Sunday, December 6, 2009

உண்மைகள்



உண்மைகள்
புதைகின்ற போது
எனது
உள்ளமும் உடைகின்றன
வலிகளின் வேதணை
விழிகளின் வழியில்
வினோதமாய்
விம்மி அழுகின்றன

இருளிலே
மறைந்தும் மறையாமல்
தெரியும்
உள்முக கண்ணாடி
பிம்மத்தின்
உணர்ச்சி வேகத்தில்
போக்கற்றுப் போனது
நிஜங்களின் விழிகள்

என்றாவது ஒரு நாள்
உண்மைகளின் உரு
நிஜத்தின் கருக்களாய்
நிழல்களின் விளிம்பில்
ஒளிரச் செயும்

அப்பொழுது
புதைந்து போன
வேசங்கள்
தோண்டி எடுக்கப்படும்
இறந்துப் போன
நிஜங்கள்
பூமியின் பிம்மத்தில்
விரிச்சமாய் விரிந்து நிற்கும்
மனோவியம்
@மனோகரன் கிருடணன்.

Friday, December 4, 2009

எங்கள் ஈழத்து உறவுகள்



விழி ஒரத்தில்
வழிந்தோடும் நினைவலைகள்
கால வெள்ளத்தில்
கரைந்து போன
மண் சட்டிகளாயின

சிறகு முளைத்த
என் மன எண்ணங்கள்
சிறக்கடிக்க மறுகின்றன.
வெறுமைகளை சுமக்கவும் மறுக்கின்றன

உணர்ச்சி பிம்மமாய்
என் நெஞ்சம்
ஓங்கார குகையின்
ஓசையின் வெளிபாடு
என் மன எரிமைலையாய்
கனந்துக் கொண்டிருக்கிறது

உணர்வுகளின் வீக்கத்தில்
என் நாடி நரம்புகள்
ஏனோ வீர்விட்டுக் கிடக்கிறது

மலுங்கி மக்கையாகி போன
எங்கள் உறவுகள்
பிண கட்டையாய்
நடைப் பயில்கின்றன

பிண வாடை
உடல் எங்கும் வீசுகின்றன
மனிதம் என்னும்
வார்த்தை மட்டும்
இங்கு
தொலைந்து போனது ஏன்?

Wednesday, December 2, 2009

தமிழ் இலக்கியத்திற்கு இங்கு என்ன கைவிலங்கா?


‘சாவிலும் தமிழ் படித்தே சாக வேண்டும்

சாம்பலும் தமிழ் மணந்தே போக வேண்டும்” --

என்ற ஒரு சாகா கவிதை வரி உண்டு।


தமிழனின் தமிழ் உணர்வுக்கும் தாய் மொழிப் பற்றுக்கும் ஒரு சிறந்த உதாரணம்। தமிழுக்கு அமுதென்று பேர் ॥ அந்த தமிழ் எங்கள் உயிறுக்கு நிகர் பாவேந்தர் பாரதி தாசனின் உணச்சிக்கவிதையும் உண்டு..தமிழர்களுக்கு தமிழ் உயிரைப் போன்றது. உன்னதமானதும். நீண்ட இலக்கிய மரபைக் கொண்டதும் தமிழ் மொழி.


“தமிழை பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன்” என்ற பழம் மொழி தமிழர் வாழ்வியலில் சார்வசாதரணமாக காணலாம்। தமிழை தடுப்பது, தடைச்செய்வதும் தமிழரை அழைக்கும் போர்க்குரல் போன்றது। தமிழையும் தமிழனையும் பழித்த காரணத்தால் சேரன் செங்குட்டுவன் வடவரை வென்றான் என்னும் சரித்திர குறிப்பு இருக்கிறது.


