோடு இல்லாவிட்டாலும், நான் இருப்பதை போல எண்ணிக்கொண்டு நீ பணியாற்றுவாய் என்பது எனக்கு நன்றாக தெரியும்.
இருப்பது ஒரு உயிர், அது போகப்போவது ஒரு முறை.(பின் குறிப்பு:..இலச்சகணக்கான ஈழந்தமிழனின் உயிரை வாங்கி விட்டாய்யே..)

ஆனால் அது நல்ல காரியத்திற்காக போகட்டுமே என்ற அண்ணாவின் பொன்மொழியை இருதயத்திலே தாங்கி இத்தனையாண்டு காலமாக இளமை முதல் பணியாற்றி வருகின்றவன் நான்.தேர்தல் நெருங்கி விட்டது, தேர்தல் பணிகளில் நம்முடைய திராவிட முன்னேற்றக்கழக தோழர்களும், காங்கிரஸ் நண்பர்களும், அதே போல விடுதலை சிறுத்தைகளும் அயர்வின்றி ஆங்காங்கே, பம்பரம்போல் சுழன்று பணியாற்றி கொண்டிருக்கிறார்கள்.

நாம் இலங்கையில் வாழ்கின்ற தமிழர்களுக்கு ஓரளவு நிம்மதியை அளித்திருக்கின்றோம். அடுத்து அவர்கள் பெறவேண்டிய ஈழத்தையும் பெற்று தருவதற்கு நம்மாலான முயற்சிகளை செய்ய இந்த பணியை நான் ஏற்றுக் கொண்டிருக்கின்றேன்.
( பின் குறிப்பு...ஒரேடியான நிம்மதி புதைகுழியில், )
என்னை நம்பு! என்னை மறவாதே! நான் உன்னோடு என்றைக்கும் இருக்கின்றவன்! எங்களுக்காக நீ!
பின் குறிப்பு...(ஒட்டுக்கு மட்டும் நீ).....கருணாநிதி.

ன மானம் வென்றது என்று உலகத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் !இலங்கையில் தமிழர்கள் செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள். இங்கு தமிழ்நாட்டில் .இழவு வீட்டில் காங்கிரஸ்காரர்கள் வெட்கமில்லாமல் வாக்குக் கேட்கிறார்கள் 6 மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் போரை நிறுத்தியிருந்தால் ஒரு லட்சம் தமிழர்கள் இன்று உயிரோடு இருந்திருப்பார்கள் என்று கூறினார்.!..........சீமான்.

மனம் கவரும் மணல் சித்திரங்கள் பாடினால்...........


யாருக்காக.... யாருக்காக....

இந்த மாளிகை

வசந்த மாளிகை

காதல் ஓவியம்

கலைந்த மாளிகை.
வாழ்க்கையின் பாடம்
ஊரிடும் ஓடம்
ஓடும் சிங்காரம்
கார்கால நேரம்அம்மாவும் நீயே
அப்பாவும் நீயே
அன்புடனெ ஆதரிக்கும்
தெய்வமும் நீயே

ஆடாத ஆட்டம் எல்லாம்
போட்டவுங்க மண்ணுக்குள்ளே
போன கதை
உனக்கு தெரியுமா?
ராசாவே ......
உன்னை விட மாட்டேன்
என்ன ஆனாலும்
வெட்கம் விட மாட்டேன்அன்பே என் அன்பே
உன் விழி பார்க்க
எத்தனை நாளாய்
தவித்தேனேஎன்கிட்டே மோதாதே
நான் ராஜாதி ராஜனட
வம்புக்கு இலுக்காதே
நான் சூராதி சூரனடா

வாராய் நீ வாராய்
போகும் இடம் வெகு தூரமில்லை நீ வாராய்.வானெத்த பார்த்தேன்
பூமிய பார்தேன்
மனுசன இங்கு
காணலயே
பூ பூவை பறந்து போகும் பட்டு பூச்சி அக்கா
நீ பளபளன்னு போட்டிருப்பது
யாரு கொடுத்த சொக்கா.


May 6, 2009

அதியுயர் வானளாவிகளின் வின்னை முட்டும் சித்திரங்கள்

பூர்ஜ் அல் அராபின் உலங்குவானூர்தி இறங்குதளத்தில் டென்னிஸ் விளையாட்டு

பூர்ஜ் அல் அராப் என்பது ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ஒரு ஆடம்பர விடுதி (luxury hotel). 321 மீட்டர் (1053 அடி) உயரமுள்ள இக் கட்டிடம், விடுதியாக மட்டுமே பயன்படுத்தப்படுகின்ற கட்டிடங்களில் உலகிலேயே மிகவும் உயரமான கட்டிடமாகும். கடற்கரையிலிருந்து 280 மீட்டர் தொலைவில், பாரசீக வளைகுடாவில் அமைக்கப்பட்ட செயற்கைத் தீவொன்றில் இக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இவ்விடுதிக்குச் செல்வதற்கெனவே கட்டப்பட்ட பாலம் ஒன்று இத் தீவைத் தலைநிலத்துடன் இணைக்கின்றது. துபாய் நகரத்தின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக உலக அளவில் அறியப்பட்ட கட்டிடமாக இது திகழ்கின்றது.இக்கட்டிடத்தின் கட்டுமான வேலை 1994 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 1999 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இக்கட்டிடம், ஒருவகை அராபியப் பாய்க்கப்பல் ஒன்றின் பாய்மரத்தை ஒத்திருக்கும் வகையில் வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ளது.
பூர்ஜ் அல் அராப் விடுதி, இன்று துபாய் நகரத்தின் ஒரு கட்டிடக்கலைச் சின்னமாகத் திகழ்கின்றது


May 5, 2009

வாழ்க்கை ஒரு பார்வைவாழ்க்கையைப்பற்றி உலக விமர்ச்சனத்தை அறிவது என்பது சவையான சுகம்தான். இதை படித்து பாருங்கள். படித பின் நீங்கள் எந்த ரகம் என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.
பணக்காரன் "பணம்தான் வாழ்க்கை" என்பான்.


ஏழை "வாழ்க்கை ஒரு போரட்டம்" என்பான்.


சோம்பேறி"அது ஒரு பூந்தோட்டம்" என்பான்.


அறிவாளி "சவால்கள் நிறைந்த பாதை" என்பான்.


காதலன் "காதல்தான் வாழ்க்கை" என்பான்.


துறவி"கடவுளை அடையும் வழி" என்பான்.


இலச்சியவாதி "கனவுதான் வாழ்க்கை" என்பான்.


அவசரக்காரன் "வாழ்க்கை வெறும் போர்" என்பான்.


தங்களுக்கு எப்படியோ இந்த வாழ்க்கை?..................
.........இந்த உலகம் சாரமற்றது. வாலிபமோ,


மலைய்ருவின் வேகத்துக்கு ஒப்பானது.


வாழ்க்கையோ புல்லை பிடித்த


நெருப்புக்கு சமமானது.
வாழ்க்கை!


மாலையும் இரவும் சந்திக்கும் வேளையில்


பிறந்து மயங்கும் ஒரு மாய


அழகுத் தோற்றம்.
வாழ்க்கை தத்துவங்கள்!


தொடும் வானத்திலே ..ஒரு


நெடுங்க்கோனத்திலே


வரும் வானவில்லிலே


நமக்கு தெரிந்தும்


தெரியாமல் மறைந்தும்


சிரிக்கின்ற பேரழகு......
வண்ணங்கள்! ....அது


தங்களின் எண்ணங்கள்.........
இப்படிக்கு


யாரோ................