ஆனால் மலேசிய நாட்டில் தமிழுக்காக காலம் காலமாக நாம் போராடிக் கொண்டு இருப்பது ஒரு வழமையான நிகழ்வாகி விட்டது। தமிழ்வேள் கோ சாரங்கபாணி ‘தமிழ் எங்கள் உயிர்” என்று போராடினார்கள். எந்த நாடாக இருந்தால் என்ன, தமிழனம் அங்கே முன்னேற வேண்டும். அங்கே தமிழ் மொழி மேம்பட வேண்டும். தமிழ் மொழிக்கு மதிப்பு ஏற்படுத்த வேண்டும். இப்படி போராடி போராடி தமிழை நிலைநிறுத்துவது என்பது தமிழுக்கு ஒரு போராட்ட களமாகிவிட்டது.


தேர்தலில் பலத்த அடிவாங்கிய அவர்கள் திட்டம் தீட்டி ஒரு செயல் முறையை வகுத்து தமிழர்களை பழிவாங்ப் பார்க்கின்றனர்। சில மாதங்களுக்கு முன் மலாயா பல்கலைகழகத்தில் தமிழை எடுக்க பார்த்தனர்.இப்பொழுது ஒட்டு மொத்த தாய் மொழிக் கல்வியான தமிழ் இலக்கியத்தின் அடிமடியில் கைவைக்கின்றனர். ஏன் இந்த கயமை இவர்களுக்கு?


மலேசிய சட்டத்தில் தாய் மொழி கல்விக்கு இடம் உண்டு. பின் ஏன இவர்கள் பின்புற வாசல் வழியாக வந்து நமது தமிழ் மொழியை அழிக்கப் பார்கின்றனர்?


இவர்களின் கூப்பாடு எல்லாம் “1 மலேசியா” என்பது। ஆனால் செயல் பாடு எப்பொழுது மற்றவர்களை பிரித்து பார்ப்பதுதான். “எஸ்பிஎம் 10 பாடங்கள் தான், முடிவில் மாற்றம் இல்லை” கல்வித் தலைமை இயக்குநர் திட்டவட்டம்”என்ற அறிக்கை மக்கள் ஓசையில் வெளிவந்தது. என்ன இருமார்ப்பு. தமிழர்கள் என்றால் இவர்களுக்கு கிள்ளுக் கீரை என்ற நினைப்பா? தமிழர்களுக்கு மறதி அதிகம். நேற்று அவர்களுக்கு இழைத்த துரோகத்தை இன்று மறந்து விடுவார்கள் என்பதனால இல்லை இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுவிடும் சொரனைக் கெட்ட தனத்தினாலா இவர்கள் எல்லாம் நம்மிடம் விளையாடிப் பார்க்கின்றனர். தமிழுக்கு போராடி தலையிந்த எத்தனையோ தமிழ்ச் சகோதர்கள் நம்மிடமும் உண்டு என்பதை இந்த குள்ள நரிகளுக்கு தெரிவதில்லை போலும். மானம் காத்திட எதிரியின் வேலை மார்பில் ஏந்தி மாய்ந்தவர் கோடி நம்மினத்தில்.


தமிழர்களிடம் ஒரு கெட்ட குணம் உணச்சிக்கு இடம் கொடுத்து அறிவை மழுங்க செய்வோம்। உணர்சியோடு அறிவும் இனைந்து காலவெள்ளத்தையும் கடந்து தமிழ் மொழியையும் தமிழ் இலக்கியத்தையும் காப்பொம். உணர்ச்சி பெருக்கால் இன்று கழுதையை போன்று கத்திவிட்டு நாளை மூலையில் சுருண்டு படுப்பது முறை அன்று, தமிழ் என்ற அந்த உயிர் உணர்ச்சிக்கு என்றுமே ஜீவ நாதமாய் ஓங்கார சத்தமாய் நமது உள்ளத்தில் ஒலித்துக் கொண்டிருக்கவேண்டும்.


இனிய தமிழை இனைந்து காப்போம்

உயிர்த் தமிழை உணர்ந்து காப்பொம்
இதோ எனது கவிதை வரிகள் படித்துதான் பாருங்களேன்........

சோம்பல்முறித்தது போதும்மடா தமிழா ! உன்
சேதி என்ன வேன்று கூறு...
சாதிவெறி போதும்மடா - தமிழ்ச்
சாதி நீ என்று கூறு.....
கூடிச் சேர்ந்திட வேண்டும் - தமிழர்
கூற்றவன் கூட தமிழைப் பழித்தால்
கூடி உதைத்து பந்தாடிட வேண்டும்மடா.....


@மனோகரன் கிருட்ணன்.

Tuesday, December 1, 2009

தமிழா!


தமிழா !
நீ உறங்கும் போது
உன் விழிகளை
பிடுங்கப்பார்கின்றனர்...

நீ
ஊமையாய் வாழும் போது
உன் மொழியை
புதைக்கப் பார்க்கின்றனர்

தமிழா !
நீ நடக்க மறுக்கும் போது
உன் கால்களை
உடைக்க பார்க்கின்றனர்

நான்கு தலைமுறை
கண்ட நீயே
நடுத்தெருவில்........

உன்
தமிழையா
இவர்கள் காக்கப் போகின்றார்கள்?

மாறப்போவது இவர்கள் இல்லை
மாறவேண்டியவன் நீ தான்,,,,,,,,,



Sunday, November 29, 2009

பால்+உணர்வு


தகப்பன்
இட்ட கழிவு
தாய்
ஏற்ற கழிவு
தன் பங்குக்கு
தானும் இட்ட கழிவு
புனிதம் என்னும்
புது பிறவி எடுத்தது.

தன் கழிவை
பாலாய் ஊட்டி
தன் முற்பிறவி
கழிவையும்
தன் உறவாய் விட்டு

உருவமும் உணர்வும்
தன் கழிவாய் ஈந்து
உயிர் என்னும்
சடப் பொருளை
கழிவாய் தந்து விட்டீரோ.....

மாறாத பதிவை
மோகம் என்னும் சேற்றில்
புதைத்துவிட்டு
செந்தாமரை
பிறக்கவில்லை என்றால்
என்ன நியாயம்?

குடி கோபம் வீரோதம்
காமம் கயமை
இவைகளை
சுக்கில சுரோணிதத்தில்
சேர்த்து வைத்து
கூடி சேர்ந்தால்
பிறக்கும் பதிவு
மனி+இதன் (மனிதன்)
மனி+இதம்
மனிதம் ஆகுமா?

மாறவேண்டியது
பிள்ளைகள் அல்லவே
தாயும் தந்தையும் தான்.....



Thursday, November 26, 2009

அனுபவம்

வைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை।

இரண்டு முன்று நாட்களாக எனது அலுவலக கணிணீ வழியாக சுப.ந்ற்குணம் ஐயா அவர்களுக்கு அவர்களுக்கு எனது மறுமொழியை அனுப்பிக்கொண்டிருந்தேன், எதோ ஒரு காரண்த்தால் அனுப்பமுடியாமல் இருந்தது। ஆனால் மற்றவர்களுடைய் பதிவுகளுக்கு என்னால் மறு மொழி இடமுடிந்தது।அதையே என் வீட்டுக் கணினீயில் இருந்து சில கருத்துக்களை அனுப்பினேன்।ஏற்றுக் கொண்டது।அலுவலகத்தில் இருந்த்து அந்த சில கருத்துக்களை அனுப்பினேன் முடியவில்லை।எனக்கு புரிந்து விட்டது ।யாரோ அனுப்பிய வைரசின் தாக்கம் என்று,

தற்ச்செயலாக என்கண்ணில் பட்டது இந்த அகப்பக்கம்.....சரி முயன்று பார்ப்போமே என்று நினைத்து வின்மணி என்ற இந்த செயலியை எனது கணிணீயில் ஒடாவிட்டேன்। மறு படியும் வந்து எற்கனவே அனுப்பிய் முடியாமல் போன் பின்னுடத்தை மறுபடியும் அனுப்பினேன் என்ன அற்புதம் எனது கருத்து சுப நற்குணம் ஐயா அவர்களின் வலைப்பதிவுக்கு சென்று சேர்ந்தன। எனது உண்மையான அனுபவம்।

இதோ அந்த வலைப்பக்கம்......நீங்களும் சென்று உலா வாருங்கள்....
link;http://www.winmani.com/

ஆச்சர்யமாக இருக்கிறது, வின்மணி வைரஸ் நீக்க சேவைக்கு கிடைத்து வரும் வரவேற்பை பார்க்கும் போது. இதனை உருவாக்கியவர் கேட்டுக்கொன்டதன் பேரில் அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் ஒரு அறிமுகமாகவே இந்த சேவை பற்றி எழுதியிருந்தேன்.
இந்த பதிவை படித்துவிட்டு பல வாசகர்கள் வின்ம்ணி வைரஸ் சேவையை பயன்படுத்திவிட்டு அது மிகச்ச்சிறப்பாக இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்। அவர்களின் உற்சாகமான பின்னூட்டம் மூலமே வைரஸ் நீக்க சேவை மகத்தானதாக இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு சிலர் இதன் முழு வடிவத்தை கேட்டுள்ளனர். இன்னும் சிலர் இது லேப்டாப்பில் சிறப்பாக செயல்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

சந்தையில் வைரஸ் நீக்க மென்பொருள் பல இருக்கின்றன். என்னினும் எதையும் முழுமையானது என சொல்ல முடியாது.அப்ப‌டியிருக்க‌ ஒரு த‌மிழ‌ரால் உருவாக்க‌ப்ப‌ட்ட வைர‌ஸ் நீக்க‌ மென்பொருள் ப‌ன்னாட்டு நிறுவன‌ தாயாரிப்புக‌ளை மிஞ்ச‌க்கூடிய‌தாக‌ இருப்ப‌து ம‌கிழ்ச்சியை த‌ருகிற‌து.
இந்த‌ மென்பொருளின் பின்னே உள்ள‌ நாக‌ம‌ணி என்ப‌வ‌ர் த‌ன்னைப்ப‌ற்றி அட‌க்கத்தோடு குறிப்பிட்டுள்ள‌தை இங்கே த‌ருகிறேன்।–

”இன்று தான் அனைத்து பின்னோட்டங்களையும் பார்த்தேன். முதன் முதலில் இந்த
தமிழனுக்கு மதிப்பளித்து ஒரு பதிவு தந்தீர்கள், என் நோக்கம் அனைவருக்கும் இலவசமாக இது கிடைக்கவேண்டும் என்பது தான்। இந்த வைரஸ் ரீமுவர் பற்றி விரிவாக கேட்டு இருந்திர்கள் சொல்கிறேன்॥என் பல வருட கனவு ஒரு முழுமையான ஆண்டிவைரஸ் கொடுக்க வேண்டும் என்பது நாம் கொடுக்கும்
ஆண்டிவைரஸ் பத்தோடு பதினோன்றாக இருந்து விடக்கூடாது என்ற எண்ணம். பல முன்னனி
ஆண்டிவைரஸ்களால் நீக்க முடியாத வைரஸை மட்டும் கவனத்தில் கொண்டு அதை எப்படி நீக்கலாம் என்று
யோசித்து உருவாக்கப்பட்டுள்ளது। வைரஸின் மூலம் எங்கு என்பதை கண்டு அதை முழுமையாக நீக்கும்.கம்யூட்டருக்கு பாதிப்பை கொடுக்கும் வைரஸை மட்டும் தான் நீக்கும். அது மட்டும் இல்லாமல் கம்ப்யூட்ட்ரின்வேகத்துக்கு தடையாக இருக்கும் மால்வேர் என்று சொல்லக்கூடிய Script -ஐயும் நீக்கும். பல ஆண்டிவைரஸ்-கள்வைரஸ் வந்த பின் செயலாற்றுவதில்லை ஆனால் அப்படிப்பட்ட வைரஸையும் நீக்கும்.

என்னைப்பற்றி:நான் ஒரு Computer Engineer சொந்த ஊர் திருச்செந்தூர் அருகில் உள்ள குலசேகரன்பட்டிணம் , சென்னையில் ஒரு
பிரபலமான கம்பெனியில் Technical Head ஆக வேலைக்கு சேர்ந்து ஒரே மாதத்தில் Project manager ஆக
பதவிஉயர்வு பெற்றேன். ஆனால் அங்கு இருக்கும் போலி ஆங்கில வாழ்க்கை என்க்கு பிடிக்காததால் பதவியை
விட்டு இன்று சொந்த ஊரில் உள்ளேன். எனக்கு புதுமையாக எதாவது செய்து கொண்டிருக்க வேண்டும் என்ற
பேராசை. ஆன்மிகத்தில் எனக்கு அளவு கடந்த ஈடுபாடு உண்டு. உங்கள் பதிவில் என் பெயர் இட்டு இருந்தீர்கள்
தயவு செய்து இனி வேண்டாம். புகழ் என்ற ஒன்று நம்மை பிடிக்காத வரையில் நாம் மனிதராக இருப்போம்
பிடித்துவிட்டால் நாம் மிருகமாக மாறிவிடுவோம் அதனால் தயவு செய்து வேண்டாம். நாம் கொடுக்கும் சேவை
மக்களுக்கு சென்றால் அதை விட வேறு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும்”.–]
‍‍‍‍‍‍‍ஒரு நீண்ட பேட்டிக்கான உத்தேசத்தோடு நான் விவரங்களை கேட்டிருந்த போதும் தன்னைபற்றி மிக சுருக்கமாக குறிப்பிட்டு என மென்பொருள் அதிகமானோரை சென்றடைந்தாலே போதும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.அவ‌ருக்கு ந‌ம் வாழ்த்துக்க‌ள்.
அவ‌ர் மேலும் ப‌ல‌ மென்பொருள் முயற்ச்சிக‌ளில் ஈடுப‌ட்டிருப்ப‌தாக‌ அறிகிறேன்।அவ‌ர் அனும‌தியோடு விரைவில் அது ப‌ற்றியும் விரிவாக‌ எழுதுகிறேன்.

வாச‌க்ர்க‌ளுக்கு ஒரு வேண்டுகோள். வின்ம‌ணி சேவையை ப‌ய‌ன்ப‌டுத்தி பாருங்க‌ள். ந‌ன்றாக‌ இருப்ப‌தாக‌ உண‌ர்ந்தால் த‌ய‌வு செய்து ந‌ண்ப‌ர்க‌ளுக்கு ப‌ரிந்துரை செய்யுங்க‌ள்.
( பார்க்க‌ வைர‌ஸ் நீக்க‌ சேவை பற்றிய என் முந்திய‌ ப‌திவு)।

நன்றி......ஐயா உங்கள் பதிவுக்கு
link;http://cybersimman.wordpress.com/2009/11/17/virus-2/

Wednesday, November 25, 2009

காயகற்பப் பயிற்சி - சித்தர்கள Kayakapa payirchi - siddharkal


காயகற்பப் பயிற்சி - சித்தர்கள Kayakapa payirchi - siddharkal


பிற்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் உயிரைப் பற்றியும், உடலைப் பற்றியும், இரண்டுக்குமிடையே உள்ள உறவு பற்றியும் தெரிந்து கொண்டார்கள்। அதனால் மனிதன் நோயில்லாமல் வாழலாம்; துன்பம் இல்லாது வாழலாம்; அமைதியாக நட்புரிமையோடு அறிவுத் திறமையோடு வாழலாம்; இன்னும் மரணமே இல்லாமலும் வாழலாம் என்பதையும் தெரிந்து கொண்டார்கள்। அதுமட்டுமல்ல। விரும்பியவர்களுக்கு அதற்கான பயிற்சிகளைக் கற்பித்து வந்தார்கள்।

வித்துவை உடலில் சுவற விட்டு, உடல் நலம் காத்து, மன வளம் காத்து, இளமை காத்து, எப்போதும் முதுமை இல்லாது இருக்கும் முறை ஒன்றையும்। இரண்டாவதாக இரசவாதம் மூலமாக முப்பு என்ற முறையையும் கண்டு பிடித்தார்கள். இரசவாத முறை Philosopher Stone என்று மேல் நாட்டில் அனுபவத்திற்கு வந்தது இதை உண்டு விட்டால், முறையாக உடலை விட்டு உயிர் பிரியாது உடலை விட்டு உயிர் பிரிய வேண்டும் என்றால், உடலை விட்டு வித்து வெளியேற வேண்டும். வித்து உடையாமல்; உயிர் பிரியாமல் காத்துக் கொள்வதுதான் முப்பு என்ற மருந்து. அதைச் சாப்பிட்ட பிறகு ஒரு சிக்கல் எல்லாச் சித்தர்களுக்கும் வந்தது. உலகில் 200 வருடம் 300 வருடம் 500 வருடம் கூட வாழ்ந்து விட்டார்கள். எல்லாம் அனுபவித்தாகிவிட்டது. உலகை விட்டுப் போக வேண்டும் என்று நினைக்கிறார்கள் உயிர் போகவில்லை.

உயிரினங்களில் சில இயற்கையாகவே லம்பிகா யோகம் என்பதை செய்து வருகின்றன। பாம்பு, தவளை, உடும்பு போன்ற சில உயிரினங்கள் நாவை மடக்கி மேலே வைத்து அடக்கிக் கொள்ளும்। அந்த மாதிரி நிலையில் பத்துப் பதினைந்து நாட்கள் அப்படியே இருக்கும். தேவையில்லாதபோது உயிரை விட்டு விடும். லம்பிகா யோகம் செய்தால் கொஞ்சம் கொஞ்சமாக உடம்பில் உள்ள உணர்வுகளெல்லாம் நின்றுவிடும். ஆனால் உயிர் போகாது. ஆனால் அத்தகைய ஜீவன்கள் உணவு இல்லாதபோது அந்த நிலையை அடைந்தன. உணவு கிடைக்கிற வாசனை வந்தவுடன், தானாக பழைய நிலைக்கு வந்துவிடும்.


மனிதர்களில் சிலர் லம்பிகா யோகத்தைச் செய்து, உயிர் போகாமல் தடுத்துக் கொண்டார்கள்। அதனாலேயும் உடலைவிட்டு உயிர் பிரியாத ஒரு சிக்கல் ஏற்பட்டது. காரணம் மனிதன் லம்பிகா யோகம் செய்து மயக்க நிலையிலிருந்து திரும்பி வராமல தன்னை மறந்து விடுகிறான். உயிர் இருக்கிறது. ஆனால் உணர்வு தெரிவதே இல்லை. உடனே மற்றவர்கள், இவர் இறந்து விட்டார் என்று கருதி அடக்கம் செய்து விடுகிறார்கள்.அதனால் அப்பயிற்சி நமக்குத் வேண்டியது இல்லை. தேவையும் இல்லை. அத்தகைய சிக்கல்கள் வராமலும் அதே சமயம் உடல் நலத்தைக் காத்து, ஆயுளைப் பெருக்கி, வாழும் காலம் வரைக்கும் நோயின்றி வாழ வைக்கக் கூடியதே யாகும்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி।